Friday 3 August 2018

Humming Bird

Humming Bird by Sarguna Packiaraj
உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன.  ஹம்மிங் பறவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின் வட பகுதியில் காணப்படுகின்றன. வட அமெரிக்காவில் 17 வகைகள்தான் உண்டு. இந்தப் பறவைகள் பறக்கும் போது சிறகுகள் "ஹம்" என்ற ஒலியை எழுப்புவதால் "Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன.


உலகத்திலுள்ள மிகவும் சிறிய பறவை, கியூபாவில் காணப்படும் Bee Hummingbird ஆகும். இதன் எடை: 1/15 of an ounce நீளம்: அலகிலிருந்து வால் வரை- 1, முட்டை காப்பிக் கொட்டையின் அளவு. ஹம்மிங் பறவையில் மிகப் பெரியது Giant Hummingbird. நீளம்: 8 ¼” ஆகும்.

ஹம்மிங் பறவைகளால் மாத்திரமே, நீண்ட நேரம்  சிறகுகளை முன்னும், பின்னும் வேகமாக அடித்துப், பூக்களிலிருந்து தேனை எடுக்கவும் (hovering),  பின்நோக்கிப் பறக்கவும் முடியும். இந்தப் பறவைகள் ஒரு நொடிக்கு இறக்கை அடிக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு வகையிலும்(species) வேறுபடுகிறது. உதாரணமாக Bee hummingbird  ஒரு வினாடிக்கு 50- 80 முறையும், Giant hummingbird வினாடிக்கு 16 முறையும் இறக்கைகளை அடிக்கின்றன.  

ஹம்மிங் பறவைகள் பறக்கும் போது அதிக ஆற்றல் செலவிடப்படுவதால், பெரும்பான்மையான நேரம் மரக்கிளைகளிலும், மரக் குச்சிகளிலும் அமர்ந்து ஒய்வு எடுக்கின்றன. சில நேரங்களில் (உ.ம். குளிர்க் காலத்தில் இரவு நேரம்) physical activity ஐக் குறைப்பதன் மூலம் (torpor), உடல் வெப்பத்தையும் இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு ஆற்றலை- சேமித்து வைத்துக் கொள்கின்றன.

ஹம்மிங் பறவைகள் பூக்களிலுள்ள தேனை மட்டும் உண்ணாமல், சிறு பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்து செல்லும் நேரங்களிலேயே சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு தடவை உணவு உண்கின்றன.

Photo: Sarguna Packiaraj
உடல் மினுமிணுத்தல்:

ஹம்மிங் பறவைகளின் உச்சந்தலை, தொண்டை, மார்பு பகுதிகளில்  மினுமினுப்பான இறகுகள் (iridescent) காணப்படுகின்றன. தொண்டையில் காணப்படும் மினுமினுப்பான இறகுகளைGorget”(pronounced as “gor-jit”) என்று அழைக்கின்றனர்.  இந்த நிறங்கள் பார்ப்பவர்களின் கோணத்தைப் பொறுத்தது(angle). ஆண் ஹம்மிங் பறவை, தலையைப் பக்கவாட்டில் திருப்பும் போது,  இந்த நிறங்கள் சூரிய ஒளியில் பட்டுக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் மிளிருகின்றன.  சூரிய ஒளி படாத நேரங்களில் கறுப்பாகத் தோன்றும்.  

ஏனென்றால் இந்த மினுமினுப்பான நிறம்(iridescence), இறகுகளிலுள்ள pigment -ஆல் ஏற்பட்டதல்ல, இறகின் அமைப்பால்(structural) ஆகும். இந்த நிறங்கள் பெண் பறவைகளைக் கவருவதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்கும் பயன்படுகின்றன. பெண் பறவைகளின் தொண்டைப் பகுதியிலும், தலையிலும் இந்த நிறங்கள் குறைவாகக் காணப்படும்.


ஆண் ஹம்மிங் பறவை, உணவு கிடைக்கும் இடங்களில் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக் கொண்டு, பிற ஹம்மிங் பறவைகளையும், எதிரிகளையும் அருகில் நெருங்க விடுவதில்லை.

பெண் பறவையை கவருதல்:

இனப் பெருக்கக் காலத்தில் ஆண் ஹம்மிங் பறவைகள்,  பெண் பறவைகளைக் கவர உயரத்தில் பறந்து சடுதியில் கீழ் நோக்கிப் பாய்ந்து (diving) வினாடிக்குள் மேல் நோக்கிப் பறந்தோ (30 to 60 miles/hour)பெண் பறவையின் முன் நின்று, முன்னும் பின்னும் பறந்தோ, தொண்டைப் பகுதியில் உள்ள நிறத்தைக் காட்டுகின்றன.

ஆண் ஹம்மிங் பறவைகள் கூடு கட்டுவதிலும், குஞ்சுகளை வளர்ப்பதிலும் பொறுப்பு எடுப்பதில்லை. பெண் பறவை, சிலந்தி வலை, மெல்லிய நார்கள், மிருகங்களின் ரோமங்களைக் கொண்டு கூடு கட்டி, இரண்டு முட்டைகள் இட்டு அடை காக்கின்றன. இரண்டு வாரங்களில், கண்கள் திறக்காத நிலையில் குஞ்சுகள் வெளி வந்த பின் குஞ்சுகள் வளர்ந்து கூட்டை விட்டு வெளியேறும் வரையிலும், தாயே உணவு ஊட்டி வளர்க்கிறது.


Photo: Sarguna Packiaraj
வலசைபோதல்:

வலசைபோகும் ஹம்மிங் பறவைகள் கூட்டமாகப் பறப்பதில்லை. பிற பறவைகளின் முதுகில் அமர்ந்து செல்வதில்லை. தனியாகவே தங்கள் பயணத்தைத் தொடங்கி முடிக்கின்றன. பயணத்தைத் தொடங்கும் முன் பல நாட்கள் பெரும் அளவில் உணவு அருந்தி எடையை அதிகப்படுத்திக் கொள்கின்றன. Ruby-throated எனப்படும் ஹம்மிங் பறவை, குளிர் காலத்தில் வட அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா அல்லது சென்டரல் அமெரிக்கா சென்றடைய 500 மையில்கள் Gulf of Mexicoவை கடக்கும் போது வழியில் நிற்காமல் செல்ல பதினெட்டு மணி நேரங்களே எடுக்கிறது. 

Photo:Sarguna Packiaraj
எதிரி:

இந்த அழகிய பறவைகளுக்குப் பூனை, வல்லூறுகள் போன்ற எதிரிகள் உண்டு. இவைகளில் மனிதன்தான் பெரிய எதிரி!! பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காகப் பறவைகளின் இறகுகளைப் பயன்படுத்தினர். அந்தச் சமயம் தென் அமெரிக்காவில் கோடிக்கணக்கான ஹம்மிங் பறவைகள் கொல்லப்ட்டு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் சில வகை ஹம்மிங் பறவைகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டன.

பறவைகளின் இறகுகளை ஏற்றுமதிச் செய்ய அரசாங்கம் தடை விதித்ததால், இன்று தென் அமெரிக்காவில் ஹம்மிங் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

வட அமெரிக்காவில் ஆடுபான் சங்கத்தைச் சார்ந்த தன்னார்வம் கொண்ட தொண்டர்கள், பல மாநிலங்களில் வருடத்திற்க்கு இருமுறை Hummingbird  Festivals நடத்தி  ஹம்மிங் பறவைகளைப் பற்றிய தகவல்களைப் பொது மக்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

வீட்டுத் தோட்டங்களில் ஹம்மிங் பறவைகளைக் கவருவதற்காக nectar, hummingbird  feeders விற்பனை செய்யப்படுகின்றன.

Within my Garden Rides a Bird

Within my Garden, rides a Bird
Upon a single Wheel—
Whose spokes a dizzy Music make
As 'twere a travelling Mill—

He never stops, but slackens
Above the Ripest Rose—
Partakes without alighting
And praises as he goes,
Emily Dickson (1862)


"வல்லமை" magazineல் publish பண்ணப்பட்டது,
30,ஜூலை,2018

-சற்குணா பாக்கியராஜ்
California 

No comments:

Post a Comment