“உசிரவீரம் என்ற மலையின் கீழ் இருந்த ஆசிரமத்தில் மருத்தன் என்ற பெயர் உடைய அரசர் ஒரு சமயம் ஒரு யாகம் நடத்தினார்.. யாகத்தில் கலந்துகொள்வதற்காக ரிஷிகளும், இந்திரஉலகத்தில் இருந்து தேவர்களும் வந்துசேர்ந்தார்கள்.. யாகத்தை முறியடிப்பதற்காக இலங்கையின் அதிபதியான ராவணனும் ஆசிரமத்துக்கு வந்துசேர்ந்தான்.
ராவணனைப் பார்த்துப்
பயந்துபோன தேவேந்திரன் வண்ணமயமான மயில் வடிவம் எடுத்துப் பறந்து யாகம் நடந்த
இடத்தில் இருந்து பறந்து தப்பித்துச்சென்றான்.
ராவணனுடைய கண்ணில் படாமல் தப்பித்த மகிழ்ச்சியால் தேவேந்திரன் மயில்களுக்கு
அருள் புரிந்தான்.. தன்னுடைய கண்கள்தான்
இனி முதல் உங்களுக்கு என்று வரம் தந்தான்..
அன்று வரை நீலநிறத்தில் மட்டுமே இருந்த மயிலுடிய தோகைகள் அப்போது முதல் பல
வண்ணங்களில் ஆகட்டும் என்றும், யார் உங்களைக் கொல்கிறார்களோ அவர்கள் உடனே தாமதம் இல்லாமல்
இறந்துபோவார்கள் என்ற வரத்தையும் மயில்களுக்குக் கொடுத்தான்.. வரங்களை வழங்கி அவற்றை பூமிக்கு
அனுப்பிவைத்தான் தேவேந்திரன்..! அன்று
முதல் பல வண்ணங்களை உடைய அழகோடு பூமிக்கு
வந்துசேர்ந்து பறவைகளின் இனத்திலேயே அழகொழுகும் வடிவத்துடன் உலா வருகின்றன என்று
ஐதீகம் சொல்கிறது.
ஐதீகம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.. காட்சிக்கும், கற்பனைகளுக்கும் அப்பால்.. மயில் என்ற சாதுவான இந்தப் பறவை மனிதர்கள்
எல்லோருக்கும் பிடித்தமான ஒரு வடிவம் ஆகும்..
இவற்றை மேலும் அறிந்துகொள்ளும்போது இவை நமக்குள் படைக்கும் மாயாஜாலங்கள்
நம்முடைய மனதுக்குள்ளும் என்றும் தோகை விரித்து ஆடத் தொடங்கும்..
இந்தியாவின் தேசீயப்பறவையான மயில் பறவை
இனங்களிலேயே வண்ணமயமானவை ஆகும்.. புராண
நூல்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும் மயில் மற்ற
எந்த உயிரினத்தைக் காட்டிலும் கவர்ச்சியும், முக்கியத்துவமும் பெறுபவை ஆகும். முருகப்பெருமானுடிய வாகனமான மயிலுடைய தோகைகள்
கிருஷ்ணபகவனுடைய கொண்டையிலும், தலைமுடியிலும் என்றும் அழகூட்டும் அணிகலனாக விளங்குவதும்
ஆகும்.
ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களில்
முக்கியமான கவர்ச்சியே இந்த மயில்கள்தான்..
கார்மேகங்கள் தவழ்ந்தாடும் வானத்தில் மழை வருதற்கு முன்பு மயில் தன் தோகை
முழுவதையும் விரித்து மழையை வரவேற்கின்ற நிமிடங்கள் உலகத்தில் மிகவும் அழகான
காட்சியாக கலைஞர்கள் வர்ணிக்கிறார்கள்..
மழை வருவது மயிலுக்குத் தெரியும்..
இந்த அற்புதத்தைப் பற்றி நமக்கும் தெரிந்தால் பின்னர் அவை என்றும் நம்
எண்ணங்களிலும் நாட்டியமாடிக்கொண்டிருக்கும்..
தூது செல்லும் காவியங்களிலும் மயில் தன் தூதுவன் வேலையை கச்சிதமாகச்
செய்திருக்கிறது.
பறவைகள் இனத்தில் கோழிகளின் குடும்பத்தை சேர்ந்த உயிரினங்கள் ஆகும் மயில்கள். பாவோ கிறிஸட்டாட்டஸ என்ற மயில்கள் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. நீலநிறம் உள்ள இந்திய மயில்கள், பச்சை மயில், காங்கோ மயில் என்று இவ்வாறு மூன்று இன மயில்கள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் ஆண் மயில் தலை முதல் வால் வரை 180230 செ.மீ வரை நீளம் உடையவை ஆகும். இவற்றின் உடல் எடை 4 முதல் 6 கிலோ ஆகும்.
பெண் மயிலுக்கு ஏறக்குறைய 3 முதல் 4 கிலோ வரை உடல் எடை
இருக்கும்.. வருடத்துக்கு ஒரு தடவை
மட்டும் பெண் மயில் முட்டை இடுகிறது. 4 முதல் 6 வரை முட்டைகள்
இடுகின்றன. பெண் மயில் அடை காத்து
முட்டைகளை பொரிக்கின்றது. 28 நாள்களில் முட்டை
விரிந்து குஞ்சுகள் வெளியே வரும்.
மழைக்காலம்தான் மயில்களின் இனச்சேர்க்கைக்கு உரிய காலமாகக்
கருதப்படுகிறது. ஆணும், பெண்ணும் பல ஆண் மற்றும்
பெண் மயில்களோடு இணை சேர்கின்றன.
அணைத்து உண்ணிகளான மயில்கள் இலைகள், பூக்கள், எலி,
ஔணான், அரணை, சிறிய பாம்புகள்
ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவற்றின்
ஆயுள்காலம் 20 வருடங்கள் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. உயரமான மரங்களும், பொந்துகளும், அடர்ந்த வனங்களும்
மயிலின் வசிப்பிடங்கள்..
பாறைக்குன்றுகளிலும், சிறிய
குருவிகளிலும், பொய்கைகளிலும் மயில்கள்
அதிகமாகக் காணப்படுகின்றன. கூர்மையான
பார்வைத்திறனும், கேட்கும் திறனும் உடைய
இவை எதிரிகளின் நடமாட்டத்தை உடனுக்குடனேயே கண்டறிந்துகொள்கின்றன. எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மின்னல்
வேகத்தில் ஔடவும், தொடர்ந்து பறக்கவும்
செய்வதுதான் வழக்கம்..
மயில் எண்ணைக்கும்,
தோகைக்கும், இறைச்சிக்கும்தான் மனிதன்
இவற்றை வேட்டையாட்டுகிறான். சர்வதேச
இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாகாப்பு சங்கத்தின் (IUCNN – International Union of
Conservation of Nature & Natural resources) சிவப்புப் புத்தகத்தில் (Red data book) மயில்கள்
இடம்பிடித்திருக்கின்றன. 1963ல் இந்திய அரசு மயிலை
தேசீயப் பறவையாக அறிவித்தது. மயிலை
வளர்ப்பதும், வேட்டையாடுவதும்
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, பிரிவு 1ல் உட்படுத்தி (schedule 1) இவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள்
எடுக்கப்பட்டன. மயில்களுடைய
பாதுகாப்புக்காக கேரள வனத்துறை பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் என்ற ஊருக்கு
அருகில் சூலனூர் மயில் சரணாலயத்தை அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது. கேரளாவில் உள்ள மயில் சரணாலயம் பிரபலமான
பறவையியல் நிபுணரான இந்துசூடன் அவர்களின் பெயரில் செயல்பட்டுவருகிறது. மயில்களுக்கு மிகவும் பிடித்தமான இடங்கள் மழை பொழியும் இடங்களும், மழை நிழல் பிரதேசங்களும்
ஆகும். மயில்கள் அதிகமாக மேற்குத்
தொடர்ச்சி மலைகளின் கிழக்குபாகத்திலும் காணப்படுகின்றன. வனங்கள் அழிக்கப்பட்டதாலும், சூழல் சீர்கேடுகளாலும்
மயில்கள் சமீபகாலமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குப் பாகங்களுக்கு வரத்
தொடங்கியிருக்கின்றன என்று பறவையியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மயில்கள் ஒருபோதும் தாவர உண்ணிகள் இல்லை.. என்றாலும் இவை அதிகமாகக் காணப்படும் இடங்களைச் சுற்றிலும் வாழும் மக்கள் இவற்றோடு பரிவையும், அக்கறையையுமே காட்டிவருவதாக அறியப்படுகிறது. வட இந்தியாவில் மத நம்பிக்கையின் அடிப்படையில் போற்றிப் பாதுகாக்கப்பட்டுவருகிறது. ஆனால், தென்னிந்தியாவில் அந்த அளவுக்கு ஒரு பாதுகாப்பு இவற்றுக்குக் கிடைப்பது இல்லை என்று கருதப்படுகிறது.
பரம்பிக்குளத்தில் 10 முதல் 15 வருடங்களுக்கு முன்பு
மயில்களைப் பார்ப்பதே அரிதான ஒன்றாக இருந்துவந்தது. ஆனால், சமீபகாலங்களில் அங்கு மயில்கள் அதிகமாகக் காணப்படுவதாக
அறியப்பட்டுள்ளது. மயில்கள் நிலத்தில்தான்
சாதாரணமாகக் கூடுகளைக் கட்டுகின்றன. சிறிய
குழிகளில் கூடு கட்டி அங்கு முட்டைகளை இட்டு பிறகு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து அதை வளர்க்கும்
வேலையையும் தாய் மயில்கள் செய்கின்றன.
இவற்றின் முக்கிய எதிரிகள் காட்டுப்பூனை, பாம்புகள் போன்றவை ஆகும். ஆனால், இவற்றைத் துரத்தி அடித்துவிட்டு முட்டைகளையும், குஞ்சுகளையும் தாய்
மயில்கள் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
தேசீயப்பறவை என்ற நிலையிலும் மயில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்பு இந்திய தபால்துறையின் ஒரு சின்னமாக விளங்கியது
இந்த மயிலே ஆகும். முன்பு வயல்களிலும்
சாதாரணமாக இவை உலா வந்தன. ஆனால், விவசாயம்
ரசாயனமயமாக்கப்பட்டதன் பிறகு இவை வயல்வெளிகளில் அதிகம் காணப்படுவது இல்லை. சில இடங்களில் இவற்றின் எண்னை விற்பனை ஒரு சில
இடங்களில் நடந்துள்ளது. ஆனால், வனவிலங்குகள் பாதுகாப்பு
சட்டம் இவற்றை ஔரளவுக்குப் பாதுகாத்துவருகிறது என்றே சொல்லவேண்டும். மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களின்
வரிசையில் சேர்த்து பாதுகாக்கப்பட்டுவரும் மயில்களை வேட்டையாடுவது குற்றம் ஆகும்.
மயில்களை வீடுகளில் வளர்ப்பதும் வனவிலங்குகள்
பாதுகாப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ள ஒன்று ஆகும். குத்துச்செடிகளையும், புதர் மண்டிய காடுகளையும்
வெட்டி அழிக்கப்பட்டதால் வாழிடங்கள் இல்லாமல் போனதால் மயில்கள் சில இடங்களில்
வயிற்றுப்பிழைப்பைத் தேடி ஊருக்குள்ளும் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பரிதாபநிலைக்கு அவற்றை
ஆளாக்கியது நாம்தான்..
இவ்வாறு வரும்
மயில்களைத் துன்புறுத்தாமல் வனத்துறையினரிடம் தெரிவித்து அவற்றைப் பாதுகாப்பது
என்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை ஆகும்..
சூழல் உயிர்ச்சங்கிலியில் முக்கியக்கரணி ஆகும் மயில்கள்.. பழந்தமிழர் காவியங்களிலும், பிற இலக்கியங்களிலும்
மயில் விடு தூது செய்யுள்களை வாசித்தவர்கள் எவரும் மயிலை மறக்கமாட்டார்கள்.. கதைகளிலும் கனவுகளிலும் தோகை விரிக்கின்ற
இந்தப் பறவை பூமியின் வசந்தம் ஆகும்..
-சிதம்பரம்
இரவிச்சந்திரன்
Well written article! Thanks.
ReplyDelete