Thursday, 13 November 2014

MAGAZINE- KAADU




தமிழில் வன விலங்கு, பறவைகள் குறித்து தனியாக வார, மத இதழ் வருவது இல்லை அதை எல்லாம் யார் படிக்க போகிறார்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம் ஆங்கிலத்தில் Sanctuary Asia, Cub Sanctuary Asia, National Geography போன்ற அருமையான மாத மற்றும் இரு மாத இதழ்கள் வருகிறது ஆனால் தமிழில்?

உயிர்மையில் தியடோர் பாஸ்கரன் எழுதும் கட்டுரைகள் தான் தொடர்ச்சியாக வரும் காட்டுயிர் பற்றிய செய்திகள். தனி மாத இதழ் என்று இதுவரை இல்லை என்ற குறையையை போக்கும் விதமாக தடாகம் பதிப்பகம் புதிதாக காடு என்று இரு மாத இதழை வெளியிட்டிருக்கிறது.

முதல் இதழ் :

எறும்புகளை வைத்து காட்டை உருவாகிய மனிதனை பற்றி கட்டுரை அருமையாகவும் பிரமிக்கதக்கதாகவும் இருக்கிறது.

தியடோர்டர் பாஸ்கரன்- நதி எங்க போனது? என்று கட்டுரையும்

அலையாத்தி காடுகளை பற்றி நேர்காணலும் 

தமிழகப் பழங்குடிகள் அறிமுகம் 

இன்னும் நிறைய கட்டுரைகளும் வண்ண புகைப்படங்களும் உள்ளதால் காடு உண்மையில் காட்டுயிர் பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கும்.

எப்படி இலக்கியத்திற்கு நிறைய பத்திரிகைகள் இருக்கிறதோ அதே போல் விலங்கு, பறவை, சுற்று சூழல் பற்றி தனியாக பத்திரிகைகள் வந்தால் தான் மக்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்ப்படும். அதன் தொடக்கம் காடு 

காடு பத்திரிக்கை கிடக்கும் முகவரி :

தடாகம்
NO:112,  திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர்  சென்னை-41
PH- 044-43100442/  8939967179
Mail- kaadu@thadagam.com 

விலை -60 .00 ரூபாய் 

[முகமது அலி காட்டுயிர் என்ற பத்திரிக்கையை நடத்தி வருகிறார். அதை பற்றி ஒரு கட்டுரையில் பார்ப்போம்]


Monday, 3 November 2014

காட்டுக்கு ஒரு காவல்காரன்

     
    காட்டில் எங்கேயாவது தீப்பிடித்துக் கொண்டால் ஓடிச்சென்று அதை அணைக்கும் ஒரு உயிரினம் இருக்கிறது.  பிரபல எழுத்தாளர் சாவி ஒரு முறை தன்னுடைய நகைச்சுவையில் இப்படி கூறியிருந்தார். 

    - காட்டில வாழற புலி, சிங்கம், யானை எல்லாம் மிருகம்தானே?  ஆனா இவைகளை எல்லாம் மிருகம்னு கூப்பிடாம காண்டாமிருகம்னு கூப்பிடறோம்.  வெறும் காண்டான்னுதானே கூப்பிடணும்..? 
   மொத்தமான தோலோடு அதிசயமான உருவத்தோடு இருக்கும் கான்டாமிருகம்தான் காட்டில் தீயை அணைக்கும் அந்த மிருகம். 
   
அறிவியல்பூர்வமாக சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவைப்போல மியான்மாரிலும் காண்டாமிருகத்தைப் பற்றிய இந்த நம்பிக்கை மக்களிடையே நிலவிவருகிறது.  உலகில் தரையில் வாழும் நில உயிரினங்களில் யானையை விட்டால் அடுத்து உருவத்தில் பெரியதாக இருப்பது இந்த விலங்குதான்.  ஆச்சரியமான உடல மைப்பு கொண்டது இது.  இதன் தோலுடைய தடிமன் மட்டும் ஒன்றரை இஞ்ச்சுகள் ஆகும்.  படைவீரர்கள் அணிந்துகொள்ளும் ராணுவௌடைபோல இருக்கும் இதன் மேல்தோலைப் பற்றி வடைந்தியாவில் ஒரு கதை இருக்கிறது.

    மகாபாரதக் காலம்.  குருஷேத்திர யுத்தகளம்.  யுத்தம் நடந்துகொண்டிருந்தது.  காலாட்படையில் பெருமம் எண்ணிக்கையில் வீரர்கள் அழிந்துவிட்டார்கள்.  இந்த நிலையில் யானை மேல் இருப்பவர்கள் மேல் அம்புகள் எய்யப்பட்டால் என்ன ஆகும்?  அப்போது ஒரு யோசனை தோன்றியது.  படைத்தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து விவாதம் புரிந்தனர்.  கடைசியில் யானைக்குப் பதிலாக காண்டாமிருகங்களைக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார்கள்  காண்டாமிருகங்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவந்தார்கள்.  அவற்றுக்கு படைவீரர்கள் போட்டுக்கொள்வது போல ராணுவௌடைகளை போட்டுவிட்டார்கள்.  அப்போதுதான் கிருஷ்ணர் அங்கு வந்தார்.  காண்டாமிருகங்களின் கூட்டம் கிருஷ்ணருக்கு முன்னால் கொண்டுவந்து ஆஜர் செய்யப்பட்டது.  அவற்றைப் பார்த்ததும் கிருஷ்ணருக்கு கோபம் வந்தது. 
                                                                                                                              
   - இந்த அனுசரணை இல்லாத மரமண்டைக்களையா கொண்டுவந்துள்ளீர்கள்?  இதுகளை உடனே காட்டுக்குள் விரட்டிவிடுங்கள்.. 
   கிருஷ்ணருடைய கட்டளையைக் கேட்டபிறகு போட்டிருந்த கவசௌடைகள் எதையும் கழற்றாமல் அந்த மிருகங்களை அப்படியே மறுபடியும் காட்டிற்குள் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள் படைத்தலைவர்கள்.  காலங்கள் கடந்துபோனபின்னாலும், இந்த உடையிலேயே காண்டாமிருகங்கள்  வாழ்கின்றன. 
       **
   உலகில் மிக அதிகமாக இன அழிவிற்கு ஆட்படும் காண்டாமிருகங்களின் இரண்டு இனங்கள் இந்தோனேஷியாவில் உள்ளன.  இதனால்தான் அதிபர் சுசிலோ பாம்பாங் யுத்தோயானோ இவற்றை அழிவில் இருந்து காக்க உறுதி எடுத்துக்கொண்டார்.  பல லட்சக்கணக்கான வருடங்கள் பரிணாம வரலாறு உடைய இவற்றை ‘ உயிர் வாழும் படிமம்’ (living fossil) ன்றே அழைக்கப்படுகிறது.  பல்வேறு நாடுகளில் உள்ள வேறுபாடுகளுக்கு ஏற்ப காண்டாமிருகங்கள் வகைபடுத்தப்பட்டுள்ளன.  ஒரு கொம்பு உள்ல, இரட்டைக்கொம்புகள் உள்ள காண்டாமிருகங்கள் இருக்கின்றன. 

ஆப்பிரிக்காவிலும், சுமத்ராவிலும் இருக்கும் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகள் இருக்கின்றன.  இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும் உள்ள காண்டாமிருகங்களுக்கு ஒரே ஒரு கொம்பு மட்டும்தான் உள்ளது.  உலகில் மிகவும் சிறிய காண்டாமிருகங்கள் இருப்பது சுமத்ராவில்தான்.  இவற்றின் எடை ஏறக்குறைய 1000கி.கி ஆகும்.  இவற்றுக்கு சிறிய கொம்புகள் இருக்கின்றன.  சுமத்ராவில் இருக்கும் பெண் காண்டாமிருகங்களுக்கு கொம்புகள் உள்ள இடத்தில் இரண்டு பெரிய வீக்கங்கள் காணப்படுகின்றன.  பொன்னிறமும், மரநிறமும் (golden brown) கலந்த நிறமுடைய இவை.  இந்த சுமத்ரா ரைனசோர்கள் எனப்படும் காண்டாமிருகங்கள் உட்பட உலகில் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது ஐந்து இனங்கள் ஆகும்.  அவை ஆப்பிரிக்க வெள்ளை ரைனசோர்... (African white rhinosers), இன்ட்டியன் ரைனசோர்ஸ (Indian rhinosers), ஜாவா ரைனசோர்ஸ ( Javan rhinosers) போறவை இவற்றில் அடங்கும்.  வெள்ளை ரைனசோர்ஸ என்று கேட்கும்போது அவை வெள்ளை காண்டாமிருகங்கள் என்று சிலர் நினைக்கலாம்.  வெள்ளைநிறத்துக்கும், இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.  ஆப்பிரிக்க நாட்டவர்களான இந்த காண்டாமிருகங்கள் வட, தென் பகுதி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  உலகில் இன்று 15,000தென்பகுதி காண்டாமிருகங்கள் இருப்பதாக கணக்குக்கள் கூறுகின்றன.  உலகில் இருப்பதில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப்பவையும் ஆப்பிரிக்காவில் இருக்கும் காண்டாமிருகங்களே ஆகும்.  அவை நான்கே நான்கு மட்டுமே எண்ணிக்கையில் உள்ள வடபகுதி காண்டாமிருகங்களே உலகின் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் காண்டடாமிருகங்கள் ஆகும். 

    வெள்ளை இனத்தில் உட்படாத காண்டாமிருகங்களை கறுப்பு காண்டாமிருகங்கள் (black rhinosers) என்று அழைக்கிறார்கள்.  தென் மத்தியப் பகுதி, தென்மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்க, மேற்கு ஆப்பிரிக்க காண்டாமிருகங்களின் உட்பிரிவுகளும் உள்ளன.  வெள்ளை காண்டாமிருகங்களைவிட கொஞ்சம் பெரிய அளவில் இவைகளின் உடலமைப்பு இருக்கும்.  இரண்டு கொம்புகள் உடைய இந்த காண்டாமிருகங்களுக்கு அகலம் இல்லாத கூர்மையான வாய்ப்பகுதி உள்ளது. 
   இந்தியன் காண்டாமிருகங்களின் நாடு அஸஸாம் என்று சொல்லலாம்.  குஜராத், வங்காளம், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களிலும் காண்டாமிருகங்கள் இருந்தாலும் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளது அஸஸாமில்தான்..  அஸஸாமுடைய மாநில விலங்கும் காண்டாமிருகமே ஆகும்.  அணை நாடுகளான நேபாள், பாகிஸதான், மியன்மார், சீனா ஆகிய நாடுகளிலும் இந்த இந்திய வகை காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.
 
   அழிக்கப்பட்டு வரும் மழைக்காடுகளில் ஆபத்தான நிலையில் வாழ்பவைதான் ஜாவா இன காண்டாமிருகங்கள் ஆகும்.  உலகில் மொத்தம் 60ஜாவா இன காண்டடாமிருகங்கள் இன்று வாழ்கின்றன.  முன்பு இந்தோனேஷியாவிலும், வியட்நாமில்லும் வாழ்ந்துவந்த இவை இப்போது இந்தோனேஷியாவில் மட்டுமே வாழ்கின்றன. 

    காண்டாமிருகங்களுடைய வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது அது புராதனகாலங்கள் பழமை வாய்ந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.  ஒரு காலத்தில் ஏராளமாக வாழ்ந்துவந்த காண்டாமிருகங்கள் வெகுவாகக் குறைந்து இன்று உள்ள ஐந்து இஅங்களில் மூன்று வகைகள் ஆசியாவிலும், இரண்டு வகை ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன.  ஒருவகையில் பார்த்தால் படைத்தவனிiன் தவறுதானோ என்று நினைக்கும் வகையில் எந்த அழகும் இல்லாமல் ஆச்சரியப்படவைக்கும் தோற்றத்துடன் படைக்கப்பட்டவைகள்தானா இந்த காண்டாமிருகங்கள் என்று நமக்கு சந்தேகம் ஏற்படும்.  தடிமனான கால்கள், மூன்று விரல்கள், மடங்கியும், சுருங்கியும் காணப்படும் பிளவுகள் கொண்டதுபோல தோற்றம்  தடித்த தோல், கொம்பில் இருந்து இறங்கி வந்த குன்றுகளோ என்று நினைக்கத்தோன்றும் மூக்கு என்று இப்படி ஒரு தோற்றம் கொண்ட பரிதாபமான காட்சி தரும் விலங்குகள்தான் இந்த காண்டாமிருகங்கள்.   தோலில் இருந்து வெளிப்படும் தசைகள் ஒன்றுசேர்ந்து உருவானதே கொம்புகள்.  ஒருதடவை இழந்தாலும் கொம்பு மீண்டும் மீண்டும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

    முழுமையான வளர்ச்சி அடைந்த ஒரு காண்டாமிருகத்துடைய எடை ஏறக்குறைய 1700கிலோ ஆகும்.   ரு பெண் காண்டாமிருகத்துடைய எடை ஆணுடைய எடையைவிட பெரிதாக ஒன்றும் குறைவாக இருப்பதில்லை..  அதன் எடை 1600கிலோ ஆகும்.  சராசரி 4மீட்டர்கள் நீளமும், 2மீட்டர் அகலமும் கொண்டவைகள் இந்திய காண்டாமிருகங்கள் ஆகும்.  கொம்புக்கு மட்டும் 1/2மீ உயரம்.  கறுப்பு நிறைந்த சசாம்பல் நிறம், காதுகளிலும், வாலிலும் ரோமங்கள், சிறிய முழைகள் என்பன போன்றவை மற்ற விலங்குகளில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன.  இவ்வளவு பெரிய உருவம் கொண்ட இவை உணவாக சாப்பிடுவது எது தெரியுமா?  ஆச்சரியப்படவேண்டாம்.  புல்தான்.  சாணம் போடுவதற்காக பின்புறமாக நடக்கும் சுபாவம் இவற்றுக்கு உண்டு.  வேட்டைக்காரகள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இவற்றை சுட்டுக்கொல்வது முக்கியமாக இந்த சந்தர்ப்பங்களில்தான்..  கர்ப்பகாலம் ஒன்றரை வருடங்கள் ஆக்கும்.  ஏறக்குறைய 70வருடங்கள் இவற்றின் ஆயுட்காலம் ஆகும். 

    தற்காலங்களில் காண்டாமிருகங்கள் நிரந்தரமாக வேட்டையாடப்படுகின்றன.  மூடநம்பிக்கைகளின் விளைநில்லமாக விளங்கும் உலகத்தில் கண்மூடித்தனமான கட்டுக்கதைகள் காண்டாமிருகங்களின் அழிவிற்குக் காரணமாகின்றன.  அற்புதமான சுவை உள்லது காண்டாமிருக்கங்களுடைய இறைச்சி என்றும், அதைச் சாப்பிட்டால் வலிமை பெற்று அற்புதமான சக்தியைப் பெறலாம் என்றும் நம்பும் மக்கள் உலகத்தில் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.  இது மட்டுமில்லை.  இன்னமும் நிறைய மூடநம்பிக்கைகள் காண்டாமிருகங்களை அழிப்பதற்கென்றே பூமியில் நிலவிவ்பருகின்றன.  எப்போதும் இளமையாக இருக்க, மரணத்தை வெல்வதற்கு, இறந்தபிறகு சொர்க்கத்திற்குப் போக என்று இப்படி ஒரு சாதுவான விலங்கைக் கொல்வதற்காக இட்டுக்கட்டி விடப்பட்ட கதைகள் ஏராளம்..  ஏராளம்..  காண்டாமிருகங்களுடைய கொம்பையும் இந்த மனித வடிவில் உலவும் காட்டுமிராண்டிகள் சும்மா விடுவதில்லை.  கொம்பால் செய்யப்பட்ட கோப்பையில் விஷத்தை ஊற்றிவைத்தால் அது நுரைந்த்துப் பொங்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.  கொம்புடைய ஒரு பகுதி கையில் இருந்தால் எந்த விஷத்தையும் முறிக்கும் சக்தி படைத்தது அது என்ற மூடநம்பிக்கையும் உண்டு.  கர்ப்பிணியுடைய படுக்கைக்குப் பக்கத்தில் கொம்பை வைத்திருந்தால் பிரசவம் சுலபமாக முடியும் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.  கொம்பைப் பொடித்து அதை திரவம் ஒன்றில் கலந்து குடித்தால் இழந்த இளமை மறுபடியும் கிடைக்கும் என்பது போன்ற பற்பல மூடநம்பிக்களுடைய பட்டிய்யல் நீண்டுகொண்டே போகிறது. 

   சொந்த லாபத்தை மட்டும் கணக்குப் போட்டு காசுக்கும், பணத்துக்கும் அலையும் மனிதன்தான் காண்டாமிருகங்களுடைய இன அழிவுக்கு ககாரணம் ஆகும்.  இந்திய காண்டாமிருகங்கள் தவிர மற்ற இனங்கள் எல்லாம் அழியக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளவை ஆகும்.  மனிதனுடைய கருணையால் மட்டுமே இனி காண்டாமிருகங்கள் உயிரோடு வாழமுடியும்.  இவற்றின் இஅன அழிவைத் தடுப்பதற்காக உலக வனௌயிரிகள் நிதியம் (WWF) போன்ற உலக அமைப்புகள் கடும் முயற்சி செய்துவருகின்றன.  இந்த நடவடிக்கைகளில் நாமும் பங்கு கொள்வோம்.  ஒரு பாவமும் செய்யாத காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளைக் காப்பாற்றாவிட்டால் மற்ற உயிரினங்கள் எதுவும்  வ்வந்து உலகின் மிக அறிவு படைத்த உயிரினமாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் மனிதனை அழிக்கப் புறப்பட்டு வரவேண்டாம்.  மனிதனே மனிதனை அழிப்பான்.  அந்த நிலை வராமல் உலகக் குடும்பத்தில் ஒரு அங்கமாக விளங்கும் இவை போன்ற விலங்குகளைக் காப்பாற்ற நம்மால் முயன்றது அணைத்தையும் செய்வோம். அதற்கான செயல்பாடுகளில் நம்மை இப்போதில் இருந்தே ஈடுபடுத்திக் கொள்வோம்.



                                         
                                                                                                         -சிதம்பரம் ரவிசந்திரன்