Saturday 28 March 2015

நாம் வாழும் நாவலன் தீவு


இயற்கையை இறைவனோடு இணைத்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.  தங்களை சுற்றியிருந்த ஒவ்வொரு இயர்கை தந்த கொடையையும் இறையருளின் அம்சமாக கருதியவர்கள் அவர்கள்.  அதனால்தான் வேம்பையும், ஆலையும், அரசையும், நாவலையும் தெய்வமாக போற்ரி வணங்கினார்கள்.  இதேபோல புல்லையும்கூட இறையருள் கொண்டதாக அதன் மருத்துவகுணங்களை நன்கறிந்துகொண்டு புனித சடங்குகளில் அருகம்புல்லை உபயோகித்ததில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.  இவ்வகையில் சிறப்புக்குரிய ஒன்றுதான் நாவஒல்மரமும், அதன் பழமும்..                

சங்ககால புலவரான ஒவையாருக்கு முருகப்பெருமான் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டு அவரின் அறியாமையை உணரவைத்தார்.  கற்றது கை மண் அளவு என்பதையும், கல்லாதது கடல் அளவு என்பதையும் இதன் மூலம் முருகர் உணர்த்தினார்.  ஆற்றங்கரைகளில் வளர்ந்துநிற்கும் நாவல் மரங்களின் கீழ் காற்றில் விழும் நாவல் பழங்களை பொறுக்கி மண்ணை கூட ஊதாமல் அப்படியே சாப்பிட்ட இனிய அனுபவங்களை கொண்டவர்கள் நம் முன்னோர்கள்.  இப்படிப்பட்ட நாவல் உண்மையில் நம் நாட்டுக்கே உரித்தானதாகும். 

    முற்கால புவி அமைப்பில் இருந்த இந்தியா ஒரு தனித்தீவுப்பகுதியாக விளங்கிவந்திருக்கிறது.  இங்கு நாவல்மரங்கள் அதிகமாக வளர்ந்திருந்ததால் அக்காலத்தில் நம் நாடு ‘நாவலன் தீவு’ என்றே அழைக்கப்பட்டுவந்தது.  இதன் சிறப்புகளை வைத்துதான் இந்த மரம் பல திருத்தலங்களிலும் திருத்தலமரமாக உள்ளது.  இத்தகைய திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க ஒரு திருத்தலம்தான் பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருவானைக்கா ஜம்புகேசுவரர் ஆலயம் ஆகும்.  இங்குள்ள இறைவனின் திருநாமமே நாவல்மரத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது.  இதில் இருந்தே இந்த மரத்தின் அருமைப்பெருமைகளை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும்.

    வடமொழி மந்திரங்களில் ஒன்றில் ‘ஜம்பு தீவு’ என்ற பெயரில் நம் பாரதநாடு குறிக்கப்படுகிறது.  ‘ ஜம்பு’ என்பது நாவல் மரத்தை குறைக்கும் சொல் ஆகும்.  ராமபிரான் வனவாசம் இருந்த 14 ஆண்டுகளும் கானகத்தில் இந்த பழத்தை உண்டதாக கதைகள் உள்ளன. நாவல் பழத்தை ‘கடவுள் பழமாக’ பாரம்பரியமாக நம் நாட்டவர்கள் கருதிவந்துள்ளனர்.  கிருஷ்ணர் நாவல் பழத்தின் நிறத்தை பெற்ரிருப்பதாக கருதப்படுகிறது.  குஜராத் மற்றும் மகாராட்டிரா மாநிலங்களில் நாவல் மரத்தின் இலைகள் மாவிலை போல மங்களகரமாக கருதப்படுகிறது.  அதனால் அங்கு நடைபெறும் திருமணவிழாக்களில் அலங்காஅரத்துக்காக இந்த இலைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.  மராத்தியில் நாவல் பழம் பற்றி புகழ்பெற்ற பாடல் ஒன்றும் உள்ளது.

இலக்கியங்களில் நாவல் பழங்கள் அழகான விழிகளுக்கு உதாரணமாக கூறப்பட்டுள்ளது.  தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் நாவல் பழம் பற்றிய செய்திகள் உள்லன.  மகாபாரதத்தில் கிருஷ்ணருடைய நிறமும், நாவல் பழத்தின் நிறமும் ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளது.  கிருஷ்ணபகவான் அவதரித்த ‘ கிருஷ்ணர் ஜெயந்தி’ விழாவின்போது பழங்களை நிவேதனமாக நாம் வைக்கும்போது அவற்றில் நாவல்பழத்துக்கு முக்கியைடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய பெருமைகளைக் கொண்ட நாவல் மரமும், அதன் பழமும் அதிசயமான பல்வேறு மருத்துவகுணங்களையும் கொண்டதாகும்.  இதன் பயனை கருதியே நம் முன்னோர் இதை போற்ரி பாதுகாத்துவந்தனர்.  இந்தியாவில் இருந்தே இந்த மரம் ஆசியாவின் பல நாடுகளுக்கும், பின் அங்கிருந்து பல உலகநாடுகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

அளவில்லாத மருத்துவகுணங்களை கொண்டது இந்த அற்புதமரம்.  நாவல் பழங்களின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் பொடி இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கெ உதவுகிறது.  இதன் பட்டை இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.  வைட்டமின் ‘ ஏ’ மற்றும் வைட்டமின் ‘சி’ ஆகியவைகளும் இதன் பழத்தில் உள்ளது.

    ஆயுர்வேதம், யுனானி மற்றும் சீன மருத்துவத்தில் நாவல் பழம் செரிமானக்கோளாறுகளை சரிசெய்வதற்கான அருமருந்தாக பயன்படுகிறது.  நூறாண்டுகள் வாழும் இந்த மரம் முப்பது மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமைமாறா மரம் ஆகும்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை தாலுகாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் நாவல்காடு என்பது ஆகும்.

  ஒரு காலத்தில் நாவல்மரங்கள் அதிகமாக இருந்ததால் அந்த ஊருக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  நாவல் என்ற பெயருடன் தொடர்புடைய பல ஊர் பெயர்களும் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இதன் இலைகள், விதைகள் மற்ரும் பழம் ஆகிய அணைத்துமே சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாகும்.  உடல் வெப்பத்தை குறைப்பதற்கும், கண்N எரிச்சல், கண்ணில் நீர் வடிவது, அல்சர், கர்ப்பபை கோளாறுகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு நாவல் ஒரு சிறந்த மருத்துவபொருளாகும்.

 நாவல் பழத்தை தின்றால் நா வறண்டு நீர் வேட்கை ஏற்படும்.  இவ்வாறு நாவின் தன்மையை மாற்ருவதால் நா+ல்_ நாவல் என்று இந்த மரத்துக்கு பெயர் வந்ததாக கூறப்படுகிறது.  துவர்ப்புசுவை உள்ள ஒருசில பழங்களில் நாவல் பழம் முக்கியமானதாகும்.  அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகியவை நாவல் பழத்தின் வேறு சில பெயர்கள் ஆகும்.  நாவல் பழங்களில் கருநாவல், கொடிநாவல், சம்பு நாவல் என்று வெவ்வேறுவகைகள் உள்ளன. 

   சுண்ணாம்பு சத்தும், இரும்புசத்தும் இந்த பழத்தில் உள்ளது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் நம் பாரம்பரிய உண்ணவுமுறையான இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு ஆகிய அறுசுவைகளில் துவர்ப்பு சுவையை குறிப்பதால் கிடைக்கும்காலங்களில் இந்த பழத்தை நம் முன்னோர்கள் சிறப்பாக பயன்படுத்திவந்துள்ளனர். 

   இந்த மரம் மற்றும் பழத்தின் மருத்துவகுணங்களை அறிந்ததனால்தான் ஆன்றோர்கள் இந்த கனியை காட்டி ஒªவையாருக்கு முருகக்கடவுள் ஞானத்தை போதித்ததாக கூறுகின்றனர்.  இதன் அருமையை அறிந்துதான் இந்த மரத்தை திருத்தலமரமாக தெய்வம் குடியிருக்கும் கோயில்களில் கொலுவீற்றிருக்க செய்துள்ளனர் நம்m மூதாதையர்கள்.  நாம் வாழும் நாட்டின் பெயரே நாவல் மரத்தை பொருளாகக் கொண்டு அழைக்கப்படும் அளவுக்கு பெருமை உள்ள இந்த மரத்தை நாமும் போற்றி பாதுகாத்து பயன்பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக..  இயற்கையின் வழியில் இறைவனை காண்போம்..  அதன் மூலம் இறைவனின் அருளை என்றும் பெறுவோம்..

                                                                                                         - சிதம்பரம் ரவிசந்திரன்



No comments:

Post a Comment