Saturday, 28 March 2015

நாம் வாழும் நாவலன் தீவு


இயற்கையை இறைவனோடு இணைத்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.  தங்களை சுற்றியிருந்த ஒவ்வொரு இயர்கை தந்த கொடையையும் இறையருளின் அம்சமாக கருதியவர்கள் அவர்கள்.  அதனால்தான் வேம்பையும், ஆலையும், அரசையும், நாவலையும் தெய்வமாக போற்ரி வணங்கினார்கள்.  இதேபோல புல்லையும்கூட இறையருள் கொண்டதாக அதன் மருத்துவகுணங்களை நன்கறிந்துகொண்டு புனித சடங்குகளில் அருகம்புல்லை உபயோகித்ததில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.  இவ்வகையில் சிறப்புக்குரிய ஒன்றுதான் நாவஒல்மரமும், அதன் பழமும்..                

சங்ககால புலவரான ஒவையாருக்கு முருகப்பெருமான் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டு அவரின் அறியாமையை உணரவைத்தார்.  கற்றது கை மண் அளவு என்பதையும், கல்லாதது கடல் அளவு என்பதையும் இதன் மூலம் முருகர் உணர்த்தினார்.  ஆற்றங்கரைகளில் வளர்ந்துநிற்கும் நாவல் மரங்களின் கீழ் காற்றில் விழும் நாவல் பழங்களை பொறுக்கி மண்ணை கூட ஊதாமல் அப்படியே சாப்பிட்ட இனிய அனுபவங்களை கொண்டவர்கள் நம் முன்னோர்கள்.  இப்படிப்பட்ட நாவல் உண்மையில் நம் நாட்டுக்கே உரித்தானதாகும். 

    முற்கால புவி அமைப்பில் இருந்த இந்தியா ஒரு தனித்தீவுப்பகுதியாக விளங்கிவந்திருக்கிறது.  இங்கு நாவல்மரங்கள் அதிகமாக வளர்ந்திருந்ததால் அக்காலத்தில் நம் நாடு ‘நாவலன் தீவு’ என்றே அழைக்கப்பட்டுவந்தது.  இதன் சிறப்புகளை வைத்துதான் இந்த மரம் பல திருத்தலங்களிலும் திருத்தலமரமாக உள்ளது.  இத்தகைய திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க ஒரு திருத்தலம்தான் பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருவானைக்கா ஜம்புகேசுவரர் ஆலயம் ஆகும்.  இங்குள்ள இறைவனின் திருநாமமே நாவல்மரத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது.  இதில் இருந்தே இந்த மரத்தின் அருமைப்பெருமைகளை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும்.

    வடமொழி மந்திரங்களில் ஒன்றில் ‘ஜம்பு தீவு’ என்ற பெயரில் நம் பாரதநாடு குறிக்கப்படுகிறது.  ‘ ஜம்பு’ என்பது நாவல் மரத்தை குறைக்கும் சொல் ஆகும்.  ராமபிரான் வனவாசம் இருந்த 14 ஆண்டுகளும் கானகத்தில் இந்த பழத்தை உண்டதாக கதைகள் உள்ளன. நாவல் பழத்தை ‘கடவுள் பழமாக’ பாரம்பரியமாக நம் நாட்டவர்கள் கருதிவந்துள்ளனர்.  கிருஷ்ணர் நாவல் பழத்தின் நிறத்தை பெற்ரிருப்பதாக கருதப்படுகிறது.  குஜராத் மற்றும் மகாராட்டிரா மாநிலங்களில் நாவல் மரத்தின் இலைகள் மாவிலை போல மங்களகரமாக கருதப்படுகிறது.  அதனால் அங்கு நடைபெறும் திருமணவிழாக்களில் அலங்காஅரத்துக்காக இந்த இலைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.  மராத்தியில் நாவல் பழம் பற்றி புகழ்பெற்ற பாடல் ஒன்றும் உள்ளது.

இலக்கியங்களில் நாவல் பழங்கள் அழகான விழிகளுக்கு உதாரணமாக கூறப்பட்டுள்ளது.  தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் நாவல் பழம் பற்றிய செய்திகள் உள்லன.  மகாபாரதத்தில் கிருஷ்ணருடைய நிறமும், நாவல் பழத்தின் நிறமும் ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளது.  கிருஷ்ணபகவான் அவதரித்த ‘ கிருஷ்ணர் ஜெயந்தி’ விழாவின்போது பழங்களை நிவேதனமாக நாம் வைக்கும்போது அவற்றில் நாவல்பழத்துக்கு முக்கியைடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய பெருமைகளைக் கொண்ட நாவல் மரமும், அதன் பழமும் அதிசயமான பல்வேறு மருத்துவகுணங்களையும் கொண்டதாகும்.  இதன் பயனை கருதியே நம் முன்னோர் இதை போற்ரி பாதுகாத்துவந்தனர்.  இந்தியாவில் இருந்தே இந்த மரம் ஆசியாவின் பல நாடுகளுக்கும், பின் அங்கிருந்து பல உலகநாடுகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

அளவில்லாத மருத்துவகுணங்களை கொண்டது இந்த அற்புதமரம்.  நாவல் பழங்களின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் பொடி இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கெ உதவுகிறது.  இதன் பட்டை இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.  வைட்டமின் ‘ ஏ’ மற்றும் வைட்டமின் ‘சி’ ஆகியவைகளும் இதன் பழத்தில் உள்ளது.

    ஆயுர்வேதம், யுனானி மற்றும் சீன மருத்துவத்தில் நாவல் பழம் செரிமானக்கோளாறுகளை சரிசெய்வதற்கான அருமருந்தாக பயன்படுகிறது.  நூறாண்டுகள் வாழும் இந்த மரம் முப்பது மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமைமாறா மரம் ஆகும்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை தாலுகாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் நாவல்காடு என்பது ஆகும்.

  ஒரு காலத்தில் நாவல்மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த ஊருக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  நாவல் என்ற பெயருடன் தொடர்புடைய பல ஊர் பெயர்களும் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இதன் இலைகள், விதைகள் மற்ரும் பழம் ஆகிய அணைத்துமே சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாகும்.  உடல் வெப்பத்தை குறைப்பதற்கும், கண்N எரிச்சல், கண்ணில் நீர் வடிவது, அல்சர், கர்ப்பபை கோளாறுகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு நாவல் ஒரு சிறந்த மருத்துவபொருளாகும்.

 நாவல் பழத்தை தின்றால் நா வறண்டு நீர் வேட்கை ஏற்படும்.  இவ்வாறு நாவின் தன்மையை மாற்ருவதால் நா+ல்_ நாவல் என்று இந்த மரத்துக்கு பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  துவர்ப்புசுவை உள்ள ஒருசில பழங்களில் நாவல் பழம் முக்கியமானதாகும்.  அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகியவை நாவல் பழத்தின் வேறு சில பெயர்கள் ஆகும்.  நாவல் பழங்களில் கருநாவல், கொடிநாவல், சம்பு நாவல் என்று வெவ்வேறுவகைகள் உள்ளன. 

   சுண்ணாம்பு சத்தும், இரும்புசத்தும் இந்த பழத்தில் உள்ளது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் நம் பாரம்பரிய உண்ணவுமுறையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு ஆகிய அறுசுவைகளில் துவர்ப்பு சுவையை குறிப்பதால் கிடைக்கும்காலங்களில் இந்த பழத்தை நம் முன்னோர்கள் சிறப்பாக பயன்படுத்திவந்துள்ளனர். 

   இந்த மரம் மற்றும் பழத்தின் மருத்துவகுணங்களை அறிந்ததனால்தான் ஆன்றோர்கள் இந்த கனியை காட்டி ஒªவையாருக்கு முருகக்கடவுள் ஞானத்தை போதித்ததாக கூறுகின்றனர்.  இதன் அருமையை அறிந்துதான் இந்த மரத்தை திருத்தலமரமாக தெய்வம் குடியிருக்கும் கோயில்களில் கொலுவீற்றிருக்க செய்துள்ளனர் நம்m மூதாதையர்கள்.  நாம் வாழும் நாட்டின் பெயரே நாவல் மரத்தை பொருளாகக் கொண்டு அழைக்கப்படும் அளவுக்கு பெருமை உள்ள இந்த மரத்தை நாமும் போற்றி பாதுகாத்து பயன்பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக..  இயற்கையின் வழியில் இறைவனை காண்போம்..  அதன் மூலம் இறைவனின் அருளை என்றும் பெறுவோம்..

                                                                                                         - சிதம்பரம் ரவிசந்திரன்Thursday, 19 March 2015

அரளியை அறிவோம்இந்தியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு தாவரம் அரளி ஆகும். மூன்று தேவியர்களில் பார்வதியின் அம்சமாக விளங்கும் சக்திக்கு அரளிப்பூ உகந்தது ஆகும். பெரும்பாலான திருக்கோயில் நந்தவனங்களில் வளர்க்கப்படும் தாவரங்களில் அரளி கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.  தெய்வங்களுக்கு சார்த்தப்படும் பூமாலைகளில் அரளி முக்கிய இடம் பெறுகிறது. பூஜைக்குரிய மலராகக் கருதப்படும் அரளி அழகுக்காகவும் வீட்டுத்தோட்டங்களிலும், ஆற்றோரங்களிலும் வளர்க்கப்படுகிறது.  ஆனால் இது ஒரு நஞ்சுள்ள செடியாகும். இது ஆங்கிலத்தில் ஔலியாண்டர் என்றும், தாவரவியலில் நீரியம் ஔலியாண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இது அப்போசயனேசி குடும்பத்தைச் சேர்ந்த இருவித்திலை தாவரம் ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா, மொரிடேனியா, மொராக்கோ, போர்ச்சுகல் அல்லது மத்திய தரைக் கடல் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது வளமற்ற வறண்ட நிலத்திலும் செழித்து வளரக்கூடியது ஆகும். இதன் சிறப்பு இது ஹிரோஷிமா நகரின் அதிகாரப்பூர்வமான சின்னமாக உள்ளது. 1945ல் ஹிரோஷிமா அமெரிக்க அணுகுண்டு தாக்குதலால் முற்றிலுமாக அழிந்தபோது முதல்முதலாக வளர்ந்து, பூத்தது அரளியே ஆகும். 
 
இந்த தாவரத்தின் வேர், வேர்ப்பட்டை, தண்டுப்பட்டை, பூ, விதை, இலை என்று பல பாகங்களும் விஷத்தன்மை உடையது. இதில் இருக்கும் நஞ்சு பச்சையாக மட்டும் இல்லாமல் இந்த பாகங்களை உலர்த்தி காயவைத்த பிறகும் நீங்குவது இல்லை. வேர், வேர்ப்பட்டை மற்றும் விதைகளில் நீரியோடெரின் , கெராபின் என்கிற விஷத்தன்மையுடைய கக்லைகோசைடுகள் எனப்படும் வேதிப்பொருள்கள் உள்ளன.  இலைகளில் இருந்து நீரியோடின், ஔலியாண்டிரின், ஔலியாண்டிரிஜெனின் ஆகிய கிலைகோசைடுகள் பெறப்படுகின்றன. இந்த செடியின் பகுதிகளின் சாறை உட்கொண்டால் குடல், இரைப்பை, இதயம் ஆகிய உடல் பகுதிகளை பாதிக்கிறது. விழுங்க முடியாமல் போவது, உமிழ்நீர் அதிகமாவது, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புக்கான அறிகுறிகள் முதலில் ஏற்படும். பிறகு இதயம் பாதிக்கப்படும். நாடிநரம்புகள் பாதிக்கப்படும். சுவாசிப்பது கடினமாகும். இதனால் உடலின் சில பாகங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் விறைத்து போய்விடும். அடுத்த நிலையில் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஆழ்ந்த மயக்கநிலை ஏற்பட்டு உயிரிழப்பும் நேரலாம்.

உடல் எரிச்சல், கண் எரிச்சல், ஒவ்வாமை போன்ற அறிகுறிகளும் ஏற்படும். 16கிராம் வேர் அல்லது வேர்ப்பட்டை உயிரை போக்கும் வலிமை கொண்டதாகும். கவனிக்கப்படாவிட்டால் 24மணிநேரத்தில் இருந்து 36மணிநேரத்துக்குள் உயிரிழப்பு நேரிடும். ஔலியாண்டிரின், ஔலியாண்ட்டிரிஜெனின், கெராபின் போன்ற நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருள்கள் கார்டியாக் க்லைகோசைடுகள் என்ற இதயத்தைத் தாக்கும் நச்சுப்பொருள்கள் ஆகும். இதனால் இவை உடலின் சில முக்கியமான செயல்பாடுகளுக்கு கேடு விளைவிக்கின்றன. இதில் முக்கியமானது சோடியம் பொட்டாசியம் ஏடிபிஸ (ATPS) என்ற நொதி ஆகியவற்றை செயல்படவிடாமல் தடுப்பது ஆகும். இந்த ஏடிபிஸ நொதி சோடியம் பொட்டாசியம் ஆகியவை செல்களின் உள்புற வெளிப்புற பரிமாற்றத்திற்கு உதவும் நொதி ஆகும். நரம்புகளில் மின்னியக்கசைகைகள் (electric signals) இந்த சோடியம் பொட்டாசியம் பரிமாற்றம் நிகழ்ந்தால் தான் நடக்கும். அரளியின் இதய நச்சுப்பொருள்களான க்லைகோசைடுகள் இந்த ஏ.டி.பிஸ. நொதியில் இருக்கும் சில அமினோமில புரத மூலக்கூறுகளுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டு சோடியம் பொட்டாசியம் பரிமாற்ற நிகழ்வை செயல்பட முடியாமல் தடுக்கின்றன. சோடியம் மற்ற செல் புரதங்கள் இடம்பெயரக் காரணமாக இருக்கிறது.  

சோடியம் கால்சியம் பரிவர்த்தனையில் கார்டியோமையோசைட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  தசை சுருங்குவதற்கு செல்லின் வெளிப்புற திரவத்தில் இருக்கும் கால்சியம் உள்ளே பாய்வது மிக முக்கியமானதாகும். சுருங்குதல் முடிந்தவுடன் கால்சியம் இயல்பாகவே வெளியேற்றப்பட்டு சோடியத்துடன் பரிமாற்றம் நடக்கும். ஆனால் சோடியத்தில் உள்ள க்ரேடியண்ட் குறையும்போது கால்சியம் கார்டியோமையோசைட்டில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதனால் தசைநார்கள் விரிவடைய முடியாமல் இதயத்துடிப்பு சிரமப்பட்டு ஆக்சிஜனை முக்கியத் திசுக்களுக்கு அனுப்ப முடியாமல் போய்விடுகிறது. 

இத்தகைய இதய பாதிப்பை அரளியின் நச்சுத்தன்மையுடைய பொருள்கள் ஏற்படுத்தி உயிரிழப்பையே ஏற்படுத்திவிடுகிறது. உடனே மருத்துவ உதவி செய்ய வேண்டும். முதலுதவியாக நோயாளியை எப்படியாவது வாந்தி எடுக்கச் செய்தால் விஷம் உடலில் சேர்வதை ஔரளவு தடுக்கலாம்.  அப்படியும் உணவுப்பாதையில் மிஞ்சும் நஞ்சை கரித்தூளை உட்கொள்ளச் செய்வதன் மூலம் அது மீதம் இருக்கும் விஷத்தை உறிஞ்சி எடுத்துவிடும். டிகாக்சின் இம்யூன் பேப் என்ற சிகிச்சை முறையே அரளியின் நஞ்சை குணப்படுத்த சிறந்தவழி ஆகும். 

                                              -சிதம்பரம் ரவிச்சந்திரன்

                                                                                  


                                     
Sunday, 15 March 2015

சுற்றுச்சூழல் பற்றி தமிழில் ஒரு E-Book


சுற்றுச்சூழல் அறிஞர்களின்…


முதல் முறையாக சுற்றுச்சூழல் பற்றி தமிழில் ஒரு E-Book வந்திருக்கிறது. அதில் முப்பத்தி ஐந்து ஆளுமைகள் தங்கள் கருத்துக்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள். ஆரம்பமே நம்ம டார்வின் தொடங்குகிறார் உயரினங்கள் அனைத்தும் படைக்கப்படவில்லை பரிணாமத்தின் மூலமே உயிர்கள் தோன்றின என்ற கருத்து மிக பெரிய புரட்ச்சியை உண்டு பண்ணியது என்றும், இன்றுள்ள உயிரின அறிஞசர்களால் (99.8 சதவிகதம் பேர்) அவர் கருத்தை ஏற்று கொண்டனர் என்றும் பதிவுசெய்துள்ளனர்.

இந்தியாவில இருந்து ஐந்துக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளை சொல்லியுள்ளனர் அதில் வீரபத்ரன் ராமநாதன் சுற்றுச்சூழலை பாதுகாக்க சூரிய ஒளியை பயன்படுத்துவதே சிறந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மரங்களை மாணவர்கள் வளர்த்தால் மதிப்பெண் உண்டு என்று ஒரு பாடமாகவே நடத்த படவேண்டும் என்றும் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார் தியடோர் பாஸ்கரன்.

சுற்றுச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும், காட்டுயிர்களை பாதுகாப்பதால் என்ன நன்மை மனிதர்களுக்கு, அரசு ஏன் நிறைய சட்டங்களை போட்டு காடுகளை பாதுகாக்கிறது என்ற கேளிவிகளுக்கு மிக எளிமையான பதில்- புவியில் வாழ மனிதர்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே போல தான் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு. மற்றும் மனிதர்கள் இன்றி பறவைகளால் வாழமுடியும் ஆனால் பறவைகள் இன்றி மனிதனால் வாழமுடியாது என்றும் குறிப்பிடுகிறார் சலீம் அலி.  

நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது எதற்காவது உதவுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் தொடங்குகிறார் அமெரிக்காவின் ஹென்றி டேவிட் தோரா.இவர் டார்வினின் உயிரினங்களின் தோற்ற கோட்ப்பாட்டை ஆதரித்தவர். காலை முதல் மாலை வரை வால்டன் குளத்தின் கரையில் அமர்ந்து நீரில் நீந்தி கொண்டிருந்த வாத்துகளை பார்த்துகொண்டிருந்தார் என்று இவரை பற்றி எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் விழித்திருப்பவனின் இரவுகள் புத்தகத்தில் விரிவாக எழுதி இருப்பார்.

30ஆண்டுகளில் 3கோடி மரங்களை நட்டு,தாய் நாட்டில் முதல் நோபல் பரிசை பெற்று, நாட்டில் முதல் டாக்டர் பட்டம் என்று தொடர்ச்சியான சாதனைக்கு சொந்தம் ஒரு பெண் –வாங்காரி மாத்தாய்- கென்யா நாடு. பசுமை இணைப்பு இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து இயற்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்  

இப்படி புத்தகம் முழுவதும் இயற்கையை புரிந்து கொள்ளும் அளவுக்கு செய்திகள் நிறைந்து இருக்கிறது இந்த புத்தகத்தை எழுதி அதை இலவசமாக மின் புத்தகமாக யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ள அனுமதியும் தந்த ஆசிரியர் ஏற்காடு இளங்கோ அவருக்கு மிக்க நன்றி.

http://freetamilebooks.com/ebooks/scientistthoughtsonenvironmental/

                                                                                                                       -செழியன்  
 

Thursday, 12 March 2015

Chennai in & around - Guindy 
             IAS நேர்முக தேர்வில்  உங்களுடைய பொழுது போக்கு என்ன என்று கேள்விக்கு பறவை நோக்குதல் (Bird Watching) என்று ஒருவர் பதில் அளித்தார். பதில் அவர்களுக்கு சுவாரசயத்தை தந்ததால் நேர்முகம் கலகலப்பாக சென்றது. பெரும்பாலும் நாம் புத்தகம் படித்தல் என்றே பதில் அளிப்போம்.பறவையை ஏன் பார்க்க வேண்டும் என்று கேள்விக்கு, பார்த்தால் என்ன என்ற கேள்வியும் தோன்றுகிறது. 

பறவையை பார்க்க எங்கேயோ போக வேண்டும் என்ற நினைப்பை அப்படி தள்ளிவையுங்கள். உங்கள் வீட்டை சுற்றி பாருங்கள் அங்கு வரும் பறவையை குறித்து கொள்ளுங்கள் சில வாரங்கள் கடந்து அதே போல் பாருங்கள் ஏற்கனவே வந்த பறவை வருகிறதா அல்லது புது பறவை எதாவது தென்படுகிறதா என்று மீண்டும் குறித்து கொள்ளுங்கள் இதில் நிறையை உண்மைகள் தெரியவரும். இந்த வீடு நமக்கு மட்டும் சொந்தமில்லை என்று உணரும் தருணம் அது.

பார்க்க முடியாத பறவைகளை பார்க்க, இருக்கவே இருக்கிறது National Park, Zoological Park அப்படி இப்படி என்று ஏக்கப்பட்ட பூங்கா நம் நாட்டில் உள்ளது அதில் ஒரு நேஷ்னல் பூங்காவை சுற்றி பார்ப்பதே இந்த கட்டுரை.

GUNIDY NATIONAL PARK (Chennai) 

இந்தியாவில் இருக்கும் மிக சிறிய பூங்காவாக கிண்டி பூங்கா இருக்கிறது. பெரியவர்களுக்கு இருபதும் சிறியவர்களுக்கு ஐந்தும் கொடுத்தால் உள்ளே செல்லலாம். வெளியே இருந்தே பார்த்தாலும் ஒரு சில பறவைகள் தெரிகிறது சமிபத்தில் ஏற்படுத்தியே கழுகு கூண்டு, வெளியே இருந்தும் பார்க்க முடிகிறது.
மிக ரம்மியமான சூழல், மாநகர் சத்தம் சிறிதும் கேட்க்காமல் இருப்பது தான் மிகச்  சிறப்பு. முதலில் நம்மை வரவேற்ப்பது மான்களே. ஒரு மான் அதன் இருப்பிடத்தை விட்டு வெளியே சுற்றி வருகிறது எல்லோரும் அதனிடம் விளையாடுகிறார்கள், குழந்தைகள் நின்று படம் படித்து கொள்கிறார்கள்.

மிகப்பெரிய வலையில் நிறைய நீர்வாழ் பறவைகள் விளையாடி கொண்டிருந்ததை நாம் பார்க்கிறோம் என்பதை சிறிதும் சட்டை செய்யாமல் அதன் வேலைகளை பார்த்துகொண்டிருந்தது. ஒரு கூழைக்கடா தண்ணிரில் தன் இறகுகளை நனைத்து வெளியே வந்து விரித்து விரித்து ஆட்டியத்தை பார்க்கும் பொழுது மயில் தோகை விரித்து நிற்கும் கம்பீரத்தை இதில் பார்க்க முடிந்தது.

அரிவாள் மூக்கன் , கரண்டி வாயன் , கூழைக்கடா , நாரை என்று நிறைய நீர்வாழ் பறவைகளை தொலைநோக்கி இல்லாமல், அருகில் இருந்து பார்ப்பது பரவசத்தை தருகிறது.பறவைகள் பார்ப்பதை ஆரம்பிப்பவர்கள் முதலில் இது போல் உள்ள பூங்காவுக்கு சென்று அருகில் பறவைகளை பார்த்து தெரிந்து கொண்டு சரணாலயம் செல்வது ஆர்வத்தை மிகுதியாக்கும்.

ஆந்தைகள் பகலில் உறங்கி இரவில் இரை தேடும் என்பது இங்கு முறைமாறி பகல் பொழுதும் மனிதர்கள் அதனை அருகில் நின்று, பார்த்தும் மற்றும் சத்தங்களையும் உண்டு பண்ணுவதால் அவை தூங்குவதே இல்லை. அதுவும் மனிதர்களை பார்த்து கொண்டிருக்கிறது. இரவில் என்ன செய்கிறது என்று தான் தெரியவில்லை. அதனுடைய வாழ்கை முறையே முற்றிலும் இது போல் இருக்கும் பூங்காக்களில் மாறிவிடுகிறது.ஒருவேளை அவை இரவில் தூங்கிவிட்டால் இராவாடி என்றதை நாம் பகலாடியாக்கிவிட்டோம் என்ற பெருமை சேரும்.

முள்ளம்பன்றிக்கு வைக்கப்பட்ட உணவை பார்க்கும் பொழுது ஒரு ராஜா சாப்பிடும் மதிய உணவு எப்படி இருக்குமோ அது போல் இருந்தது. படத்தை பார்த்தல் உங்களுக்கே தெரியும்.முள்ளம்பன்றிகள் அதன் இருப்பிடத்தில் தூங்கி கொண்டிருந்ததை பார்த்துகொண்டிருந்த சிறுவர்கள், குரல்களை எழுப்பி, கம்பிகளை தட்டியும் பார்த்தார்கள் ஒரு பயனும் இல்லை அவை வெளிய வரவே இல்லை