கடைசியாகப் பறவைகளுக்கும்
20 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இவை அமுலுக்கு வருகிறது. பறவைகள் மரத்தை
விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது.
மரத்தில் இருக்கும் பழங்கள், அங்கு வரும் பூச்சிகள் போன்றவற்றை உண்ணவேண்டும். உங்கள் மரத்தில்
வேறு பறவைகள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும்.
இந்த தகவல்களை
எப்படி அனைத்து பறவைகளாகும் தெரிவிப்பது என்ற விவாதம் தொடங்கியது. மக்களிடம் இந்த
பணியைக் கொடுத்துவிடுவோம் அவர்கள் அவங்க இடத்தில் இருக்கும் மரத்தில் சிறு தாளில் எழுதி
ஒட்டிவிடவேண்டும். மரத்தில் இருக்கும்
ஒரு மூத்த பறவையை மரத்தின் தலைவனாகக் கொண்டு அந்த பறவையிடம் சொல்லிவிடவேண்டும்.
அனைத்தும் தொலைக்காட்சியிலும்
Breaking Newsஆக ஓடிக் கொண்டிருந்தது.
