Thursday, 5 July 2018

மலையேறும் மலைநாடன்


நீலகிரி, குன்னூர் மலைகளின் நடுவில், வாழ்கை மட்டும் இல்லாமல், மலைகள் மீது தீராத காதலும் கொண்டுள்ளதால் மலைநாடன் என்ற பெயர் இவருடன் இணைந்துகொண்டது. எழுத்தாளர்களுக்கு Pen Name என்று எப்படி உள்ளதோ, அதேபோல் இயற்கையாலர்களுக்கு Nature name என்று கூட இதனை சொல்லலாம். இயற்கையாலர்கள் Nature name ஒன்றை வைத்து கொள்ளவேண்டும்.

ஒரு காலைப்பொழுதில்  மலைநாடனை சந்தித்தபொழுது உற்சாகமாக வரவேற்றார். அவரிடம் பேசியதில் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக மலைகள் தொடர்பாக ஒன்றுமே எனக்கு தெரியாது. இப்பொழுது கொஞ்சம் தெரியும் என்று சொல்லுவேன்.
 
மலைநாடனுக்கு, மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளதால், எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு மலைகள் இருந்தால், ஏறிவிடுவதை பழக்கமாகவே கொண்டிருக்கிறார். எங்க ஊர் மலையை நான் ஏறவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்து கொண்டிருந்தபொழுது, பேச்சின் இடையில் சாதாரணமாக சொல்கிறார் உங்கள் ஊர் மலையும் ஏறியுள்ளேன் என்று. இன்னும் நான் ஏறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Saturday, 30 June 2018

ஏ.சண்முகானந்தம்- Wild Life Photographer


வன விலங்குகளை படம் எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும். என்ன வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் முழுநேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் காட்டுயிர் ஒளிப்படக்கலை(Wild Life Photography) பற்றி இந்த துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வனவிலங்குக்கு என்று உயிர் என்ற பத்திரிக்கை நடத்தி வருபவர் திரு.ஏ.சண்முகானந்தம் அவரிடம் வைல்ட் லைப் போட்டோகிராபி பற்றிய நேர்காணலில் அவர் கூறியதாவது.

1990ஆம் ஆண்டு கேமரா பற்றிய ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து திருமண விழாக்களில் படங்கள் எடுத்து தொடங்கிய என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவைகள், பூச்சிகளை படம் எடுக்க தொடங்கினேன். நாளடைவில் திருமண விழாக்களில் இருந்து விலகி வனவிலங்குகளை போட்டோ எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து  விலங்குகள், பறவைகள், பூச்சிக்கள் எடுபதற்க்கு பல்வேறு காடுகளில் பயணம் செல்ல தொடங்கினேன்.

நான் தொடங்கிய தொன்னூறாம் ஆண்டுகளில் இப்போது இருபதுபோல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில்நுட்பம் வரவில்லை. அதனால் பிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன். ஒவ்வொரு படமும் எடுத்து அவற்றை கழுவி பிரிண்ட் செய்து பார்த்தபிறகே அதன் தன்மை தெரியும். சரியாக இல்லையென்றால் மீண்டும் படங்களை எடுக்க முடியாது அதனால் முதல் முறையிலேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்கவேண்டும். அதற்கு என்னுடையை ஒருவருட பயிற்சியும், அதனை தொடர்ந்து புகைப்படகளை வல்லுனர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள் கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.

Saturday, 5 May 2018

உயிர் இதழ்- அறிமுகக் கூட்டம்


உள்ளே நுழைந்த உடன், திரு.சண்முகானந்தம் சார் கைகொடுத்து வரவேற்றார். வலது புறத்தில்  திரு.தியடோர் பாஸ்கரன் சார் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவருக்கு வணக்கம் சொன்னவுடன் எழுந்து நின்று கைகொடுத்து வணக்கம் சொல்லி அமர்ந்தது, ஆச்சரியமாக இருந்தது. அவர் அருகில் அமர சொன்னவுடன் சிறிது நேரம் பொதுவான தலைப்புகளை பேசிவிட்டு அடுத்து இருந்த  அறையில் உயிர் இதழ் அறிமுக கூட்டம் தொடங்கியது.

சண்முகானந்தம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார், இது உயிர் இதழின் முதல் அறிமுகக் கூட்டம். இதுவரை இரண்டு இதழ்கள் வந்துள்ளன. உங்களின் இதழ் பற்றிய கருத்துகள் குறிப்பாக நிறைகளை விட, குறைகள் மேலும் இதழை செழுமைபடுத்தும் என்று கூறி   தியடோர் பாஸ்கரன் சாரை பேச அழைத்தார்.

Thursday, 26 April 2018

புத்தகம் – தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்


பறவைகள் தொடர்பாக புத்தகங்கள் சிறிது சிறிதாக அதிகரித்து வரத்தொடங்கி உள்ளது. அப்படி வந்துள்ள ஒரு புது புத்தகம் “தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்”- ஆசிரியர் ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார். தமிழகதில் உள்ள அணைத்து பறவை காப்பிடங்கள்(சரணாலயம்)  பற்றி மிக விரிவாக தெரிந்துகொள்ள வந்திருக்கும் முதல் புத்தகம் என்று சொல்லலாம்.

Tuesday, 10 April 2018

Azeez உடன் சந்திப்பு


அணிவகுப்பு

காலை ஆறு மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமென்றாலும் வாருங்கள் என்று சொன்னார். இன்று காலை ஏழு மணிக்கு அவர் வீட்டின் முன்பு சென்றபொழுது வெளியே நின்று கொண்டிருந்தார். சிட்டுக் குருவிக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அவற்றுக்கு தேவையான தினையை ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு அருகில் வந்தவரிடம், எவ்வளவு வருடங்களாக இங்கு  சிட்டுக் குருவிகளை பார்த்து வருகிறிர்கள் என்று கேட்டதற்கு பத்து வருடங்களாக என்ற அவரின் பதிலால், நிறைய அனுபவம் அவரிடம் இருக்கும் என்று தோன்றியது.

பட்டினப்பாக்கம், கடற்கரையை ஒட்டிய அடுக்க மாடி(Housing Board) குடியிருப்பில் முதல் மாடியில் இருக்கும் அவர் வீட்டின் வரண்டாவில் ஒரு குருவி கூண்டை வைத்துள்ளார் அங்கு நிறைய சிட்டுக் குருவிகள் வந்து அமர்ந்து தானியங்களை சாப்பிடுவதை பார்த்து கொண்டே பேசினோம். 

இயக்குனர் ஹிட்ச்காக்கின் படமான “THE CROW” படத்தில் எப்படி வீட்டை சுற்றி காகங்கள் இருக்குமோ அதே போல் இவர் வீட்டை சுற்றி சிட்டுக் குருவிகளே. 

Sunday, 1 April 2018

பறவை நோக்குதல்- 14 (Famous Bird watchers)


எவ்வளவு நாள்தான் பறவைகளை பற்றியே பேசி கொண்டிருப்பது. அதனால் இந்த கட்டுரையில் பறவையாலர்களை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

நமக்கு பறவை பார்ப்பது ஒரு வித பொழுதுபோக்கு என்று கற்றுகொடுத்தது ஆங்கிலேயர்களாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே நம் முன்னோர்கள் மிக நுணுக்கமாக பறவையை பார்த்து உள்ளனர் என்பதை முண்டக்கன்னி அம்மன் மேல் சத்தியம் செய்யலாம்.

பார்த்தது மட்டும் அல்லாமால் ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளை பாடல்கள் வழியாக பதிவும் செய்து வைத்து உள்ளார்கள்.  

பள்ளி பாடபுத்தகத்தில் நாம் படித்திருப்போம் ஆனால் நினைவில்இருப்பதில்லை. ஒவ்வொரு பறவைக்கும் வட்டார பெயர் என்று ஒன்று உண்டு. அந்த அந்த பகுதிகளில் செல்லும்பொழுது தெரிந்து கொள்ளாலாம்.

Saturday, 24 March 2018

சிட்டுக் குருவிசிட்டுகுருவி அளவே உள்ள பறவை இனங்கள் நம் நாட்டில் நிறைய உண்டு. ஆனால் சிட்டுக்குருவியை மட்டும் நாம் அதிகம் நேசிக்க காரணம்? அவை நம் வீட்டிற்குள்ளே வந்து நம் உணவுகளை சாபிட்டது, வீட்டின் முற்றத்தில் தன் கூட்டை கட்டியது, அதன் கீச் கீச் குரல் நம் செவியில் கேட்டுகொண்டே இருந்தது. இதனால் சிட்டுக் குருவியை நம் வீட்டின் உறுப்பினராகவே நாம் ஏற்று கொண்டோம் இவையே மிக முக்கிய காரணம் ஆகும். 

ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வேறு எந்த பறவைக்கும் இது போல் ஓர் நாளை சிறப்பு தினமாக கொண்டாடுவதில்லை. இன்று, சிட்டுக்குருவிகள் செல்போன் கதிர்வீச்சால் அழிந்து வருகிறது அதனால் பரவலாக நம் கண் முன் விளையாடிய அந்த பறவைகள் இன்று இல்லை என்று பேசப்படுகிறது அவை உண்மையா? சென்னை போன்ற நகரத்தில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே கடினமாகிவிட்டது ஏன் ? சிட்டு குருவிகள் தினத்தில் என்ன செய்யலாம் ?

Thursday, 1 March 2018

சென்னை நகரத்தில் ஒரு காடு

 


பேருந்து, விமானம், இரயில் இவற்றின் சத்தத்திற்கு நடுவில் ஒரு காடு தன் இயல்பு நிலையில் அதுவும் அமைதியுடன் இருப்பது ஆச்சரியமே. கிண்டி சிறுவர் பூங்கா அனைவரும் அறிந்ததே. ஆனால் அவற்றை ஒட்டி தொடங்கும் காடு பற்றி பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. மான், நரி, இரலை, அலங்கு, எண்ணற்ற உள்ளநாட்டு-வெளிநாட்டு பறவைகள் என்று அனைத்தையும் அதன் வாழ்விடத்தில் பார்ப்பதற்கு ஏற்ற இடன் இந்த சிறு காடு.

Sunday, 18 February 2018

பெரும்பாக்கம்- குளிர்காலத்தின் கடைசி மாதத்தில்சாம்பல் நாரை 
அதிக பறவைகள் பெரும்பாகத்தில் என்ற செய்தி அங்கு செல்லவேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியது. இன்று அரவிந்த், மலைநாடன் மற்றும் அவர் மகன், கிஷோர், அமர், வினோத் குமார், நித்யானந்த் மற்றும் அவர் மாணவர்கள், லோகேஷ் பள்ளி மாணவன் என்று ஒரு குழுவாக காலை ஏழு மணியளவில் ஏரியின் பாதையில் நின்றோம். நீர் போல் ஏரி முழுவதும் பறவைகளால் நிரம்பியுள்ளதால் எங்கு இருந்துவேண்டுமென்றாலும் பார்க்க தொடங்கலாம். அதனால்  நின்ற இடத்தில் இருந்தே மடையானை(Pond Heron) வரவேற்றோம்.