Tuesday 31 January 2017

பறவை நோக்குதல்- 8 (Birds Order - Family)

பறவை புத்தகங்களில் பறவைகள் மற்றும் அதன் தொடர் வகைகள் என்று விவரித்து எழுதியிருப்பார்கள். உதாரணம் Egret எடுத்து கொண்டால் உன்னிகொக்கு(Cattle Egret),சிறிய கொக்கு(Little Egret), நடுத்தர கொக்கு(Intermediate Egret), பெரிய கொக்கு(Large Egret) இதே போல் Heron எடுத்து கொண்டால் மடையான்(Pond Heron), இராகொக்கு(Night Heron), சாம்பல் நாரை(Grey Heron), செந்நாரை(Purple Heron) என்று அதன் தொடர்ச்சியை பார்க்க முடியும் ஆனால் பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில் பறவை வகைகள் தொடர்ச்சியாக இல்லமால் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இருப்பதுபோல் காணப்படும்.

காரணம் ஒன்றும் இல்லை. தொடர் எழுதும்பொழுது அந்த தலைப்புக்கு ஏற்ற பறவைகளை சொல்வதால் பறவைகளின் தொடர்ச்சி விடுபடுகிறது. 

ஆரம்பகாலத்தில் பறவைகளை பிடித்து அல்லது கொன்று பாடம் செய்து அதன்பின் ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் வரும். ஆனால் டிஜிட்டல் மயமான இப்பொழுது பறவைகள துல்லியமாக படம் எடுத்து அவற்றை பின் தொடர்ந்து, காட்டிலேயே தங்கி  கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். பறவைகளை கொல்வது முற்றிலும் இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம் எந்த பறவை ஆர்வலரும் பறவைகளை கொல்வது ஏற்றுகொள்ளகூடிய செயல் என்று சொல்லமாட்டார்கள்.

Saturday 14 January 2017

Amur Falcon Film by Shekar Dattatri


Amur falcon- wiki

ரஷ்யா மற்றும் மங்கோலியாவில் இருந்து கிளம்பி இந்தியாவில் நாகலாந்து வழியாக நம்முடைய தென்மாநிலமான ஆந்திராவை கடந்து சோமாலியா சென்று பின் தென்னாபிரிக்கா வரை வலசை செல்லும் பறவைதான் Amur Falcon. ஒருவருடத்தில் 23000 கிலோமீட்டர் வரை பறக்கிறது. 

கிளம்பும்பொழுது ஆனந்தமாக கிளம்பும் Amur Falcon இந்தியாவை கடக்கும்பொழுது அந்த ஆனந்தம் சரிபாதியாக குறைந்துவிடுகிறது.
 
காரணம் நாகலாந்து ?

ஏறக்குறைய 25 நிமிட படம் அதில் மிக சரியாக Amur Falcon படும் துன்பங்கள் அதனால் பல விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு எப்படி காப்பாற்றுபட்டுள்ளன என்று விரிவாக விவரிக்கிறது குறும்படம்.