கதை சொல்ல ஒரு மரம்
- சிதம்பரம் ரவிசந்திரன்
பூமியில் உயரத்தில் இருப்பது அவள்
போலவும் அவளுக்கு பக்கத்தில் நிற்கும் நாம் ஒரு சின்ன ஜந்துவாகவும் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில்
ஒரு பிரமிப்பு எந்த ஒரு மனிதனுக்கும் அவளின் நிழலில் நிற்கும் ஏற்படுவது
இயற்கையே.. மனிதர்களின் கதைகள் இலக்கியம்
என்ற பெயரில் அறியப்பட்டாலும், நம்மைச் சுற்றிலும் நம்மோடு வாழும்
மற்றவைகளும் கதைகள் சொல்லும்.. அதுவும் அவற்றின் இயற்கையே. பார்க்கப்போனால் அவைகளும் ஒரு தனிவகை
இலக்கியத்திலேயே சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.
மனிதனைத் தவிர பிற உயிர்கள் பேசும் பாஷையும், அவற்றின் பேச்சுக்களையும் அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் இன்னும் எந்த
அறிவியலாலும் மனிதனால் அடையமுடியவில்லை என்றே சொல்லவேண்டும்.
அவளுக்கு முன்னால் தலைநிமிர்ந்து நாம் நிற்கும்போது, சமயத்தில் நம் தலைசுற்றும் உணர்வுகூட ஏற்படும். ஏனென்றால், இவளுக்கு நிகர் இவள் மட்டும்தான்..
காலத்தை ஜெயித்து நிற்கும் இந்த
மூதாட்டி எத்தனை காட்சிகளை தன்னுடைய வாழ்வில் பார்த்திருப்பாள்! எத்தனை வகை மக்களை இவள் பார்த்திருப்பாள்! எத்தனை வருடங்கள் இவள் காலடியில் ஒரு நதிபோல
ஔடி இவளை கடந்துசென்றிருக்கும்? கொடிய புயலாகட்டும்.. வீசும்
தென்றலாகட்டும்.. இவளின் பாதங்களைத்
தொட்டு சென்ற நொடிகள் எத்தனை எத்தனை!
மந்தமாருதமும், பற்றி எரியும் நெருப்பும் எல்லாம்
கண்டுவிட்டு, எதற்கும் அசைந்துகொடுக்காமல் நிற்கும்
இந்த மூதாட்டியை நாம் ‘கன்னிமாரா’ என்று அழைக்கலாம்.
மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குத் திலகம் வைத்தாற்போல காலங்களுக்கு சாட்சியாக,
கதை சொல்ல இயற்கை அருளித் தந்த அபூர்வ
விருட்சம்..
பாலக்காடு ஜில்லாவில்
பரம்பிக்குளம் வனவிலங்குகள் சரணாலயப்பகுதியில் துணைக்கடவு தெள்ளீக்கல்
பகுதியில்தான் உலகத்தில் மிகவும் பழமையானதும், வயதானதுமான கன்னிமாரார் தேக்கு இருக்கிறது.
இவள் பெயர்தான் கன்னிமாரார்.
ஏறக்குறைய 450வருடங்களுக்கு மேல் வயதான இந்த
தேக்குமரத்திற்கு.. 48.75மீ உயரமும், 6.8மீ அகலமும் உடைய இந்த தேக்கு மரம்
இன்று பூமிக்கு ஒரு அதிசயம். திராவிட
ஆதிவாசக் குடும்பத்தை சேர்ந்த ‘காடர்’ இன மக்கள் இந்த கன்னிமாரார் தேக்கை கன்னிதெய்வமாக
வழிபடுகிறார்கள். உலகத்தில் இருக்கும்
மரங்களை நேசிக்கும் ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும்
இந்த கன்னிமாராரை இந்திய அரசு 1994ல் இந்தியாவின் ‘மகாவிருக்ஷம்’ என்ற விருதைத் தந்து கௌரவித்தது. காலத்தின் பல கோலங்களையும் ஏற்றுக்கொண்டு,
நிற்கும் இந்த விருட்ச மூதாட்டியை
பார்ப்பதற்காகவும், அறிந்துகொள்ளவும் பலர்
பரம்பிக்குளத்துக்கு வந்துபோகிறார்கள்.
அந்த வனப்பகுதியான பரம்பிக்குளம் வனப்பகுதி ஒருகாலத்தில் ஆதிவாசிகள் இனமான ‘காடர்’ இனத்தவரின் வாழிடமாக
இருந்துவந்தது. காட்டில் விளைந்த காய்,
கனிகளை சேகரித்தும், காட்டு விலங்குகளை வேட்டையாடியும் வாழ்ந்துவந்தனர் இந்த
காட்டுவாசிகள். கண்ணில் பட்ட எதையும் வாழ
அனுமதிக்கவில்லை. ஒரு நிலையில் காடர்கள்
கன்னிமாராவையும் கண்டனர். தாமதிக்காமல்
கன்னிமாரவின் மேலும் கண்மூடித்தனமாக கத்தியை வைத்து வெட்ட தயாராயினர். என்ன அற்புதம்! மரத்தின் மீது முதல் வெட்டு விழுந்தவுடன்
மரத்தின் வெட்டுபட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வரத்தொடங்கியது. சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் நியமமாக அனுசரிக்கும் இந்த ஆதிவாசீனம் மன்னிப்பு
வேண்டி தலைகுனிந்தனர். பக்தியும், ஆத்மார்த்தமும் இணைபிரியாது கலந்துபோன காடர் இன மக்களுடைய கண்களுக்கு
இந்த மரம் அவர்கள் இன தெய்வமாக காட்சியளித்தது.
காட்டுப்பூக்களும், காய்கனிகளும் மரமெங்கும்
நிறைந்தது. காடர் இனத்தைச் சேர்ந்த
கன்னிப்பெண்கள் இந்த மரத்தை பிரதட்சனமாக சுற்றிவந்து விளக்கு ஏற்றிவைத்து தனக்கு
விருப்பமான கணவன் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். இவ்வாறாக மரம் கன்னிமரமாக, தெய்வமாக ஆனதாக வரலாறு சொல்கிறது.
மனிதனுக்கும், மரத்துக்கும் இடையே உள்ல நேசத்தின்
அடையாளமாக இன்றும் இந்த கன்னி கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறாள். மண்ணிற்கும், வேருக்கும் இடையில் உள்ள உறவுபோல ஆதிமனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள உறவு சொந்தம் இந்த இடத்தில் இருந்து
தொடங்கியது. சடங்குகளுக்கும், ஆத்மார்த்தமான நம்பிக்கைகளுக்கும் இடையே கன்னிமரமும்
வளர்ந்தாள். ஒரு நாகரீகத்துடைய, ஒரு நாட்டினுடைய, ஒரு மொழியுடைய பெருமையாக, இயற்கையின் பிம்பமாக இந்தக் கன்னிமரம் பூமிக்கு மேல் உயர உயர
ஆகாயத்துக்கும் கீழ மாமலை போல வளர்ந்தாள்.
காலத்திற்கும், சரித்திரத்திற்கும் இடையில்
கருத்தோடும், காதலாகவும் அவள் கிளைகளை விரித்தது
பூகோளப்படத்தில்..
6643ச.கிமீ பரப்பளவு உள்ள பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் கேரளாவின்
இரண்டாவது புலிகள் சரணாலயம் ஆகும். இதில் 390 ச.கிமீ வனப்பகுதியாகவும், 253 ச.கிமீ பரப்பு காட்டின் எல்லைகளை ஒட்டிய, மக்கள் வாழும் இடத்துடன் கூடிய நிலபரப்பும் கொண்டதாகும்.
பாலக்காடு பகுதியில் ஆனைமலை வனப்பகுதியைச்
சேர்ந்த இந்த வனம் இது. இங்கு 40க்கும் மேற்பட்ட விலங்குகளும், 250க்கும் கூடுதலான பறவை இனங்களும்,
இதையெல்லா தாண்டி சிறப்பாக உலகத்திலேயே பெரிய
தேக்குமரமான ‘கன்னிமாரா’ தேக்கு மரம் உள்ளது. தற்போது
இந்த மரத்தின் சுற்றளவு ஏழு மீட்டர் ஆகும்.
உயரம் 40மீ ஆகும். சென்ற வருடம்கூட இந்தக் கன்னி பூத்து
குலுங்கினாள். காய், கனியாகி வித்துக்களும் இவளிடம் இருந்து கிடைத்தன. வன இலாகா அதிகாரிகள் இந்த விதைகளை சேகரித்துவைiத்து, அதிலிருந்து கன்றுகளை உருவாக்கி
விற்பனை செய்கிறார்கள்..
இந்த மரம் உலகத்திலேயே மிகவும் முக்கியமான
ஒரு தாவர உலகின் அற்புதமாகவும் திகழ்கிறது. 1994- 95ல் இந்திய அரசால் ‘மகா விருக்ஷ புரஸகாரம்’ தேசீய அளவில் சிறந்த மரத்திற்கான
விருது தரப்பட்டுள்ளது. இந்த 450 வயது இயற்கைக்கு சொந்தக்காரி இன்னும் வளர்வாள் என்று இயற்கை
ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வெர்பினீயஸ குடும்பத்தைச் சேர்ந்த தேக்கின் தாவரவியல் பெயர் டெட்டோனா
கிரான்டர்ஸ என்பதாகும். தென்கிழக்கு
ஆசியாதான் தேக்கு மரத்தின் ஆதார கேந்திரம்.
தெற்கு ஆசியாவில் இது அதிகமாக வளர்கிறது.
நல்ல மரத்திற்கான குணங்கள் அணைத்தையும் இந்த மரம் பெற்றிருப்பதால்
தேக்கைவிட சிறந்த ஒரு மரத்தை இதுவரை கண்டறியவில்லை. மிகச் சிறந்த ‘தேவதாரு’ வகையைச் சேர்ந்த மரம் ஆகும் ;தேக்கு. நல்ல பளபளப்பும்
கொண்டததாகும் இது. வளரும் இடத்தின் தன்மையைப்
பொறுத்து இதன் உயரமும் அமையும். அதிக
ஈரப்பதம் உள்ள இடத்தில் வளரும் தேக்கு அதிக உயரமாக வளரும். தன்னிரகற்ற, உறுதி, சுமாரான எடை ஆகியவைகள்தான் தேக்கின்
சிறப்பு குணங்கள். வட்ட வளையங்கள்
தெளிவாகக் காணப்படும் தேக்கில் எண்ணை உள்லதால் கலோரி மதிப்பும் இதற்கு கூடுதலாக
உள்ளது.
தேக்கு முழுமையாக வளர்ச்சி
அடைவதற்கு அறுபது வருடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்லது. தட்டுகள் முதல் கப்பல்கள்வரை எல்லாவற்றுக்கும்
தேக்கை போல சிறந்த மரம் வேறெதுவும் இல்லை.
விதைகள் கொண்டு பெறப்பட்ட நாற்றுகள் மூலமாகவோ, stem என்று கூறப்படும் தண்டுபகுதியை நட்டுவைத்தும் தற்போது தேக்கை
வளர்க்கிறார்கள். தண்டு நட்டு வளர்க்கும்
முறைக்கு root trainer என்று பெயர். கேரள வனத்துறையின் வருமானத்தில் பெரும்பங்கு
தேக்கு தோட்டங்களில் இருந்துதான் கிடைக்கிறது.
கேரளாவின் சிறந்த தேக்கு தோட்டங்களாக கோமியும், நிலம்பூரும் விளங்குகின்றன.
நிலம்பூரில் உள்ல தோட்டம் புகழ்பெற்றதாகும். உலகின் முதல் தேக்கு தோட்டம் 1884ல் நிலம்பூரில் ஹெச்.வி.கனோலி தோற்றுவித்த ‘கனோலி தேக்கு தோட்டம்’ ஆகும். மனித முயற்சியால் வளர்க்கப்பட்ட தேக்கு
தோட்டங்களில் இந்த நிலம்பூர் கனோலி தோட்டத்தில்தான் உலகத்திலேயே மிக உயரமாக வளரும்
தேக்கு மரங்கள் உள்ளன. இதனால் கனோலி
பிளாண்ட்டேஷனுக்கு இது மற்றொரு சிறப்பாகும்.
தமிழ்நாட்டில் ஆனைமலை மலைத்தொடர்களுக்கும், நெல்லியாம்பதிக்கும் இடையே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான்
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.
அமைதியும், வசீகரிக்கும் ஆற்றலும் கொண்ட
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
1962ல் இந்த சரணாலயம் நடைமுறைக்கு
வந்தது.
தேக்கு மரத்திற்கு புகழ்பெற்ற பரம்பிக்குளம் 1920ல் முறைப்படியான தேக்கு வளர்த்தல் திட்டத்தின் கீழ் மையமாக
ஆனது. இந்த வனத்தின் இயல்பை காப்பாற்ற,
9000ஹெக்டேர் தேக்கு தோட்டம் பராமரிக்கப்பட்டு
வருகிறது.
ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இந்த மலையுச்சியில் இருந்து உற்பத்தியாகி மேற்கு
நோக்கி ஔடி, சாலக்குடி ஆற்றுடன் கலக்கிறது. இயற்கை அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும் இந்த
வனப்பகுதியில் ஏராளமாக மழை பெய்யும் ஒரு இடமாகும். பரம்பிக்குளம் ஆளியாறு திட்டப்படி மூன்று
அணைக்கட்டுகள் இங்கே கட்டப்பட்டுள்ளன.
முக்கியமான நீர்நிலைகள் பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பரிவாரிப்பள்ளம் ஆகியவை ஆகும். பரம்பிக்குளம் வனப்பகுதியை ஆறு பகுதிகளாக
பிரித்துள்ளார்கள். இங்கு எல்லா வகை தாவரங்களையும், வனவிலங்குகளளையும், நீர்வாழ் உயிரினங்களையும் இந்த
வனவிலங்கு சரணாலயத்தில் காணமுடியும்.
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயமாக்கவும் அறிவிக்கப்பட்டது மற்றுமொரு
சிறப்பாகும். தமிழ்நாட்டில்பொள்ளாச்சியில்
இருந்து பரம்பிக்குளத்திற்கு போகலாம்.
இந்த சரணாலயத்தின் நிர்வாக இடமாக உள்ளது துணக்கடவு ஆகும்.
காலடியில் இருக்கும் பூமியின் மேன்மையைப் போற்றி தலைவணங்கும்போது, காலங்களைக் கடந்து பூமிக்கு, இயற்கைக்கு
தலைமுறைகளுக்கு ஒரு மாபெரும் அதிசயமாக, படைப்பின்
அற்புதமாக கன்னி மாரா என்னும் இவள் நிற்கிறாள்.
வனத்துறையின் கவனமான பாதுகாப்பில், கனிவான
கவனிப்பில் இவளுக்கு என்றும் இளமையின் வெளிச்சம் தலைமுறைகளில் இருந்து
தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டியாக தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
இயற்கையை நேசிப்பவரின், இயற்கையின், சூழலின், பசுமையின், கடந்துபோன காலங்களின் ஞாபகங்களை தாய் மடி போல வேர் மடியில் தென்றலின்
தாலாட்டோடு கதை சொல்ல நமக்கு இருப்பது இன்று நம்மோடு இருப்பது இவள் மட்டும்தான்..
‘பத்து கிண்றுகளைக் காட்டிலும் ஒரு குளம் மேல்.. பத்து குளங்களைவிட மேல் ஒரு நீர்நிலை.. பத்து நீர்நிலைகளை விட மேல் ஒரு மகன்.. பத்து
மகன்களைவிட மேல் ஒரு விருக்ஷம்(மரம்)..’