Saturday 26 October 2019

Tuesday 9 July 2019

Bird Watching - பறவை நோக்குதல்


குளிர்கால மாதங்களில் சென்னையை சுற்றி பறவைகள் பார்க்கப்பட்ட இடங்கள் மற்றும் பறவை வகைகள் பற்றிய  இந்து தமிழ் நாளிதழில் சென்னையும் ஒரு வேடந்தாங்கள்தான் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 

இணைப்பு :

https://tamil.thehindu.com/general/environment/article27244351.ece



Sunday 16 June 2019

கணந்துள்--ஆள்காட்டி (Lapwing)


தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை  என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன் வரக்கூடும்.  ஏனென்றால்,  இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.

சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள், முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவைஎன்று P. L. சாமி, எழுதியுள்ளசங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்(p.147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

Sunday 2 June 2019

Tiger census 2019 - புலிகள்: 2019


நிறையப் புள்ளி விவரங்கள் இந்தியாவில் எடுக்கப்படுகிறது அதில் அதிகம் மக்கள் கவனத்திற்கு வருவது இரண்டு மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு ஆகும். மக்கள் தொகை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது.

2006ஆம் வருடத்தில் இருந்து புலிகள் கணக்கெடுப்பு  நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்று இன்னும் அதன் முடிவுகள் வெளியிடவில்லைஅதற்குச் சொல்லப்படும் காரணங்கள், நிறையத் தகவல்கள் சேகரித்து உள்ளதால் அதனைச் சரிபார்ப்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும், புதிதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ள சில மாநிலங்களிடம் இருந்து புள்ளிவிவரம் கிடைப்பதற்குத் தாமதமானது அதனால் புதிய அரசாங்கம் அமைந்த பிறகே(ஜூன்2019) வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

இந்த முறை புலிகள்  சரணாலயங்கள் இருக்கும் 18 மாநிலங்களுடன், புதிதாகக்  குஜராத், நாகாலாந்து, மணிப்பூர்  மூன்று மாநிலங்களைச் சேர்த்து புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது மற்றும் ராயல் பெங்கால் புலி ஒரிசா மாநிலத்தில் நடமாடுவதைப் பதிவு செய்து உள்ளனர். இதற்கு முன்பு இங்கு பார்க்கப்பட்டதற்காகான் பதிவுகள் இல்லை.
Photo-Kalyanvarma

Monday 27 May 2019

Bird Watching-Interview The Hindu



இந்து தமிழ் நாளிதழில் சிறுவர்கள் தங்கள் விடுமுறையை பயன் உள்ள வகையில் கழிப்பதற்கு பறவை நோக்குதல் மிக சிறந்த முறையாகும்.

பறவை நோக்குதல் பற்றி இந்து தமிழ் நாளிதழுக்கு கொடுத்த சிறு பேட்டி 





Monday 20 May 2019

அந்த ஏழு நாட்கள்.....


தோட்டத்தில் 

கூகை(Barn Owl) இரவு பத்து மணியளவில் வீட்டு மாடியில் வந்து அமர்ந்ததுதான்  வீட்டு அருகில் எனக்கு முதல்  தரிசனம் ஆகும். பலமுறை வெளிநாட்டுப் பறவை என்றே பத்திரிக்கையில் படித்ததால் அவை வேறு நினைவுக்கு வந்து சென்றது.  பல வருடங்கள் முன்பு புள்ளி ஆந்தை, வீட்டிற்கு முன்பு இருக்கும் மின்கம்பியில் வந்து அமர்வதைப் பார்த்து உள்ளேன். வீட்டில் உள்ளவர்கள் சில நாட்கள் முன்பு கூகை வீட்டு முன் சுவரில் எட்டு மணியளவில் வந்து அமர்ந்து சில நிமிடங்கள் நகரவே இல்லை என்று தெரிவித்தார்கள். இப்பொழுதும்  வீட்டு அருகில் ஊர்வலம் சென்றவர்கள் வெடி வெடித்தார்கள் அதற்குக் கூட அசையாமல் மாடியில் அப்படியே இருந்தது. கிண்டி சிறுவர் பூங்காவில் இருக்கும் கூகை அமைதியே உருவாக இருக்கும். ஆனால் இங்குச் சுறுசுறுப்பாக இருப்பதற்கு அதன் வாழிடத்தில் இருப்பது அதிமுக்கிய காரணமாகும். 

Monday 29 April 2019

Reserved Forest-பூசிமலை குப்பம்



கோடைக் காலம், பசுமையைப் போக்கி வெண்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. காப்புக்காடுகள் அதில் தப்பவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து உள்ள பூசிமலைக்குப்பம்  காப்புக்காட்டுக்குக்  காலை 6 மணியளவில் சென்றபொழுது  பசுமை இல்லா காட்டை பார்க்க முடிந்தது.

Blue-faced malkoha

பச்சை வாயன் (Blue-faced malkoha):

முதலில் வரவேற்ற பறவையாகும். கூச்ச சுபாவம் உடைய இந்த பறவை மிக அருகிலிருந்தபொழுதும் சிறிதும் நகராமல் ஒரு சிறு செடியில் விளையாடிக் கொண்டிருந்தது. முதன் முதலாக ராஜபாளையத்தில் இந்த பறவையைப் பார்த்தபொழுது இலைகள் அடர்ந்த மரத்தில் நமக்கு தெரியாதவாறு இருந்தது. இருந்தாலும் அங்கேயே ஒரு மணிநேரம் அமர்ந்து  முடிந்த அளவு பார்த்துவிட்ட நகர்ந்தோம். ஆனால் அப்படியே இங்கு தலைகீழ். இங்கும் நீண்ட நேரம் அதன் அருகிலிருந்தே பார்த்து நகர்ந்தோம். 

Wednesday 10 April 2019

மயில் நமது தேசீயப் பறவை..(Indian peafowl)


    

உசிரவீரம் என்ற மலையின் கீழ் இருந்த ஆசிரமத்தில் மருத்தன் என்ற பெயர் உடைய அரசர் ஒரு சமயம் ஒரு யாகம் நடத்தினார்..  யாகத்தில் கலந்துகொள்வதற்காக ரிஷிகளும், இந்திரஉலகத்தில் இருந்து தேவர்களும் வந்துசேர்ந்தார்கள்..  யாகத்தை முறியடிப்பதற்காக இலங்கையின் அதிபதியான ராவணனும் ஆசிரமத்துக்கு வந்துசேர்ந்தான்.  

Saturday 6 April 2019

வனச் சுற்றுலா.. (Forest Tour)


     

சமீபகாலங்களாக வனங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவது  பற்றிய செய்தி அடிக்கடி வெளிவருகிறது..  வனங்கள் வனவிலங்குகளுக்கு உரிய வாழிடம் ஆகும்.  ஆனால், இதை உணராத சுற்றுலா செல்லும் பலரும் வனவிலங்குகளை பாதிக்கும்வகையில் செயல்படும்போது வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மோதல் ஏற்படுகிறது.  தேசீய அளவில் ஒவ்வொருவருடமும் 15% அளவுக்கு வளர்ச்சி அடைவதாகக் குறிப்பிடப்படும் ஒரு துறை ஆகும் சுற்றுலாத்துறை..  பொதுவாக தென்னிந்தியாவில் இந்த வளர்ச்சி விகிதம் ஏறக்குறைய 10% என்று கூறப்படுகிறது. 

Monday 1 April 2019

வண்ண வண்ண நிறங்களுடன் ஒரு அற்புதப் பறவை (Flame-throated bulbul)



புல்புல்கள் பெரும்பாலும் வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படும் பறவைகள் ஆகும்.  உண்மையில் தென்னிந்தியாவில் சுலபமாகவும், பல இனங்களாகவும், இந்தப்  பகுதி வனங்களில் காணப்படும் ஒரு பறவை இனம்தான் இவை.  ஒவ்வொரு வனப்பகுதியிலும் ஒன்றிரண்டு ரக புல்புல்கள்  பல சிறப்பம்சங்களுடன் இருப்பதைக் காணமுடியும்.  அந்த வனத்தின் மொத்தப் பறவைகளிடையே இவை ஆதிக்கம் செலுத்துவதாகவும் சில பகுதிகளில் காணப்படுகின்றன. 

  பசுமை மாறாக் காடுகள் முதல் வறண்ட முள் காடுகள் வரை பலவிதமான காடுகளிலும், சில சிறப்பு பண்புகளுடன் காணப்படக்கூடிய புல்புல்கள் காணப்படுகின்றன.  நம் காட்டுப்பகுதிகளில் வாழ்ந்துவரும் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒரு பறவை இனமே புல்புல்கள் ஆகும்.  மணிகண்டன் என்ற செல்லப்பெயருடன் ஒரு இன புல்புல் பறவை கேரளாவில் அதிகமாகக் காணப்படுகிறது.  இது உண்மையில் ஒரு காட்டில் வாழும் பறவையே ஆகும்.  ஆனால், இந்த ரகப் புல்புல்கள் பசுமை மாறாப் பகுதிகளையும், சோலைகளையும் விட்டுவிட்டு இலையுதிரும் காடுகளிலும், நட்டு வளர்க்கப்பட்ட மரங்களைக் கொண்ட காட்டுப்பகுதிகளிலுமே இவை அதிகமாக வாழ விரும்புகின்றன. 

   
Photo-wikipidea

Sunday 31 March 2019

செல்போன் கோபுரங்கள் அழிக்காத சென்னை சிட்டுக்குருவிகள்


இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இருந்தாலும், சில ஆண்டுகளாக சிட்டுக்குருவியைப் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக செல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி அழிந்து வருகின்றன என்ற ஆதாரமற்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. உண்மையில் சிட்டுக்குருவியைவிட உருவில் பெரிய பல பறவை வகைகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன.
சென்னை போன்ற மாநகரங்களில்கூட அந்த பறவைகளைப் பார்க்கலாம். அவை எல்லாம் வாழும்போது சிட்டுக்குருவி மட்டும் அழிந்து வருகிறது என்று கூறப்படுவது உண்மையா என்பதை ஆய்வு நடத்தித் தெரிந்துகொள்ள முற்பட்டோம். அந்த ஆய்வின் முடிவில் சென்னையிலிருந்து சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன அல்லது வெளியேறிவிட்டன என்ற தகவலில் உண்மை இல்லை என்று தெரிந்துகொண்டோம்.

Thursday 10 January 2019

கெட்டுஅள்ளி-தருமபுரி (Dharmapuri)


தென்னை மரத்திலிருந்த இரைகொல்லி பறவையான வல்லூறு, நீண்ட நேரம் அமர்ந்து இருந்ததைப் பள்ளி மாணவ-மாணவிகளும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மாணவர், தினமும் பள்ளி விட்டுச் செல்லும்பொழுது இந்த பறவையைப் பார்ப்பதாகவும் ஆனால் பெயர் தெரியாது என்று சொன்னார். அவர்களுக்கு அவைதான்  முதல் பறவை பார்த்தால் ஆகும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுஅள்ளி ஊரில் இருக்கும் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுடன் பறவைகள் பார்த்தபொழுது பேசப்பட்ட வார்த்தைகள் ஆகும்.