Sunday 16 June 2019

கணந்துள்--ஆள்காட்டி (Lapwing)


தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை  என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன் வரக்கூடும்.  ஏனென்றால்,  இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.

சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள், முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவைஎன்று P. L. சாமி, எழுதியுள்ளசங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்(p.147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

Sunday 2 June 2019

Tiger census 2019 - புலிகள்: 2019


நிறையப் புள்ளி விவரங்கள் இந்தியாவில் எடுக்கப்படுகிறது அதில் அதிகம் மக்கள் கவனத்திற்கு வருவது இரண்டு மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு ஆகும். மக்கள் தொகை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது.

2006ஆம் வருடத்தில் இருந்து புலிகள் கணக்கெடுப்பு  நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்று இன்னும் அதன் முடிவுகள் வெளியிடவில்லைஅதற்குச் சொல்லப்படும் காரணங்கள், நிறையத் தகவல்கள் சேகரித்து உள்ளதால் அதனைச் சரிபார்ப்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும், புதிதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ள சில மாநிலங்களிடம் இருந்து புள்ளிவிவரம் கிடைப்பதற்குத் தாமதமானது அதனால் புதிய அரசாங்கம் அமைந்த பிறகே(ஜூன்2019) வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

இந்த முறை புலிகள்  சரணாலயங்கள் இருக்கும் 18 மாநிலங்களுடன், புதிதாகக்  குஜராத், நாகாலாந்து, மணிப்பூர்  மூன்று மாநிலங்களைச் சேர்த்து புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது மற்றும் ராயல் பெங்கால் புலி ஒரிசா மாநிலத்தில் நடமாடுவதைப் பதிவு செய்து உள்ளனர். இதற்கு முன்பு இங்கு பார்க்கப்பட்டதற்காகான் பதிவுகள் இல்லை.
Photo-Kalyanvarma