Monday, 22 September 2014

Where Eagle

கழுகுகளைக் காணவில்லை 

                                -சிதம்பரம் ரவிசந்திரன் 

2004ல் உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் மூன்று கழுகு இனங்களை ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் சேர்த்ததோடு, அந்த இனங்கள் அழியாமல் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உலக சமுதாயத்தைத் கேட்டுக் கொண்டது. 90களில் இந்தியாவிலும், அண்டைப் பகுதிகளிலும் சர்வ சாதாரணமாகக் காணப்பட்ட இவை 2000வது ஆரம்பத்தில் 3% குறைந்தது. ஏன் இவற்றை ஆழியாமல் காப்பாற்ற வேண்டும்?

கேள்விகள் உலகின் பல பாகங்களில் இருந்து ஒலித்தன. தார்மிகமாக ஒரு உயிரினம் அழிகிறது என்பதால் மட்டுமா? இல்லை இவைகள் அழிவதால் மனிதனுக்கு ஏதாவது பாதிப்புக்கள் ஏற்படுமா? கழுகு இனங்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களைப் பற்றி அறிவியல் அறிஞசர்களுக்கு தீர்மானமான பதில் தெரியவில்லை சுற்றுப்புற சிர்கேடும், மாசுபடுதலும் முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று கருத போதுமான சூழ்நிலைகள் இருந்தன. கழுகுகளுடைய இனங்கள் குறைந்தபோது நுற்றுக்கணக்கான இறந்துபோன பசுக்களுடைய உடல்கள் பூமியெங்கும் அழுகத் தொடங்கின. 

இவற்றில் இருந்த ஆந்த்ராக்ஸ் கிருமி இறந்த பசுக்களின் உடல் இறைச்சியை உண்ட நாய்களில் தொற்றியது.இதனால் நாய்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. வெரிநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து இறுதியல் கழுகுகளைக் காப்பாற்றினால் மக்கள் மோசமான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று உணர்வு மேலோங்கியது.

சாதாரணமான நடைமுறை வாழ்க்கையில் மனிதனுக்கும், பிற சாதாரணமான நடைமுறை வாழ்க்கையில் மனிதனுக்கும், பிற உயிரினங்களுக்கும் இடையே இருக்கும் இந்த உறவு வெளிப்பட வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் சுற்றுச்சூழலில் இத்தகைய உறவுகள் தான் மனிதன் தன்னை இந்த பூமியில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஆதாரம் ஆகும். நீர் நிலைகளும், சதுப்பு நிலக்காடுகளும், காடுகளும், நதிகளும், கடல்களும் எல்லாம் மனிதனுக்கு உணவையும், வருமானத்தையும் கொடுக்கும்போது, இவைகள் பாதிக்கப்பட்டால் அது மனிதனையும் பாதிப்படைய காரணமாகிறது. இந்த உண்மையை உணராமல் போகும்போது தான், உயிரினச்சூழல் பாதுகாப்பிற்கு மனிதமுகம் இல்லை என்ற குற்றச்சாட்டு உலகின் பல பாகங்களில் இருந்து எழுகிறது. இயற்கைக்கும், மனிதனுக்கும் உள்ள பரிபூரணமான உறவைப் பற்றிய ஆய்வுகள் Wildlife hotspot உயிரினங்கள் செறிந்த பகுதி என்கிற கருத்திற்கு வழிவகுத்தது.

முன்பிருந்த வன உயிரினப் பாதுகாப்பு முயற்சிகள் புலி, பாண்டா போன்ற சில விலங்குகளோடு நின்றுவிட, இந்த ஹாட்ஸபாட் என்ற கருப்பொருள் அக்குறிப்பிட்ட நிலப்பகுதியில் உள்ள எல்லா உயிரினங்களையும் போற்றிப் பாதுகாக்கும் நோக்கதோடு உருவாக்கப்பட்டுள்ளதாகும். ஆனால் இதிலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. பரவலாகக் காணப்படும் தாவர வகைகளைத் தவிர அபூர்வமான இனங்கள் இந்தப் பகுதிகளில் காணப்படவில்லை.  பல்லுயிரினத் தொகுப்பு குறைவாக உள்ள இடங்கள்  சில குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் உயிரினங்களுடைய தற்காலிகப் புகலிடமாகவோ, இனப்பெருக்க மையங்களாகவோ மாறலாம். 

எடுத்துக்காட்டாக அர்ஜெண்டினாவில் புந்தாதோம்பா என்ற இடத்தைக் குறிப்பிடலாம். இந்த இடத்தில் உயிரின வகைகள் மிகக் குறைவாகும். வறண்ட காலநிலை உள்ள குத்துச்செடிகள் மட்டும் வளரும் ஒரு இடம் இது. இது ஒரு போதும் ஒரு உயிரின ஹாட்ஸபாட்டாக (biological hotspot) இருக்க முடியவில்லை. ஆனால் எல்லா செப்டம்பர் மாதங்களிலும் ஒரு சிறப்பின பெண்குயின்கள் ஆயிரக்கணக்கில் இந்த இடத்தில் ஒன்று கூடும். தற்காலிகமாக  குடியிருக்க வரும் இந்த விருந்தாளிகளைப் பார்ப்பதற்காக மட்டும் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் மனிதன் தன்னைக் காத்துக் கொண்டு, மற்ற உயிரினங்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். 

ஒரு உயிரினம் என்ற நிலையில் இருந்து ஒரு நுகர்வோர் என்ற நிலைக்கு மனிதன் மற்ற உயிரினங்களைப் பார்க்க ஆரம்பிக்கும்போது, இயற்கை மனிதனுக்காக போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் பயன்பாட்டுக்குரிய வளங்கள் என்கிற கர்ப்பகிரகங்களை மனிதன் அழிக்கத் தொடங்கிவிடுகிறான். இயற்கை  மனிதனுக்கு உணவாகிறது. உடையாகிறது. வீடாகிறது. உயிர்ச்செல்வங்கள் காட்சிப்பொருள்களாகிறது.  நாளைய அவனுடைய நிலைப்புத்தன்மைக்கு எதிர்பார்ப்பாகவும் ஆகிறது. நேற்றும், இன்றும், நாளையும் மனிதன் இயற்கையையே தன் ஆதாரங்கள் அணைத்திற்கும் மூலாதாரமாகக் கொள்ள வேண்டியுள்ளது. 

இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவைகள் என்ற நிலையில் இயற்கை அவனுக்கு ஆற்றும் சேவைகள் எந்த விதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஊர்த்தோட்டியான காக்கை, உழவனின் பயிரை நாசப்படுத்தும் எலிகளைத் தின்று உதவும் பாம்பும், கோட்டானும், அழுக்குகளை உணவாகக் கொண்டு கடலையே சுத்தப்படுத்தும் பிரம்ம முயற்சியில் ஈடுபடும் பாசிகளும், அணுயுதங்களைவிட மனிதன் இன்று அதிகம் பயப்படும் கொசுக்களுடைய லார்வாக்களை விழுங்கி வாழும் தவளைகளும், மனிதன் வெளிவிடும் நச்சு வாயுக்களான கார்பன் மோனோ ஆக்சைடையும், நைட்ஜன் டை ஆக்சைடையும், சல்பர் டை ஆக்சைடையும் உறிஞ்சி காற்றைத் தூய்மையாக்கும் மரங்களும் இந்த வரிசையில் வருபவையே.

இயற்கையின் சேவைகள் மனிதனுக்கு உயிர் காக்கும் மருந்துகளாகலாம். விலையுயர்ந்த மரமாகலாம்.  அற்புதமான நீர்ச்சுத்திகரிப்பு நிலையங்களாகவும் ஆகலாம். மழையாகலாம். காலநிலையாகவும் ஆகலாம்.  தொற்றுநோய்களையும், வெள்ளப்பெருக்கையும் தடுத்து சுனாமியையே தூக்கிச் சாப்பிடும் சதுப்பு நிலக்காடுகளாகவும் அவை இருக்கலாம். அல்பம் என்று நாம் நினைக்கும் புழுவாக வாழ்ந்து மண்ணை வளப்படுத்தும் மண்புழுவாகவும் ஆகலாம். கோடானுகோடி வருடங்களுக்கு முன்னால் புதையுண்டு தங்கள் உடலை இறந்த பின்னாலும் இன்றுள்ள மனிதனுக்கு எரிபொருளாக பெட்லாகவ்வும் டீசலாகவும் இயற்கை தரும் இத்தகைய சேவைகளும், தொண்டுகளும் நமக்கு அமையலாம். 

இத்தகைய இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் மனிதனுக்குச் செய்யும் சேவைகளை ரூபாய் மதிப்பில் கணக்குப் போட்டால் உலகத்தில் எல்லா நாடுகளுடைய வருடாந்திர பட்டைவிட கூடுதலாக வரும்.  இத்தகைய சேவைகளை கணக்கிட்டு நடைமுறைப்படுத்தும் உயிர்ச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது கி.பி 2000த்தில்தான். ஏறக்குறைய 1300 அறிவியல் அறிஞர்களுடைய ஒத்துழைப்புடன் சுற்றுப்புறச் சூழலியலில் மிகப்பெரிய திட்டமாக இது உருவாகியுள்ளது.  

மெல்லேனியம் ஈகோ அசெஸமெண்ட் (meleniam eco system assessment) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த ஈராயிரமாண்டு சுற்றுசூழலியல் மதிப்பீட்டுத் திட்டம் கடந்த 50 வருடங்களில் மனிதனுக்குப் பயன்படும் சுற்றுச்சூழல் சேவைகளைப் பற்றி கோடிட்டு காட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. 2004ல் சுனாமியும், 2005ல் காத்தரீனா சூறாவளிப்புயலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை மனிதனுக்கு ஆற்றும் சேவைகளுக்கும், மனிதனுடைய வாழ்க்கை முறைகளுக்கும் இடையே இருக்கும் சங்கிலித்தொடர் உறவை ஆய்வுக்குரிய விஷயமாக்க அறிஞர்களைத் தூண்டியது.  இந்த இரு இயற்கைப் பேரிடர்களிலும் அந்தந்தப் பகுதிகளுக்கென்று சிறப்பாக இருந்து வந்த தாவர வகைகளின் அழிவு அதிகமாக இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் கடலோரத்தில் இருந்த சதுப்பு நிலக்காடுகள் செம்மீன் வளர்ப்பதற்காக பலியாக்கப்பட்டதன் விளைவாக சுனாமி அலைகளை தடுத்து நிறுத்த முடியாமல் போனது. இந்த பகுதிகள் ஒன்றும் பல்லுயிரிகளின் ஹாட்ஸபாட்டாக இருக்கவில்லை.

இத்தகைய சேவைகள் மூலமாக அதிகளவு பயனை எதிர்பார்த்துக் காத்திருப்பது உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் ஏழை மக்கள் தான். ஐ..நா சபையின் சமீபத்திய ஆய்வறிக்கைகளின்படி, இயற்கை சுற்றுச்சூழல் மனிதர்களுக்கு செய்யும் சேவைகள் மூலமாக உலகில் ஏறக்குறைய 750 கோடி மக்களுடைய வறுமையை முழுமையாகப் போக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் சேவைகளில் ஏற்படும் தோல்விகள் மனிதனுடைய ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கும் என்று அறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கழுகுகளுடைய எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவினால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் மட்டும் போலவே ஆகும். ஒவ்வொரு வருடமும் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் 2லட்சம் பேர் பூமியில் உயிர் இழக்கிறார்கள். நீர்நிலைகளையும், வனங்களையும் பாதுகாப்பதன் மூலம் இத்தகைய மரணங்களை வெகுவாகக் குறைக்க முடியும். சுற்றுச்சூழல் சேவைகளில் ஏற்படும் தோல்விகள் மூலம் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் நவீன உலகால் சமாளிக்க முடியாததாக்கும். 

இதற்கு உதாரணங்களே புதிது புதிதாக மனிதர்களைப் பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல், டெல்லி வைரஸ காய்ச்சல், பெயர் தெரியாத மர்மக்காய்ச்சல்கள் மட்டுமல்லாது முன்பு ஒழித்து விட்டதாக மனிதன் பெருமையோடு மார்தட்டிக்கொண்ட மலேரியா, காலரா போன்ற பல வியாதிகளின் புதிய படையெடுப்புகள் பூமியில் நிகழ்வது.  இவற்றையெல்லாம் சமாளிக்க மனிதன் செலவிட வேண்டிய தொகை பல பில்லியன் கணக்கான டாலர்களாக இருக்கும்.  

பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் இயற்கை பாதுகாப்பு செயல்பாடுகளுடைய முக்கிய நோக்கங்கள் சுற்றுச்சூழல் சேவைகளில் ஏற்படும் தோல்விகளால் பலன் அளிக்காமல் விடுகின்றன. ஆசியாவில் சதுப்புநிலக்காடுகள், அமெரிக்காவில் வறண்ட காட்டுப்பகுதிகள், உலகம் முழுவதும் உள்ள பவழப்பாறைகள் போன்றவை இத்தகைய சுற்றுச்சூழலுடைய சொத்துக்கள் ஆகும். அரசுகளும், அரசுசார் அமைப்புகளும் இந்த நோக்கத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளன. இதற்கு நல்ல பயன்கள் ஏற்படவும் செய்துள்ளன.

புஷ்மேன் என்றழைக்கப்படும் நமீப்பியாவில் சான் இன மக்கள் உலகிலேயே மிகவும் வறியவர்கள் மட்டுமல்ல குள்ளமனிதர்கள் அதிகமாக உள்ள மனித ஆதிவாசி இனமும் அவர்கள் தான். சொந்தமாகப் பிறந்து  வளர்ந்து வாழ்ந்து வந்த காட்டுப்பகுதிகள் இவர்களுக்கு வெளியுலகின் தொடர்புகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. இதனால் இவர்கள் கறுப்புநிற காண்டாமிருகங்களை காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்தார்கள். 1996ல் நமீபியா அரசு நிறைவேற்றிய ஒரு சட்டத்தின் மூலம் இவர்கள் வாழ்ந்து வந்த காட்டுப்பகுதியின் நில உரிமையும், வாழ்வுரிமையும், காட்டுப்பகுதியின் மூலம் கிடைக்கும் வருமானமும் இவர்களுக்கே சொந்தம் என்று ஆக்கப்பட்டது.  

சான் இன மக்களில் ஏறக்குறைய 70குழுக்களுக்கு அவர்கள் வாழும் சுற்றுச்சூழலில் வாழும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் உரிமையும், அவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்குரிய உரிமையையும் அரசு அவர்களுக்குக் கொடுத்தது..  இந்தத் திட்டத்தின் பயன் அற்புதமானதாக இருந்தது. இன அழிவின் விளிம்பில் இருந்த வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கறுப்பு காண்டாமிருகங்கள் இன்று உலகில் அதிகம் காணப்படுவது நமீபியாவில் தான்..  சான் இன மக்களுடைய வறுமையும் பெருமளவில் குறைந்தது. 

ஈக்குவடோரில் மிகப் பெரிய நகரமான க்யோட்டோவில் கடுமையாக இருந்த குடிநீர்ப் பிரச்சனையும் தீர்க்கப்பட்டது இதுபோன்ற செயல்திட்டங்கள் மூலமாகத் தான். சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை ஹாட்ஸபாட்டுகளில் மட்டும் செயல்படுத்துவதற்குப் பதிலாக இன்னும் பரந்த அளவில் வறுமையையும், நோய்களையும் அனுபவித்து வரும் பகுதிகளுக்கு பரவச்செய்வதன் மூலமாக இயற்கை பாதுகாப்பையும், மனித வாழ்வையும் சவாலாக மாற்றும் சமுதாய நிலையை மாற்றியமைக்க முடியும்  என்ற விழிப்புணர்வு உலகம் எங்கும் அதிகமாகி வருகிறது. 

மனிதனை விட்டுவிட்டு நடத்தப்படும் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு திட்டங்கள் அல்ல மாறாக மனிதனை உட்படுத்திக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் செயல்திட்டங்களே எதிர்காலத்தில் நன்மை பயக்கக்கூடியது என்று அறிவியல் உலகம் எதிர்பார்க்கிறது.

Thursday, 4 September 2014

Questions About Birds,Animals & Nature in IAS Exam 2014



IAS- 2014 தேர்வில் கேட்கப்பட்ட விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கேள்விகள் .


கேள்வி-1

கீழ் கண்டவற்றில் எது சரி ?

A. Eco-Sensitive Zone பகுதியை The Wildlife (Protection) Act1972 கீழ் அறிவிக்கப்பட்டதா?


B. Eco-Sensitive Zone முக்கிய அம்சம் என்பது இந்த பகுதியில் மனிதன் எந்த வித செயல்களும் செய்யகூடாது விவசாயம் மட்டும் செய்துகொள்ளலாம் என்பது உண்மையா?
Options 

1. A only           2. Both A and B                        3. B only           4. Neither A or B

கேள்வி-2 

கிராமதில் வயல்களில் மேயும் மாடுகளின் மேல் அமர்ந்து அவற்றின் தோலில் உள்ள பூச்சிகளை கொத்தி சாப்பிடும் பறவைகள் எவை எவை?


1.Painted Stork             2.Common Myna           3.Black-Necked Crane  4.Cattle Egret

 Options

(a) 1,2,3                        (b) 2 and 3                    (c) 2             (d) 1 and 2

கேள்வி-3 

1.Dampa Tiger Reserved  - Mizoram



2.Gumti Wild Life Sanctuary  - Sikkim



3.Saramati peak   - Nagaland


மேலே உள்ள எவை எவை சரியாக பொருந்தி இருக்கிறது ?

Options

(a) 2 and 3         (b)1,2,3             (c)1 and 2         (d)1 and 3