சமீபகாலங்களாக வனங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வனவிலங்குகளால்
பாதிக்கப்படுவது பற்றிய செய்தி அடிக்கடி
வெளிவருகிறது.. வனங்கள் வனவிலங்குகளுக்கு
உரிய வாழிடம் ஆகும். ஆனால்
, இதை உணராத சுற்றுலா
செல்லும் பலரும் வனவிலங்குகளை பாதிக்கும்வகையில் செயல்படும்போது வனவிலங்குகள்
மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மோதல் ஏற்படுகிறது.
தேசீய அளவில் ஒவ்வொருவருடமும் 15% அளவுக்கு வளர்ச்சி அடைவதாகக் குறிப்பிடப்படும் ஒரு துறை
ஆகும் சுற்றுலாத்துறை.. பொதுவாக
தென்னிந்தியாவில் இந்த வளர்ச்சி விகிதம் ஏறக்குறைய 10% என்று கூறப்படுகிறது.