Monday 19 May 2014

Bird Man of India -1



          
இந்தியாவின் பறவை மனிதன் 

                                           - சிதம்பரம் ரவிசந்திரன் 

    

     
 



நம் வாழ்கையின் ஒவ்வொரு நாளும் தொடங்குவது பறவைகளுடைய குரலைக் கேட்டுக்கொண்டுதான் .. நம் சிறு வயதில் நம்முடைய அம்மா காலை உணவை காக்காவைக் காட்டியும் ,இரவு உணவை நிலாவைக் காட்டியும் ஊட்டிய ஒரு காலம் உண்டு .சிட்டுகுருவி சிட்டுகுருவி சேதி தெரியுமா ? என்ற திரைப்பட படலை இன்றைய நடுத்தர வயதுகாரர்கள் தங்கள் இளமைப்பருவத்தில் கேட்காமல் இருக்க முடியாது. தமிழ் இலகியங்களில் சங்க காலம் தொடங்கி அன்னப்பறவையும், கிளியையும் ,புறாவையும் , மயிலையும் தூது விட்டு பாடல்கள் பாடிய பறவைகளோடு இணைந்து ஒரு இயற்கை வாழ்க்கை நமக்குப் படம் பிடிதுக்காட்டப்படுகிறது . 

அவ்வளவு ஏன் ? ஒரு பெண்பால் சங்க கால புலவருக்கு காக்கைப்பாடிணியார் என்று பெயரே இருக்கிறது. மயிலும், அன்னமும், காக்கையும், குருவியும்,குயிலும் ,புறாவும் ,கிளியும் ,கீச்சான் குருவியும் எல்லாம் நம் அன்றாட வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தே நாம் வாழ்ந்து வளர்ந்து வந்திருக்கிறோம் . மகாகவி பாரதியாரும்  ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் .. அந்தச் சிடுக்குருவியைப்போல் ‘ என்றும் , ‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீர் கடலும்,மலையும் எங்கள் கூட்டம் ‘ என்று பாடியுள்ளார் .இப்படி நம் தினசரி வாழ்க்கையுடன் நெருங்கிய பறவைகள் எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்கமாட்டீர்கள் .

ஆம் ரைட் சகோதர்களுக்கு விமானம் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாக அமைந்தது பறவைகள்தான் . நமது முன்னாள் குடியரசுத் தலைவருக்குக்கூட அவருடைய கல்வி நாட்களில் அவருடைய ஆசிரியர் கரும்பலகையில் வரைந்து காட்டிய ஒரு பறவையின் படம்தான் அவரை பிற்காலத்தில் ‘ இந்தியாவின் ஏவுகணைத் துறையின் தந்தை’ என்று உலகமே கண்டு வியக்கும் உயர்ந்த இடத்துக்கு இட்டுச் சென்றது . சிபி மன்னன் ஒரு பறவைக்காக தன் உடலின் சதையை அறுத்துத் தந்தான் என்ற இலக்கிய செய்தியப்போல் பறவைகள் இவர்களுடைய வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டிருகிறது என்று சொன்னால் மிகையாகாது  .

இதெல்லாம் சரி ஆனால் பறவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாழ்கையின் ஆரம்ப நாட்களில் இருந்தே வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் , ஒரு நாள் ஒரு சிறிய பறவை தன்னிடம் வந்து தஞ்சம் புகுந்து அவருடைய வாழ்கையின் போக்கையே மாற்ற ,அதன் பின் பறவைகளைக் கொன்று வேட்டையாடி வந்த அவர் அந்தப் பறவை இனத்திற்காகவே தன் சொந்த வாழ்வை சமர்ப்பித்து கொண்டார். உலகில் பறவைகள் என்ற பேச்செடுக்கும்போது எல்லாம் இந்தியாவின் பெயரை தூக்கி நிறுத்தி, மேல் நாட்டுக்காரர்களையும் தலை நிமர்ந்து , வியந்து பார்க்கவைத்தார் அவர் .. பெரிய பெரிய  படிப்புகளையெல்லாம் பெரிய பெரிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலோ, ஹார்வேர்டு பல்கலைகழகத்திலோ இதுபோல உலகப் புகழ் பெற்ற எந்த பல்கலைகழகத்திலும் சென்று படிக்காத அவர் பறவைகளைப் பற்றிய அறிவியல் துறையில் உலகம் போற்றும் மேதாவிகளாகத் திகழ்ந்தார் .

‘நேரமாகிவிட்டது’ என்று கோழி கூவி அறிவிக்கும்போது , காகங்களும் , குருவிகளும் அதற்கு பக்க வாத்தியம் வாசிக்க ஆரம்பிக்கும் . உலகத்தில் உள்ள உயிரினங்களில் வெப்ப ரத்த வகையைச் சேர்ந்த பிராணிகள்தான் பறவைகள். இறகுகளால் மூடப்பட்ட உடலமைப்பைக் கொண்ட ,முட்டையிட்டு ஆடை காத்து குஞ்சு பொரிக்கும் வகையைச் சேர்ந்த , இலேசான உடல் அமைப்பையும் ,விதம் விதமான குரல் எழுப்பும் திறனையும் பெற்ற பறவைகளுடைய இடம் விலங்குகளுலகதில் அவைகளை போலவே வித்தியாசமானது ஆகும் .

உலகத்தில் இருபத்திலேய மிகச் சிறிய பறவை மனிதனுடைய பெருவிரல் அளவே உள்ள வானம்பாடி என்றால் , மிக பெரியது நெருப்புகோழி ஆகும் .ஒரு பெண் குதிரையின் அளவுக்கு பெரியது நெருப்புகோழி ஆகும் .ஆயிரக்கனக்கான கிலோமீட்டர் தூரம் பறக்கும் பறவைகள் வாழும் பூமியில் தரையில் இருந்து ஒரு சென்டிமீட்டர் தூரம் கூட மேலெழும்பி பறக்க முடியாத பென்குவின் பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றன .அற்புதமாக ஒரு பொறியியல் வல்லுநரைப்போல் கனகச்சிதமாகக் கூடு கட்டும் தூக்கணாங்குருவிகளும் உண்டு .அடுத்தவருடைய கூட்டில், தான் இட்ட முட்டைகளை போட்டுவிட்டுப் போகும் குயில்களும் உண்டு. பறவைகள் உலகத்தில் எல்லா விதிகளும் உண்டு. பெண் பறவைகளுக்குத் துணையாக இட்ட முட்டைகளை தாங்களும் அடை காக்கும் ஆண் பறவைகள் உள்ள அவர்களின் உலகில்தான் எந்தவித முன்னேற்பாடும், தயாரிப்பும் இல்லாமல் தரையில் முட்டையிடும் பறவைகளும் இருக்கிறது .

இறைச்சியை மட்டும் உண்டு ராஜா போல் வாழும் கழுகு ஒரு பக்கம், கிடைப்பதை எல்லாம் தின்னும் காகம் ஒரு பக்கம். ஒரு தோட்டத்தில் மட்டும் தங்கள் வாழ்வு முழுவதையும் வாழ்ந்து கழிக்கும் பறவைகள் இருப்பதுபோல் , தவறாமல் எப்போதும் வலசைபோகும் பறவைகளும் இருக்கின்றன .சுற்றி சுற்றி வரும் கோழிகள், கட்டிய கூட்டை எளிதில் கைவிடாத கிளிகள் , பருந்துகள் என்று இந்தப் பறவைகளின் உலகம் பறந்து விரிந்தது .

வியாழக்கிழமை ஆனவுடன் பெருமாள் கோயில் வாசலுக்குச் சென்று அங்கு மாலை சரியாக ஐந்து மணிக்கு வானத்தில் வட்டமடிக்கும் கருடனை பார்த்து கை எடுத்து வணங்கும் பண்பாடுடைய நம் சமுதாயத்தில் பறவைகள் என்றும் வாழ்வோடு மட்டுமல்ல பாரம்பரியத்துடன், பழகவழக்கங்ளுடன் நெருங்கிய உறவு உள்ளது. நம் தெய்வங்களுக்குக்கூட பறவைகள் ஒரு அடையாளச் சின்னமாக உள்ளது என்பது எந்த வியப்பையும் தருவதில்லை காமாட்சிக்கும், மீனாட்சிக்கும், கையில் கிளி , முருகனுக்கு சேவல் , விஷ்ணுவுக்கு கருடன் என்று புராணகாலத்தில் இருந்தே பறவைகள் நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருகிறது . 

இதிகாசங்களிலும் கூட பறவைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன . ராமாயணத்தில் ஜடாயு முதல், அருணகிரிநாதர் கூடு  விட்டு கூடு பாயும் வித்தையில் தானே கிளியாக ஆனார் என்பதால்தான் இன்றும் திருவண்ணமலையில் அருனாசலேஸவர் கோயிலில் கிளிக் கோபுரம் என்று கோபுரமே உள்ளது . இந்த பண்பாட்டு நம்பிக்கைகளுடைய அடிப்படையில்தான் இன்றும் பெரும்பாலான வீடுகளில் காகத்திற்கு காலையில் சோறு இட்டவுடன் நாம் உணவு உட்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது . ‘ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ‘ உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா ?’, ‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையும் காத்திருக்குமாம் கொக்கு'. எச்சில் கையாலும் காக்கா விரட்டமாட்டான் ...’. ‘கூரை மேல் ஏறி நின்று கூவினாலும் கோழி சேவலாகுமா ?’ போன்ற எத்தனை எத்தனை பழமொழிகள்! இப்படி இலக்கியத்தோடும்,அன்றாட வாழ்வோடும் நம்மோடும் சொந்தக்காரர்களாக வாழும் பறவைகளின் நட்பும் தவிர்க்கமுடியாது .

இவ்வாறு பறவைகள் உலகம் அவைகள் அளந்து பறந்து திரியும் வானம் போல பரந்தது.

பறவைகளைப் பற்றி பேசும்போது. ஒரு மனிதரை நம்மால் நினைக்காமல் இருக்க முடியாது . யார் அவர் ?

                                           -பறவை வரும்
       

No comments:

Post a Comment