Monday 25 May 2020

Chithrangudi Bird Sanctuary



ராமநாதபுரத்திலிருந்து 45 கிலோமீட்டர்  சரணாலயம். உள்ளூர் நண்பரிடம் இருசக்கர வண்டி இருப்பது தெரிந்து வாங்கிக்கொண்டோம்.  காலை 6 மணிக்குக் கிளம்பிச் செல்லும் வழியெல்லாம் பறவைகளுக்குக் காலை வணக்கம் சொல்லிக் கொண்டே சென்றோம்.  

காலை வேலையில் பறவைகள் சுறுசுறுப்பாகப் பறந்தும், கிளையில் அமர்ந்தும், சில தரையில் நடந்தும், வயல்வெளிகளில் இரை தேடியும், நிலை குத்தி நின்றும் பார்த்தபொழுது மனிதர்கள் தன் கால்களைப் பயன்படுத்துவதைத் தவிர வாகனத்தில் செல்வதே அதிகம் என்று உணரமுடிந்தது.

எந்த பறவையும் மற்றொரு பறவை மீது சவாரி செய்வது இல்லை. எந்த வாகனமும் பறவைகளுக்கு கிடையாது. இறக்கை உடைந்தாலும் இரையை அதுவே தேடிக் கொள்ளவேண்டும். தன்னார்வலர்கள் என்பது பறவைகள் உலகில் முற்றிலும் கிடையாது.

Thursday 21 May 2020

என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்- ஆதி வள்ளியப்பன்




விலங்குபறவை அடுத்து பூச்சிகள் நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினம் ஆகும். உண்மையில் உலகில் மிக அதிகமாக இருக்கும் உயிரினமும் பூச்சிகள் தான்.  நாம் விரும்பாத உயிரினமும் பூச்சிகள் என்று சொல்லலாம்.

பூச்சிகள் குறித்து புத்தகங்கள் தமிழில் மிக மிகக் குறைவாக வருகிறது. சமீபத்தில் வந்துள்ள  புத்தகம்தான் “என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்” -ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். எதிர் வெளியீடு 

பறவைகள் பார்க்க நாம் எங்கும் செல்லவேண்டாம் நம் வீட்டிற்கு வெளியே  இருந்து தொடங்கலாம். ஆனால் பூச்சிகள் பார்க்க  இன்னும் சுருக்கி நம் வீட்டிற்குள் இருந்தே தொடங்கலாம். 

ஆசிரியர் தன் வீட்டிற்கு உள்ளே-வெளியே பார்த்த பூச்சிகளை மிக எளிமையாக, சரியான தமிழ்ப் பெயர்கள் மற்றும்  அறிவியல் பெயர்களையும் கொண்டு எழுதிச் செல்கிறார்..

Sunday 3 May 2020

Lockdown



கடைசியாகப் பறவைகளுக்கும் 20 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இவை அமுலுக்கு வருகிறது. பறவைகள் மரத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. மரத்தில் இருக்கும் பழங்கள், அங்கு வரும் பூச்சிகள் போன்றவற்றை உண்ணவேண்டும். உங்கள் மரத்தில் வேறு பறவைகள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை எப்படி அனைத்து பறவைகளாகும் தெரிவிப்பது என்ற விவாதம் தொடங்கியது. மக்களிடம் இந்த பணியைக் கொடுத்துவிடுவோம் அவர்கள் அவங்க இடத்தில் இருக்கும் மரத்தில் சிறு தாளில் எழுதி ஒட்டிவிடவேண்டும். மரத்தில் இருக்கும் ஒரு மூத்த பறவையை மரத்தின் தலைவனாகக் கொண்டு அந்த பறவையிடம் சொல்லிவிடவேண்டும்.

அனைத்தும் தொலைக்காட்சியிலும் Breaking Newsஆக ஓடிக் கொண்டிருந்தது.