Monday 25 December 2017

10th சென்னை பறவை பந்தயம்



பறவை பந்தயம் என்ற வார்த்தை பறவைகளை பந்தயம் விடுவார்கள் என்ற அளவிலேயே இரண்டு வருடம் முன்பு தெரிந்து இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர் செயல் என்று தெரிந்து பிறகு இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வது என்ற முடிவால் தயாராகிவிட்டேன்.

Thursday 14 December 2017

புத்தகம்- வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்......



பறவை புத்தகங்கள் தமிழில் குறைவு என்பது எப்படி உண்மையோ அதேபோல் நிறைய புதியவர்கள் எழுத வந்து கொண்டிருப்பதும் உண்மையே. அப்படி ஒரு புதிய புத்தகத்தை சமிபத்தில் படிக்க நேர்ந்தது.

“வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்” என்ற தலைப்பு, கபாலிடா என்பது போல் உள்ளது. பறவைகளை பார்ப்பது, அவற்றை தெரிந்து கொள்வது, விவாதிப்பது போல், பறவைகளின் வாழிட அழிப்பு அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைதல் அல்லது முழுவதும் அற்று போதல் போன்றவற்றை  பற்றி புத்தகத்தில் விரிவாக நா.வினோத் குமார் எழுதி உள்ளார். இந்து தமிழ் நாளிதழில் பணிபுரியும் வினோத், உயிர்மூச்சு பகுதியில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக தந்துள்ளார்.

ஆரம்ப கட்டுரை கான மயில் மற்றும்  புத்தகத்தின் நடுவே ஒரு கானமயில் கட்டுரை உள்ளது. இரண்டு கட்டுரையும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கானமயிலை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கு முழுகாரணம் மனிதர்கள்தான் என்பது இதில் சோகமே. பறவைகளின் வாழிடங்களை அழிக்காதிர்கள் அப்படி அழிக்காமல் இருந்தால் பறவைகளே தன் வாழ்கையை பார்த்துகொள்ளும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.