பறவை புத்தகங்களில் பறவைகள் மற்றும் அதன் தொடர் வகைகள் என்று விவரித்து எழுதியிருப்பார்கள்.
உதாரணம் Egret எடுத்து கொண்டால் உன்னிகொக்கு(Cattle Egret),சிறிய
கொக்கு(Little Egret), நடுத்தர கொக்கு(Intermediate
Egret), பெரிய கொக்கு(Large Egret) இதே போல் Heron எடுத்து கொண்டால் மடையான்(Pond Heron), இராகொக்கு(Night Heron), சாம்பல் நாரை(Grey Heron), செந்நாரை(Purple
Heron) என்று அதன் தொடர்ச்சியை பார்க்க முடியும் ஆனால் பறவை நோக்குதல் என்ற
இந்த தொடரில் பறவை வகைகள் தொடர்ச்சியாக இல்லமால் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல்
இருப்பதுபோல் காணப்படும்.
காரணம் ஒன்றும் இல்லை.
தொடர் எழுதும்பொழுது அந்த தலைப்புக்கு ஏற்ற பறவைகளை சொல்வதால் பறவைகளின் தொடர்ச்சி
விடுபடுகிறது.
ஆரம்பகாலத்தில்
பறவைகளை பிடித்து அல்லது கொன்று பாடம் செய்து அதன்பின் ஆராய்ச்சி செய்து
கட்டுரைகள் வரும். ஆனால் டிஜிட்டல் மயமான இப்பொழுது பறவைகள துல்லியமாக படம்
எடுத்து அவற்றை பின் தொடர்ந்து, காட்டிலேயே தங்கி கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். பறவைகளை கொல்வது
முற்றிலும் இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம் எந்த பறவை ஆர்வலரும் பறவைகளை கொல்வது
ஏற்றுகொள்ளகூடிய செயல் என்று சொல்லமாட்டார்கள்.
பறவை வகைப்பாட்டியல் (Classification):
பறவைகளை பார்த்த உடன்
அதன் பெயர் சொல்லுவோம் அது சரி என்றாலும் பறவைகளை அறிவியல் முறைப்படி எப்படி
பிரித்து உள்ளார்கள் என்று தெரிந்து கொண்டால் நாம் அவற்றை இன்னும் நுணுக்கமாக
கவனிக்க முடியும்.
அவர் வெள்ளைக்காரர்,
இவரா இவர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர், பழங்குடியனார், இந்தியர், சைனாகாரர் என்று
பிரித்து வைத்திருப்போம் இவர்கலெல்லாம் மனிதர்கள் தான் ஆனால் இவர்களின்
பழக்கவழக்கம், வாழும் பகுதிகள், உருவ அமைப்புகள், செயல்பாடுகள் வைத்து வகைபடுத்தி
வைத்திருப்போம். ஆனால் இவை அறிவியல் முறையில்லையென்றாலும் நம் வசதிக்காக இவ்வாறு
அழைத்துகொள்வோம்.
இதேபோல் பறவைகளை அதன்
உருவ அமைப்பு, உணவு முறை, அதன் செயல்பாடுகள், வாழும் பகுதிகள் போன்றவற்றை வைத்து
அறவியல் முறைப்படி பிரித்து வைத்துள்ளார்கள். அவற்றை பார்த்து விடுவோம்.
ஒரு பறவையை எடுத்துகொண்டால்
கீழே இருப்பதுபோல் அதன் அறிவியல் வகைப்பாடு இருக்கும்.
1.ORDER
2.FAMILY
-Scientific Name
-Common Name
ஏதோ கடினமாக இருக்கும் போல
என்று எண்ணிவிடாதிர்கள் உதாரணங்கள் மூலம் சொல்லிவிட்டால் சுலபமாக புரிந்து விடும்.
இதில் மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளது ஆனால் நாம் மேலே உள்ள Order, Family- S.name, C.name இவைதான் மிக முக்கியம் அதனால் குழம்பாமல்
இருக்க நாம் இவற்றை மட்டும் தெரிந்துகொள்வோம். Orderல் மொத்தம் 30 Order என்று பிரிக்கப்படுகிறது. உலகில் உள்ள எல்லா
பறவைகளும் இந்த முப்பது Orderகுள்ளே வந்து விடும்.
இதுவரை 30 Order என்று குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளம்
உதாரணம்:
Painted Stork |
சிட்டுகுருவி வகைகள் ஒரு orderலும், மஞ்சள் மூக்கு நாரை(PaintedStork) போன்ற பறவைகள் வேறு ஒரு Orderரிலும், பருந்து வகைகள் ஒரு Orderரிலும் என்று இது போல் முப்பது Orderரில் அனைத்து பறவைகளும் வந்துவிடும் அல்லது
அது போல் பிரித்து வைத்துள்ளார்கள்.
அடுத்து முக்கியமானது இந்த orderல் உட்பிரிவாக 174 Family என்று பிரித்து உள்ளார்கள். அதாவது ஒரு நாடு மற்றும்
அதன் கீழ் மாநிலங்கள் இருப்பது போல். இவையெல்லாம் சிறு உதாரணம் கொண்டு பார்த்தால்
புரிந்துவிடும்.
உலகில் ஒரு மனிதன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்று பார்த்தபிறகு அடுத்து அவன்
அந்த நாட்டில் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்று பார்ப்போம் அதேபோல் ஒரு பறவை எந்த Order அடுத்து அவை அந்த orderல் எந்த Family கீழ் வருகிறது என்று பார்க்க வேண்டும்.
வெளிநாட்டில் நாம் இந்தியாவில் இருந்து வருகிறோம் என்போம் ஆனால்
இந்தியாவில் நாம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்போம் அதுபோல்
சிட்டுக்குருவி போன்ற சிறய உருவ அமைப்பு கொண்ட பறவைகள் எந்த Order மற்றும் எந்த Family கீழ் உள்ளது என்று பார்ப்போம்.
Sparrow- Wikipedia |
சிட்டு குருவி (House Sparrow)
Order – Passerineformes
Family - PASSERIDAE
இவை பார்த்தபிறகு அந்த பறவையின் அறவியல் பெயர் மற்றும் அழைக்கும் அல்லது
சாதாரண பெயர் என்று இரண்டு பெயர்கள் இருக்கும் அவற்றை பார்க்கவேண்டும். நமக்கு
வீட்டில் கூப்பிடும் பெயர் மற்றும் பள்ளியில் வேறு பெயர் இருப்பது போல.ஆங்கில பறவை
புத்தகங்களில் கண்டிப்பாக சாதாரண பெயருடன் அறிவியல் பெயர் சேர்ந்தே கொடுத்திருப்பார்கள்.
அதனால் சிட்டுக்குருவியின் அறிவியல் மற்றும் அழைக்கும் பெயர்:
Scientific Name - Passer domesticus
Common
Name – House Sparrow
இதே போல் உலகில் உள்ள
ஒவ்வொரு பறவைக்கும் Order – Family -
Science and Common Name என்று உள்ளது.
Order மற்றும் அதன் கீழ் இருக்கும் Family மற்றும் அதில் இருக்கும் பறவைகள் பற்றி தெரிந்துகொள்வதற்கு:
http://birding.in/orders/anseriformes.htm
30 Orderல் இருக்கும் ஒரு முக்கியமான Order –
Passerineformes அவற்றை பற்றி
பார்ப்போம்.
Order –
Passerineformes:- இந்த Order கீழ்தான் அதிக பறவைகள் வருகிறது
பறவைகள் உலகில் Perching Bird or Passerine Bird என்ற வகை உள்ளது.. Perching Bird or Passerine Bird என்பது பெரும்பாலும் சிறிய
உடல் அமைப்பு கொண்ட பறவைகள் ஆகும். இவைகள் song bird என்றும்
அழைக்கபடுகிறது. இவற்றின் உடல் அமைப்பு சிட்டுகுருவி போல் அமைந்திருக்கும். இவ்வகை
பறவைகள் Order – Passerineformes
கீழ் வருகிறது.
இன்று உலகில்
இருக்கும் பறவைகளில் பாதிக்கு மேற்ப்பட்ட (ஏறக்குறைய 60%) பறவைகள் இந்த வகை
பறவைகளே. இதுவரை 5100 பறவை வகைகள் இதில்
அடங்கும். இவற்றின் கால் அமைப்பு மூன்று விரல்கள் முன்னோக்கியும் ஒரு விரல் பின்
புறம் அமைந்திருப்பதால் கிளையை பிடித்து அமரும்பொழுது கிழே விழாமல் இருக்க இந்த
விரல் அமைப்பு உதவுகிறது.
நம் வீட்டு
தோட்டத்தில் இருந்து உலகில் எல்லா இடத்திலும் song birdயை பார்க்க முடியும்
ஆனால் அண்டார்டிக்கா கண்டதை தவிர.
சிறிய அளவு, நடுத்தர
அளவு, பெரிய அளவு என்ற அளவுகளில் இவ்வகை பறவைகள் உள்ளது (அதாவது 7.5cm முதல் 117cm அளவு வரை).
மூன்று விதமாக இவ்வகை
பறவைகளை அழைக்கலாம்
1. passerine Bird or
2. Perching Bird or
3. Song Bird
Perching Bird வகைகளில் சிலது வலசை பறவைகள் இன்னும் சில பறவைகள் உள்நாட்டிலேயே
இருக்கும் பறவைகள் ஆகும். நிறைய பறவைகள் வெளிநாட்டில் இருந்து இந்திய
துனைகண்டதிற்கு வலசை வருகிறது. குளிர் காலத்தில் நாம் இவற்றை அதிகம்
பார்க்கமுடியும்.
உதாரணம்:
1.சிட்டு குருவிகளை எடுத்துகொள்வோம் இவை நம் வீட்டு தோட்டத்தில் மற்றும்
வீட்டு முற்றத்தில் பார்க்க முடியும் வலசை செல்லாத பறவையாகும்.
2.சோளப்பட்சி(RosyStarling) என்ற
பறவை குளிர்காலத்தில் நிறைய இந்தியாவில் பார்க்க முடியும். இவை இந்தியாவுக்கு வலசை
(Migration) வரும் பறவையாகும்.
Rosy Starling-Wikipedia |
சோளப்பட்சி
(ROSY STARLING)
ஐரோப்பா நாட்டில் இருந்து இந்திய துணைகண்டத்திற்கு வலசை
வரும் பறவை சோளப்பட்சி. பார்ப்பதற்கு நாகணவாய்(MYNA) போன்று காணப்படும் மற்றும்
நாகணவாய்(MYNA) அளவே இருக்கும். கூட்டமாக மின்கம்பம், மரத்தில் அமர்ந்திருப்பதை
பார்க்கமுடியும்.
Rosy என்ற பெயருக்கு ஏற்றாற்போல் அதன் உடம்பு Rose நிறத்தில் இருக்கும்.
திருநெல்வேலியில் நிறைய சோளப்பட்சியை பார்த்திருக்கிறேன். வயல்வெளிகளில் கூட்டமாக,
மரம் மற்றும் மின்கம்பி என்று பறந்துகொண்டிருந்தது.
Order – Passerineformes கீழ் இதுவரை 60 Familyக்கு மேல் இருப்பதாக உள்ள வலைத்தளம் மற்றும் அவற்றின் பெயர்கள்.
http://www.nhptv.org/wild/Passeriformes.asp
Perching Bird இவற்றின் கால்களில் முடிகள் எதுவும் இல்லாமல் உள்ளுக்குள் நரம்புகள்
இருப்பதை பார்க்கமுடியும். குளிர்காலத்தில் இவ்வகை பறவைகள் மரத்தில் அல்லது
கம்பியில் அமரும்பொழுது குளிரை போக்க இதன் வயிர் பகுதியில் இருக்கும் முடிகள் அதன்
கால்களுக்கு வெதுவெதுப்பு தன்மையை கொடுக்கும்.
கால்கள் மூலம்
விதைகளை பிடித்து மரகிளையில் அமர்ந்து அதன் அலகை கொண்டு உடைத்து சாப்பிடுவதற்கும்
அதன் கால்கள் உதவுகிறது.
மேலே உள்ள Order மற்றும் family பற்றி புரியவில்லை என்றால் மின்னஞ்சல்
இதவே போதும் என்று
நீங்கள் சொல்வது தெரிகிறது அதனால் தொடரும்........................
-செழியன்
lapwing2010@gmail.com
Very useful for the Tamil birders....thanks for your service
ReplyDeleteThanks for information in tamil
ReplyDelete