Amur falcon- wiki |
ரஷ்யா மற்றும்
மங்கோலியாவில் இருந்து கிளம்பி இந்தியாவில் நாகலாந்து வழியாக நம்முடைய தென்மாநிலமான
ஆந்திராவை கடந்து சோமாலியா சென்று பின் தென்னாபிரிக்கா வரை வலசை செல்லும் பறவைதான்
Amur Falcon. ஒருவருடத்தில் 23000 கிலோமீட்டர் வரை
பறக்கிறது.
கிளம்பும்பொழுது
ஆனந்தமாக கிளம்பும் Amur Falcon இந்தியாவை கடக்கும்பொழுது அந்த ஆனந்தம் சரிபாதியாக குறைந்துவிடுகிறது.
காரணம் நாகலாந்து ?
ஏறக்குறைய 25 நிமிட படம் அதில்
மிக சரியாக Amur Falcon படும் துன்பங்கள் அதனால் பல விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு எப்படி காப்பாற்றுபட்டுள்ளன
என்று விரிவாக விவரிக்கிறது குறும்படம்.
Film Screening |
Doyang Lake (நாகலாந்த்) Amur Falconனின் சொர்க்க பூமி:
மங்கோலியாவில்
இருந்து வரும் Amur Falcon ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு வாரகாலம் வரை நாகலாந்தில் தங்கி அதன்
பின் ஒரே மூச்சில் அவை தென்ஆபிரிக்காவை அடைகிறது. இடையில் தங்கும் இடமான
நாகலாந்தில் பெரும் சோதனையில் சிக்கி தன் கூட்டத்தில் உள்ள நண்பர்களை
இழந்துவிடுகிறது.
அங்குள்ள சில
மனிதர்களால் பிடிக்கப்பட்டு உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதற்கு எடுத்து செல்லும்
காட்சிகள் படத்தில் பார்க்கும்பொழுது நம்
ஊரில் கோழிகளை கால்களை கட்டி தூக்கி செல்லுவது போல் Amur Falconனை தூக்கி
செல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஒருலட்சத்திற்கு மேல் சாகடிக்கப்படுகிறது
இதன்மூலம் அவற்றின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்துவந்தது.
வருடம்தோறும் Amur Falcon மூலம் நாற்பதாயிரம்
வரை சம்பாதித்த உள்ளூர் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதரப்படும் என்று
உத்தராவதம் கொடுத்து அவர்களை வேட்டையாடுவதில் இருந்து வேறுபக்கம்
திருப்பியுள்ளார்கள். நாகலாந்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்கு நிறைய
விளக்க நிகழ்சிகள் நடத்தப்பட்டன. நாகலாந்து அரசும் நிறைய முயற்சிகள்
எடுத்துவருகிறது. மத்திய அரசும் சில முயற்சிகள் எடுத்தது.
இனி ஓர் Amur Falcon கூட பிடிக்ககூடாது என்ற
நிலை வரும் வரை போராடி சாதித்து இருக்கிறார்கள். அவர்கள் மிக பெரிய
அங்கீகாரத்திற்கு உரியவர்கள்.
image-conservation india |
கண்டிப்பாக எல்லோரும்
பார்க்க வேண்டிய படம், வாய்ப்பு கிடைக்கும் பொழுது பார்த்துவிடுங்கள்.
படம் முடிவில்
சேகர் தத்தாதிரி பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் சொன்னார் கேள்விகள் பலவிதமாக
இருந்தது
ரஷ்யாவில் இருந்து
வரும் Amur Falcon நாகலாந்தில் மட்டும்தான் வேட்டையாடப்படுகிறதா?
நாகலாந்தில் இருக்கம்
உயரமான மரங்கள் போல் அவை வலசை செல்லும் இடங்களில் அதே மரங்கள் இருகிறதா? அதில்தான்
அமர்கிறதா?
உள்ளூர் வேட்டைக்காரர்களுக்கு
மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதா?
இதே போல் இன்னும் சில
கேள்விகளும் மற்றும் தலைப்பை விட்டுவிட்டு வேறு சில கேள்விகளும் கேட்கப்பட்டது.
பொறுமையாக, தெளிவாக, எந்த வித பரபரப்பின்றி பதில் சொல்லி கொண்டிருந்தார்.
சிலபேர் இணயத்தில் குறும்படம்
உள்ளதா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலால் நாங்கள் தாமதமாக வந்தோம் என்று
சொன்னதால் மீண்டும் அவர்களுக்காக ஒளிபரப்பப்பட்டது.
Route from nagaland to S.Africa- conservation india |
வலையில் மாட்டிகொல்கிறது-conservation india |
Pangti
village in Nagalandதை உலக Amur Falcon தலைநகரம் என்றே அழைக்கப்படுகிறது.
பத்து இலட்சத்திற்கு மேல் Amur Falconனை ஒரே இடத்தில பார்க்க
முடியும்.
Raptorsல் உலகில் Amur Falconதான் மிக அதிக துரம் வலசை செல்லும் பறவையாகும்.
Project Team |
“The
state government is committed to end the unfortunate killings of the migratory
Amur Falcons in Nagaland while they are passing through the state.
“It is our duty to protect the Amur Falcons
and, in true Naga tradition of hospitality, treat them as honoured and esteemed
guests”.
- செழியன்
உங்கள் கருத்துகளை தெரிந்துகொள்ள
lapwing2010@gmail.com
lapwing2010@gmail.com
.
No comments:
Post a Comment