Saturday, 5 September 2026

Result - Vulture Drawing Competition

 இன்று உலக பாறு கழுகுகள் விழிப்புணர்வு தினம் ஆகும். 


மாணவ மாணவிகள் 265 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டு உள்ளனர். மொத்தம் 3 பரிசுகள் மற்றும் அனைவருக்கும் E -Certificate என்று அறிவித்து இருந்தோம். 


வந்து உள்ள ஓவியங்கள் பார்த்த பிறகு 3 நபர்களுக்குப் பரிசு என்பதை 18 பரிசாக மாற்றி உள்ளோம். அவற்றை 6ஆம் வகுப்பு- 7 ஆம் வகுப்பு  ஒரு பிரிவாகவும். 8ஆம் வகுப்பு , 9 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் 6 பரிசுகள் என்று வகைப்படுத்தி உள்ளோம்.

ஒவ்வொரு பிரிவிலும் Black and white ஓவியம் 3 மற்றும் வண்ணம் ஓவியம் 3 என்று பிரித்து பரிசு வழங்கப்படுகிறது. Black and White படங்கள் வண்ணம் படங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று இரண்டுக்கும் பரிசு கொடுக்க முடிவு எடுத்து உள்ளோம்.

நிறைய மாணவ மாணவிகள் நன்றாக வரைந்து உள்ளனர். ஆனால் Vulture வரைவதற்குப் பதிலாக வேறு கழுகு படங்கள் சிலர் வரைந்து உள்ளனர். அதனால் அவற்றைப் பரிசுக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை. 

கலந்து கொண்ட அனைவர்க்கும் அடுத்த ஒரு வாரத்தில் அவர்களுடைய மின்னஞ்சலுக்கு மின்னணு சான்றிதழ் அனுப்பப்படும். 

கலந்து கொண்ட அனைவர்க்கும் நன்றிகள் 

பரிசு பெற்றவர்கள் விவரம் 

6th Standard and 7th Standard ( 6 Prizes)

CLEMENT.P - 6th Standard - Coimbatore

Kavin N - 6th Standard - Chennai

Anwitha.P - 6th Standard - Madurai

RIFAYA A - 6th Standard -Kanyakumari

DINISH R - 7th Standard - Dharmapuri

RUTHISAN S - 7th Standard - Kanyakumari

8th Standard and 9th Standard (6 prizes)


J Dhanusri - 8th Standard- Madurai

Niranjana G - 8th Standard - Thoothukudi 

MUKKESH N - 8th Standard- Kanyakumari

Iniya Karthik - 9th Standard - Madurai

Mrithini.S - 9th Standard - Madurai

R. NITHERSHNA - 9th Standard - Thirunelveli


10th Standard, 11th Standard and 12th Standard (6 prizes)

Mahasri - 10th Standard - Valapadi 

Joel J - 10 Standard

Gayathri Devi G - 11th Standard - Madurai

N.Gobika Shree - 11th Standard - Hosur

RINCY MEBI J -12th standard - Kanyakumari

SAKTHI.K -12th Standard - Thoothukudi 























International Vulture Awareness Day

இன்று இரவு 8 மணிக்கு 




1. தமிழ்நாட்டில் உள்ள 4 பாறு கழுகுகளை அறிந்து கொள்வோம் 

2. பாறு கழுகுகள் காட்டில் இருந்தால் என்ன நன்மைகள் ?

3. மற்ற பறவைகளில் இருந்து பாறு கழுகுகளுக்கு என்ன வித்தியாசம்?

4. என்ன இரை சாப்பிடும்? எப்படி கூடு கட்டுகிறது? எந்த மரத்தில் வாழும்? 

5. ஒரு நாள் முழுவதும் பாறு கழுகுகள் செயல்பாடுகள் என்ன ?

6. ஏன் அழியும் நிலையில் உள்ளது? 

கோடம்பாக்கத்தில் சுற்றி வந்த பாறு கழுகுகள் ஏன் இப்போது இல்லை?

பாறு கழுகுகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம்!

உரை : சு.பாரதிதாசன்

தேதி : 05-09-2026 
இரவு : IST 8.00Pm 

Zoom:

Meeting ID: 852 2128 8156
Passcode: 114588

or

Zoom Link

https://us02web.zoom.us/j/85221288156?pwd=PYiALdvu7DNyAayCwjq26d2t5ckJi8.1



Saturday, 29 August 2026

Student Ornithology Course - Tamil

 


காக்கைக் கூடு ஒருங்கிணைக்கும் 

Student Ornithology Course 

6 Weeks- Online Class (Sunday)

2 Direct Field Session

Week 1 – Introduction to Birds

Week 2 – Bird Identification

Week 3 – Bird Behavior

Week 4 – Bird Ecology

Week 5 – Bird Survey & Citizen Science

Week 6 – Bird Conservation

2 Direct Field Session

First Batch starts on 27-09-2026,

Age 10 to 21,  

Certificate of Completion  

Registration Link -  https://forms.gle/Eu342CMz3RWVdAe69

Last Date of Apply : 20-09-2026,  

Free Course

தமிழில் நடைபெறும் 

#காக்கைக்_கூடு_சூழலியல்_பள்ளி 


Saturday, 21 June 2025

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் - ஆதி வள்ளிப்பான் போட்டி கட்டுரைகள்

 "சூழலியலையும், சூழலியல் தரும் வாழ்வியலையும் அனுபவித்து உணர்ந்தவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்!"


புழு பூச்சிகளை கண்டதுமே ஒரு வித அருவருப்பும் பயமும் ஏதோ காணக்கூடாத ஒன்றை கண்டது போன்ற உணர்வும் நம்மில் பலருக்கு தோன்றும். இன்னும் சிலரோ அதனை அடித்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களுடைய இந்த "எனைத் தேடி வந்த சிற்றுயிர்" என்ற நூலை ஒருமுறை வாசித்து விட்டீர்கள் எனில் எந்த பூச்சிகளையும் கண்டு அருவருப்பும் பயமும் தோன்றாது. அடித்துக் கொள்ளவும் மாட்டோம். மாறாக பூச்சிகளின் அருகில் அமர்ந்து அதனை கூர்ந்துக் கவனிப்போம்! அதன் அழகை ரசிப்போம்! ஏன்? கைப்பேசியை எடுத்துக் கொண்டு வித விதமாக புகைப்படம் எடுக்க தொடங்கி விடுவோம்.

நம் வீடுகளில் தற்செயலாகவோ இல்லை தினமுமோ வந்து கொண்டிருக்கக் கூடிய பூச்சிகளை ஒரு உயிராகக் கூட நாம் நினைத்திருக்க மாட்டோம். ஆனால், இந்நூலின் ஆசிரியர் அவருடைய வீட்டில் மற்றும் பொது இடங்களில் கண்ட பூச்சிகளை அழகாக புகைப்படம் எடுத்து அதனைப் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொண்டு அழகிய நூலாக உருவாக்கியுள்ளார். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அழகானவற்றை கவனிக்காமல் விடுவதால் தான், தேவையில்லா சுமைகளை நம் தலையில் சுமந்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த இயற்கையை, இயற்கை கொடுத்த உயிர்களை ரசிக்கத் தொடங்கி விட்டோமெனில் இப்பூவுலகில் மகிழ்வாக வாழலாம்.

சூழலியல் புத்தக விமர்சன போட்டி -4 ( Aadhi Valliappan Books)

 காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி நான்காவது  மாத முடிவு (20 -MARCH -2025 TO 10-APRIL-2025)

முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.

இரண்டாவது மாதம் Feb2025 சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் புத்தகங்கள் 

மூன்றாவது மாதம் (MARCH 2025) -கோவை சதாசிவம் புத்தகங்கள் முடிவு 

நான்காவது மாதம்( April 2025( - ஆதி வள்ளியப்பன் புத்தகங்கள் முடிவு இங்கு அறிவிகபடுகிறது. 

அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!

வெற்றி பெற்றவர்களுக்கு காக்கைக் கூடு சார்பாக வாழ்த்துகள் 


Monday, 21 April 2025

பூச்சிகளின் தேசம் - கோவை சதாசிவம்

 


மனிதர்களின் தேசத்தில் பிறந்து மனிதர்களின் தேசத்தில் வாழ்ந்து மனிதர்களின் தேசத்தை எழுதி மனிதர்களின் தேசத்தை வாசித்து மனிதர்களின் தேசத்தை விமர்சித்துச் சலிப்பு ஏற்பட்ட நிலையில் 'பூச்சிகளின் தேசத்தை'க் கடந்து பூச்சிகளின் தேசத்தை அறிந்து வியந்து மனிதர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதம் ஒரு தொகுப்பைத் தந்துள்ளார் கோவை சதாசிவம். 

மனிதர்களைக் கவிதையாக்கியவர் பூச்சிகளைக் கட்டுரையாக்கியுள்ளார். பூமி என்பது அனைத்து உயிர்களும் வாழ்வதற்கானது. மனிதர் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே இயற்கையைச் சார்ந்து இயற்கையோடு இணைந்து இயற்கையாகவே வாழும் தன்மை உடையது. மனிதர் மற்றவைகளையும் வாழவிடுவதில்லை. 

'பூச்சிகளின் தேசம் ' மூலம் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்து பூச்சிகள் வாழ வேண்டியவை, வாழ வேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளார். 

கரையான் குறித்து எழுதும் போது கரையான் புற்றைப் பேசியுள்ளார். ( கரையான் என்பதே சரி) புற்று என்பது புல், மரத்துகள், மண், கரையான் அமிலம் ஆகியவற்றால் உருவாக்கப் படுகிறது என்றும் பாம்புகளால் கட்டப்படுவதில்லை என்றும்  மூடநம்பிக்கையை விளக்கியுள்ளார்.

Tuesday, 15 April 2025

சூழலியல் புத்தக விமர்சன போட்டி -3 ( KOVAI SADHASIVAM BOOKS)

 காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி மூன்றாவது  மாத முடிவு (20 -MARCH -2025 TO 10-APRIL-2025)

முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.

இரண்டாவது மாதம் Feb2025 சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் புத்தகங்கள் 

மூன்றாவது மாதம் (MARCH 2025) -கோவை சதாசிவம் புத்தகங்கள் முடிவு 

அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!

வெற்றி பெற்றவர்களுக்கு காக்கைக் கூடு சார்பாக வாழ்த்துகள் 



Saturday, 15 March 2025

புத்தக விமர்சன போட்டி -2

 

காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி இரண்டாவது மாத முடிவு 

முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.

இரண்டாவது மாதம் Feb2025 சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் புத்தகங்கள் 

அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!

வெற்றி பெற்றவர்களுக்கு காக்கைக் கூடு சார்பாக வாழ்த்துகள் 



முதல் பரிசு!

சிவ பிரசாத் - மதுரை

இரண்டாவது பரிசு!

இராஜதிலகம் பாலாஜி  - சாயல்குடி

மூன்றாவது பரிசு!

பாண்டியன்  - கடலூர் 

முத்து - சென்னை

மூன்றாவது மாத சூழலியல் புத்தக விமர்சன போட்டி குறித்து வரும் 20-3-2025 அன்று அறிவிக்கப்படும்

Tuesday, 18 February 2025

புத்தக விமர்சனப் போட்டி - 1

 காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி முதல் மாத விவரங்கள்!

முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.

அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!

இவர்கள் அனுப்பிய விமர்சன கட்டுரைகள் வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுகிறோம். அதற்கான வலைத்தள முகவரி விரைவில் தெரிவிக்கிறோம்!




முதல் பரிசு!

பாக்யலட்சிமி - மதுரை

இரண்டாவது பரிசு!

சீதாலட்சுமி - சென்னை

மூன்றாவது பரிசு!

சரண்யா - திண்டுக்கல்

தமிழ் முகில் - சென்னை

இரண்டாவது மாத சூழலியல் புத்தக விமர்சன போட்டி குறித்து வரும் 20-2-2025 அன்று அறிவிக்கப்படும். 

Friday, 31 January 2025

Birds In Winter

 

Bird Watching-Perumbakkam lake

வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் தான் தமிழ்நாட்டு பத்திரிகைகளை குளிர்காலத்தில் சுறுசுறுப்பாகிவிடுகிறது. 

அக்டோபர் மாதம் வந்தால்  தவறாமல் நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் செய்தி  வேடந்தாங்கல் திறக்கப்பட்டது. வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கி உள்ளன என்று செய்தி போடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு பறவைகள் என்று நாம் நினைப்போம். 


 ஆனால் உண்மை அப்படி இல்லை. அங்குள்ள பெரும்பாலான பறவைகள் உள் நாட்டு பறவைகள். 


வெளிநாட்டு பறவைகளுக்கும் வேடந்தாங்கல் திறப்பதற்கும் தொடர்பு இல்லை.  ஒரு கட்டத்தில் குளிர்காலத்தில் தான் பறவைகள் இருக்கும் என்ற எண்ணமும் இந்த செய்திகள் ஏற்படுத்திவிடுகிறது. மற்ற எந்த மாதத்திலும் பறவைகளை குறித்து பத்திரிகைகள் செய்தி போடுவது இல்லை. 


சரணாலயங்களில் கூடு கட்டி கொண்டு இருக்கும் பறவைகள் அனைத்தும் நம் நாட்டு பறவைகளே. வெளிநாட்டு பறவைகள் இங்கு கூடு கட்டுவதில்லை.  இதை தெளிவாக புரிந்து கொண்டால் பத்திரிகை செய்திக்கும்- உண்மைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்வீர்கள். 




சரணாலயங்களில் உள்ள நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் இரண்டும் கலந்து இருக்கும் பிரித்து பார்க்க தொடங்குவது மட்டுமே நம் வேலை. 


அப்படி இந்த குளிர் மாதத்தில் சென்னை -சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் பறவைகள் அவதானிக்க சென்றோம். நிறைய சிறுவர்கள், பெரியவர்கள் வந்து இருந்தனர். கரையோர பறவைகள், நீரில் நீந்தும் பறவைகள், இரை கொல்லி பறவைகள் என்று கலவையாக இருந்தான. 


இங்கு அனைத்து பறவைகளும் மிகுதியாக இருந்தன. புதியவர்களுக்கு இவை வெளிநாட்டு பறவைகள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது, அதனால் தொடக்கத்தில் சிறு அறிமுகம் கீழ் உள்ளது போல் கொடுத்தோம். 


பறவைகளை வீட்டு பக்கத்தில், வயல்வெளிகளில். நீர்நிலை அருகில், காடுகளில், மலைகளில், கடல் அருகில் என்று பார்க்க முடியும்.


 நீர் நிலை பறவைகள் காடுகளுக்கு செல்லாது. காடுகளில் உள்ள பறவைகள் வீட்டு தோட்டத்தில் வருவதில்லை. அந்த அந்த வாழிடங்களில் அப்படியா வாழும். இங்கு நாம் நீர் நிலை பறவைகள் பார்க்க வந்து உள்ளோம். இந்த பறவைகள் மற்ற வாழிடங்களில் செல்வதில்லை. 


ஏன் நீர்நிலை அருகில் பார்க்க வந்து உள்ளோம் என்றால் நிறைய பறவைகளை ஒரே இடத்தில் காண நீர்நிலை நல்ல இடம் ஆகும். மற்ற வாழிடங்களில் உள்ள பறவைகள் அதன் வாழிடங்களுக்கு சென்று பார்த்தால் இந்த அளவு ஒரே இடத்தில் காண முடியாது. 



அதனால் புதியவர்கள்  முதலில் நீர்நிலை அருகில் பறவைகள் பார்க்க தொடங்கினால் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும் அதனால் தான் நாம் இங்கு வந்து உள்ளோம் என்று அறிமுகத்துடன் பறவைகள் நோக்க தொடங்கினோம். 


இங்கும் உள்ள நாட்டு பறவைகள்-வெளிநாட்டு பறவைகள் கலந்து குதுகலமாக இருந்தன.


முதலில் எங்களுக்கு மிக அருகில் இருந்த தாழைக்கோழி கவனத்தை ஈர்த்தது.  கூடவே உண்ணிக்கொக்கு. சிறிய கொக்கு, உள்ளான், காணங்கோழி கலந்து இருந்தன. 


சாம்பல் நாரை, செந்நீல நாரை அருகில் அருகில் நின்று நோட்டம் விட்டன.  சட்டென்று இரண்டு அரிவாள் மூக்கன் பறந்த எங்களுக்கு டா டா காட்டி சென்றது. கரண்டி வாயன் அதை கவனிக்காமல் அலகை நீரில் நுழைத்து துழாவிக் கொண்டு இருந்தன. தகைவிலான் காலை முதல் மாலை வரை பறந்து கொண்டே இருக்கும் என்ற செய்தி புதியவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.  சில நேரம் மின்சார ஒயரில் நூற்றுக்கணக்கில் அமர்ந்து இருக்கும் அதையும் உங்கள் பறவை நோக்குதலில் காணலாம் என்று சொல்லி இருந்தோம் 


சங்குவளை நாரை, கூழைக்கடா, பவளக் கால் உள்ளான் பறவைகள் ஏராளமாக இரை தேடி கொண்டும், நகர்ந்து அங்கு இங்கு செல்வதும் பிசியாக காணப்பட்டது.  நாம் இப்போது வெளிநாட்டு பறவைகள் பாக்கம் கவனத்தை திருப்புவோம்.


ஊசிவால் வாத்து, தட்டை வாயன், சேற்று பூனைப்பருந்து முக்கிய இடத்தை பிடித்து இருந்தது.  ஒவ்வொன்றின் அடையாளம்தான் பறவையை பிரித்து அறிய எளிமையாக இருக்கும். 


ஊசி போன்ற வால் நீண்டு இருப்பதை பார்த்தவுடன் இதை ஊசி வால் வாத்து என்றும், அலகு தட்டையாக நீந்தி கொண்டு இருக்கும் பறவைதான் தட்டை வாயன் என்று தமிழில் எளிமையாக இனம் கண்டு கொள்ள முடியும். 


இத்தகையை பறவைகளை பிடித்து உன்ன இதன் பின்னாலே வரும் சேற்று பூனை பருந்தின் வழக்கம். நாங்கள் பார்க்கும் போது நீர் இல்லாத நிலத்தில் நின்று நோட்டமிட்டு கொண்டு இருந்தன. 


ஏறக்குறைய 30 வகை பறவைகள் கண்டு களித்தோம். நினைவில் உள்ளவற்றை குறிப்பிடுகிறேன்!


  1. கதிர்குருவி 

  2. சிகப்பு மூக்கு ஆட்காட்டி 

  3. பவளக்கால் உள்ளான்

  4. தாழைக்கோழி 

  5. அறிவாள்  மூக்கன்  

  6. கரண்டிவாயன் 

  7. சாம்பல் நாரை 

  8. செந்நீல நாரை 

  9. பாம்புத்தாரா 

  10. வெண்மார்புக் கானாங்கோழி

  11. இலைக்கோழி 

  12. கூழைக்கடா 

  13. வெண்மார்பு மீன்கொத்தி 

  14. நீலவால் பஞ்சுருட்டான் 

  15. உண்ணிக்கொக்கு 

  16. சிறிய கொக்கு 

  17. நடுத்தர கொக்கு 

  18. பெரிய கொக்கு 

  19. சங்குவளை நாரை 

  20. புள்ளி உள்ளான் 

  21. உள்ளான் 

  22. ஊசிவால் வாத்து 

  23. தட்டை வாயன் 

  24. சேற்று பூனை பருந்து 

  25. தகைவிலான் 

  26. சாம்பல் தலை ஆட்காட்டி 

  27. கரிச்சான் 

  28. மடையான் 

  29. புள்ளிமூக்கு வாத்து 

  30. Baillon's crake


ஒரே இடத்தில் இவ்வளவு பறவை வாகைகள் பார்க்க சிறந்த இடமாக நீர் நிலைகள் இருக்கிறது.

குளிர்காலம் இன்னும் இதில் சேர்ந்து கொள்வதால் பறவைகளுக்கும் கொண்டாட்டம் அதை

பார்க்கும் நமக்கும் கொண்டாட்டம்.


மீண்டும் ஒரு பறவை சந்திப்பில் சந்திப்போம் என்று கலைந்தோம். !




Monday, 9 May 2022

Fire of Sumatra

 


தீயை எதிர்கொள்ள, அணைக்க தெரிந்த மனிதர்களுக்குக் கூட தன் வீடு தீப்பற்றி எரிந்தால் பதைபதைத்துப் போய்விடுவான்.

பல குடிசைகள் எரிந்து சாம்பலானதைப் பார்த்து இருப்போம். ஆனால் தீயை எதிர்கொள்ளத் தெரியாத, அணைக்க தெரியாது விலங்குகள் வாழிடமான காடு  தீ பிடித்தால் என்ன ஆகும்? மாண்டு போவதை தவிர வேறு வழியில்லை.


காட்டு தீ இரண்டு விதங்களில் ஏற்படுகிறது பலத்த காற்று வீசுவதால் மரங்கள் இடையே ஏற்படும் உராய்வால் தீ உருவாகும். இவை இயற்கையான ஒன்றாகும்.


இரண்டாவது மனிதர்கள் உருவாக்கும் தீ. செயற்கையான இந்த தீ காட்டில் வாழும் உயிரினங்களுக்கு இயற்கையாக உருவாகும் தீயை விடச் அதிக உயிர்ப் பலியை ஏற்படுத்துகிறது. 


இதை மையப்படுத்தி சுமத்ரா காட்டில் மனிதர்கள் ஏற்படுத்தும் தீயால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிர்ச்சேதங்களைப் புலி அதன் 3 குட்டிகள் கொண்டு விவரித்து வெளிவந்து உள்ள நாவல்தான் “Fire of Sumatra”. ஆசிரியர் ரமணா கைலாஷ்.