Saturday, 31 December 2016

பறவை நோக்குதல்- 7 : Wader Birds




உயிர் வாழ்வதற்கு எங்கு வேண்டுமென்றாலும் செல்லுவோம் என்று பறவைகள் தங்கள் இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாசகம் மனிதர்களுக்கு பொருந்துதோ இல்லையோ ஆனால் பறவைகளுக்கு கண்டிப்பாக பொருந்துகிறது.

Suggestion:

ஆரம்பத்தில் புதியவர்களால் பறவைகளை இனம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் ஏறக்குறைய பறவைகள் எல்லாம் ஒன்று போலவே தெரியும். புத்தகத்தை வைத்து அவற்றை சரிசெய்யலாம் என்றாலும் நாம் நேரில் பார்க்கும் பறவையின் நிறத்திற்கும் புத்தகத்தில் இருக்கும் பறவையின்  நிறத்திற்கும் பெரும்பாலும் சிறு சிறு வேறுபாடு இருக்கவே செய்யும். அதனால் புத்தகத்தின் மூலம் நம்மால் ஐம்பது சதவிகிதம் மட்டுமே கற்றுக் கொள்ளமுடியும்.

சிறந்த வழி என்றால் பறவை நிபுணர்களுடன் சென்று பறவைகளை பார்ப்பது தான். சுலபமாக கற்றுகொள்ள முடிவது மட்டுமில்லாமல் நிறைய தகவல்களும் தெரிந்து கொள்ளமுடியும். அதனால் புதியவர்கள் பறவை நிபுணர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, சென்று பாருங்கள். கோயில் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் அமைப்புகள் போல சில அமைப்புகள் பறவை நோக்குவதற்கு என்று பிரத்தியோக ஏற்பாடு செய்கிறது அவர்களுடனும் செல்லலாம்.


WADERS:

அங்கிலத்தில் பறவைகளை பல வார்த்தைகள் மூலம் உட்பிரிவுகளாக பிரித்து உள்ளார்கள் அவை எல்லாம சுலபமாக பறவைகளை நம்மால் பிரித்து தெரிந்துகொள்ளவே ஆகும்.
அதில் ஒரு வார்த்தை தான் Waders.

குளிர்காலத்தில் இந்த வார்த்தையை பறவை நோக்குபவர்களால்(BIRD WATCHERS) அதிகம் உச்சரிக்கப்படும். Waders பார்க்கலாம் என்று சென்றேன் ஆனால் நிறைய இல்லை போனமுறை நிறைய பார்த்தேன் என்றும் பேசுவதை கேட்கலாம்.

Waders பார்பதற்கு முன்பு நீர்நிலை பறவைகள் பற்றி :

நீர்நிலை பறவைகளில்(Wetland Birds)இரண்டு வகை உண்டு 

1. நீரில் நீந்தும் பறவைகள்(Swimming Birds).

உதாரணம்: 

நாமக்கோழி(Coot), பட்டைதலை வாத்து(Bar Headed Goose), புள்ளி மூக்கு வாத்து(Spot Billed Duck), ஊசிவால் வாத்து(Pintail), முக்குளிப்பான்(Little Grebe), வாத்து வகைகள் etc ...... 

2. நீரில் நீந்தாமல் கரை ஓரங்கள், நீரின் நடுவில் இருக்கும் திட்டுகள், இலைகள் மேல் என்று இப்படி நின்று, நடந்து, அங்குள்ள சேறுகளை கிளறி இரையை பிடித்து வாழும் பறவைகள். இவ்வகை பறவைகள் நீரில் நீந்தாது. 

உதாரணம் :
உள்ளான் வகைகள், இராகொக்கு(Night Heron), மடையான்(Pond Heron), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), நத்தை குத்தி நாரை(Open Bill Stork), பவளக்கால் உள்ளான்(Black Winged Stilt), செங்கால் நாரை(White Stork), அரிவால் மூக்கன்(Black headed Ibis), கரண்டிவாயன்(Spoon Bill), உண்ணிக்கொக்கு(Cattle Egret), சாம்பல் நாரை(Grey Heron), உப்புகொத்தி(Plover), இலைக்கோழி(Pheasant Tailed Jacana), சிகப்பு மற்றும் மஞ்சள் மூக்கு ஆட்காட்டி(Red and Yellow Lapwing), பூநாரை(Flamingo). etc .....
 
இப்பொழுது Waders பார்ப்போம் ?

Waders என்பது இரண்டாது வகையை சேர்ந்தது பறவைகள் ஆகும் அதாவது நீரில் நீந்தாமல் கரை ஓரங்கள் மற்றும் அங்கு இருக்கும் சேற்றில், நீரின் நடுவில் இருக்கும் முட்புதர்களில் காணப்படும்.
நீர்நிலை பறவைகள்(Wetland Birds) என்பதால் எல்லா பறவைகளும் நீரில் நீந்தும் என்று கிடையாது. அப்படி நீரில் நீந்தாமல் கரை ஓரங்களில் பார்க்க கூடிய பறவைகள் தான் Waders ஆகும்.

குளிர்காலத்தில் பறவை சரணாலயத்தில் நிறை Wading Birds பார்க்க முடியும். இதில் அதிகம் வலசை வரும் பறவைகள் ஆகும்(Migration Birds). சென்னையில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நிறைய Wading Birds பார்க்கலாம். Wading Birdsக்கு ஏற்ற நிலமாக பள்ளிக்கரணை உள்ளதால் உள்ளான்கள், அரிவாள் மூக்கன், மடையான், சிறிய கொக்கு, உண்ணிக்கொக்கு என்று அதிக பறவைகள் நம் பார்வைக்கு கிடைக்கும்.

Waders அடையாளங்கள்:

நீண்ட கால்கள் இவற்றின் முக்கியமான அடையாளம் ஆகும்(Waders- Long legged water birds). கால் விரல்கள் பெரும்பாலும் நீளமாக இருக்கும். மூன்று விரல்கள் முன்னோக்கியும், ஒரு விரல் பின்னோக்கியும் காணப்படும். இதனால் பறவை சேற்றை கிளறும்பொழுது விழாமல் பாதுகாக்கும்.
உலகில் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட wading birds உள்ளது. 

நீரில் நீந்தும் பறவைகளின் கால்கள் குட்டையாக, விரல்கள் இடையே சவ்வு போன்று இணைப்பு இருக்கும். இவை நீரில் நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும்.வாத்துகளின் கால்களை கவனித்து பார்த்தாலே தெரிந்துவிடும். நீரில் நீந்தும் பறவைகளின் கால்கள் பெரும்பாலும் உடம்பின் பின் பகுதியில் அமைதிருக்கும் இதனால் நீரில் நீந்துவதற்கு மிக சுலபமாக இருக்கும்.
நம் நாட்டில் இருக்கும் Wading Birds இரண்டைப் பற்றி பார்ப்போம்.

நீலவால் இலைக்கோழி (Pheasant Tailed Jacana) :

image-wiki
பெயருக்கு ஏற்றாற்போல் இலைகள் மேல் நடப்பதால் இலைக்கோழி. நீண்ட வாலை வைத்து இவற்றை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். கால் விரல்கள் மிக நீளமாக இருப்பதை நடக்கும் பொழுது, பறக்கும் பொழுது தெளிவாக பார்க்க முடியும்.

ஆங்கிலத்தில் இதன் வாலின் நீளத்தை வைத்து Phesant Tailed Jacana என்று பெயர். முட்டை இடும் சமயத்தில் ஆண் பறவையின் நிறம் தங்க நிறத்தில் அதன் கழுத்து பின்பக்கம் இருக்கும். அடர் காப்பி மற்றும் வெள்ளை நிறத்தில் உடல் அமைந்திருக்கும். நீண்ட வால் இருக்கும்.
முட்டை இடாத சமயத்தில் வெளிர் காப்பி நிறத்தில் காணப்படும். அதன் நீண்ட வால் இருக்காது. நீலவால் இலைக்கோழி நீந்தும் தன்மையுடையுது ஆனால் நடந்தே தன் வாழ்கையை நடத்தும். 
இந்தியா முழுவதும் காணப்படும். உணவு என்று பார்த்தால் பூச்சிகள், தவளை, மீன் மற்றும் சதுப்பு நிலத்தில் இருக்கும் உயிரிகளை உண்டு வாழும் தன்மையுடையுது.

பவளக்கால் உள்ளான் (Black Winged Stilt) :

Black winged stilt-Image-wiki
கால்கள் பவள (சிகப்பு) நிறத்தில் அதனால் தமிழில் பவளக்கால் உள்ளான். அதன் சிறகு கருப்பு நிறத்தில் இருப்பதை வைத்து ஆங்கிலத்தில் Black Winged Stilt

மிக மிக நிளமான கால், கூறிய நீளமான அலகு, சிறிய உடம்பு இவையே பவள கால் உள்ளான். நிறம் என்று பார்த்தல் வெள்ளை உடம்பு, கருப்பு சிறகு, பவள நிறத்தில் கால், கருப்பு நிற அலகு இவையே பறவையின் நிறங்கள் ஆகும்.

Madras Museum
சென்னை பள்ளிக்கரனையில் பவளக்கால் உள்ளான் அதிகம் நடமாடுவதை பார்க்க முடியும் அதன் தொடர்ச்சி பெரும்பாக்கம், கேளம்பாக்கம், மணப்பாக்கம் என்று காணப்படுகிறது.
சென்னை அருங்காட்சியத்தில் இதன் உடம்பை பதப்படுத்தி வைத்துள்ளார்கள்.இந்தியா முழுவதும் காணப்படும் பவளகால் உள்ளான் உள்நாடு வலசை பறவையாகும் (Local Migration).

இந்த வருட Wading பறவைகளை எதிர்பார்த்து இருக்கும் பறவை நோக்குபவர்கள் (Bird Watchers) பற்றி Waiting for waders என்ற தலைப்பில் ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியுட்டுள்ள செய்தி.


வெளிநாட்டில் இருந்து வலசை வரும் Wader Bird:
உள்ளான்(Common Sandpiper):

இந்தியாவுக்கு வலசை வரும் உள்ளான் ஒரு Wader ஆகும். இந்தியாவுக்கு வலசை வரும் முதல் பறவை மற்றும் கடைசியாக செல்லும் பறவை உள்ளான்.  உணவு-தவளை, நத்தை, மீன்கள், லார்வா, சிலந்தி என்று இதன் உணவு நீண்டு கொண்டே செல்கிறது.

உள்ளான் நிறம்:

common sandpiper- image-wiki
Olive Brown - மேல் பாகம்
White – அடிபாகம்
Yellow - கால்
Dark – அலகு
Brown - மார்பு 

வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் தனியாக ஒரு சாதா உள்ளான் தன் வாலை ஆட்டி கொண்டே அலகை தண்ணியில் நுழைப்பதும் எடுப்பதும் இருப்பதை வெகுநேரம் வெகுஅருகில் பார்த்தபின்பும் என்னை பொருட்டாகவே நினைக்கவில்லை. பெரும்பாலான நீர்நிலைகளில் சாதா உள்ளானை பார்க்க முடியும். 

Other informations about Waders:

1.Waders பறவைகள் Shore Birds என்றும் அழைக்கப்படுகிறது.

2.Waders வார்த்தைக்கு தமிழில்- தண்ணிரில் நடந்து செல்ல கூடிய நீண்ட கால்களுடைய பறவை.

3.Shore Birds வார்த்தைக்கு தமிழில்– ஏரி மற்றும் கடல் கரையோரம் காணப்படும் பறவைகள்.

4.Wader பறவைகளில் பல விதமாக மிக சிறிய, சிறிய, நடுத்தர, பெரிய, மிக பெரிய என்ற அளவுகளில் உள்ளது. உருவத்தில் பெரிய Wading Birds கூட உண்டு..

5.உலகின் மிக சிறைய waders- Least Sandpiper ஒரு சிட்டு குருவியின் அளவே இருக்கும். Little Stint Wader பறவையும் மிக சிறியதே.
LEAST SANDPIPER- IMAGE-WIKI

6.மிக நீண்ட கால்களை வைத்தே சுலபமாக wadersசை கண்டுபிடிக்கலாம். 

7.உலகின் எல்லா இடத்திலும் உள்ளது அண்டார்டிக்கா கண்டத்தை தவிர.

-தொடரும்                               
 - செழியன்


உங்கள் கருத்துகளை தெரிந்துகொள்ள 

lapwing2010@gmail.com
                                          

No comments:

Post a Comment