நாளை கனமழை பெய்யும்
என்று தொலைகாட்சியில் தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்தார்கள் ஆனால் அவை வானத்திற்கு
தெரியாது போலும் அதனால் சுளீர் என்று வெய்யில் அடித்து கொண்டிருந்தது. மதியநேரமாக பள்ளிகரனையை
சுற்றி வரலாம் என்று கேமரா, பைனாகுலர் உடன் கிளம்பிவிட்டேன்.
வேலைச்சேரி சென்று
பள்ளிகரணை செல்லலாம் ஆனால் நான் omr வழியாக சென்று டோல் பூத் தாண்டி வலது புறம் திரும்பினால் உடனே
இன்னமொரு டோல் பூத் வருகிறது அதற்க்கு முன்பு டிராபிக் போலீஸ் மாத கடைசி என்று
மடக்கி கொண்டிருந்தார்கள் அவர்களிடம் மாட்டாமல் டோல் தாண்டினால் சிறுது தூரத்தில்
பள்ளிகரணை சதுப்பு நிலம் நம்மை பார்க்கும்.
நாம் நின்று
பார்பதற்க்குள் நம் அருகிலேயே அங்கு செல்பவர்கள் வண்டியை ஓரம் கட்டி ஜிப்பை கழட்டி
விடுகிறாகள் நாம் தான் தள்ளி தள்ளி செல்லவேண்டும். ஒரு பனை ஓலை போட்ட இரண்டு பேர்
அமரும் அளவுக்கு குடில் ஒன்று உள்ளது ஆனால் அங்கு நாம் செல்ல முடியாத அளவுக்கு
பாதை நம்மை தடுக்கும். இருந்தாலும்
கிடைக்கும் இடத்தில இருந்து பறவையை பார்க்க தொடங்கி விட்டேன் முதலில் நிறைய cattle
egret என்னை அழைத்தது.நல்ல மழை காலம் ஆதலால் சாக்கடை தண்ணியும்
சதுப்பு நிலத்தில் வந்து கலக்கிறது.
நான் இருந்த இடத்தின் மரத்தின் மேல் காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது
அவற்றை படம் எடுத்து பிறகு சதுப்பு நிலத்தில் கவனத்தை திருப்பினேன். பறவைகள்
தொலைவில் இருப்பதால் பைனாகுலர் இல்லாமல் சிறு பறவைகளை பார்ப்பது கடினமாகவே இருந்தது.சதுப்பு
நிலத்தின் இடையில் உயரமான மின்கம்பிகள்
அதில் நிறைய கூழைக்கடாகள் பார்க்க முடிந்தது வெறும் கண்ணில் பார்த்தல் சிறு
பறவையாகவே தெரிகிறது.பள்ளிகரணை செல்பவர்கள் பைனாகுலர் எடுத்து செல்லவது சிறந்தது.
அதிகமாக தாழை கோழிகள் விளையாடி கொண்டிருகிறது. சாலையின் இருபுறத்திலும் தாழை
கோழிகள் இருப்பதை பார்க்கலாம்.சதுப்புநிலத்தின் மற்றொரு புறம் குப்பைகளை கொண்டு
மூடி விட்டார்கள்.அவர்கள் நன்றாக இருக்கட்டும்.
என் பக்கத்தில் தன் எட்டு வயது சிறுமிக்கு பறவை நோக்குவதை பற்றி சொல்லி
கொடுத்து கொண்டிருந்தார் சிறுமியின் தந்தை. சிறுமியிடம் தரமான பைனாகுலர் இருப்பதை
பார்க்க முடிந்து. அவங்க அப்பா சொல்ல சொல்ல அவற்றை பார்த்து கொண்டே, சந்தேகங்களையும்
கேட்டு கொண்டே வந்தார்.இந்த சிறுமிக்கு எதிர் வரும் காலம் வீனாகாது என்பது
நிச்சயம்.
சாலையின் முடிவில் அதாவது வேலைச்சேரி சாலை சந்திக்கும் இடத்தில நிறைய
அரிவாள் மூக்கன்,கூழைகடா மரகிலையில் இருப்பதை பார்க்க முடியும். புகைப்படம்
எடுப்பதை பொழுதுபோக்க கொண்டவர்களையும், நீண்ட லென்ஸ்கள் உடைய
கேமரா,தோழன் போல் அவர்களுடன் தொங்கிகொண்டிருந்தது.
வேடந்தாங்களில் நிறையை பறவைகள் வந்துள்ளதாக தினசரி செய்தித்தாள் தினசரி
சொல்லிக்கொண்டிருகிறது.அடுத்து அங்கு தான் செல்லவேண்டும்.
பார்த்த பறவைகள்
உன்னி கொக்கு
சின்ன கொக்கு
பாம்புதாரா -நயன்தார அல்ல
கூழைகடா
அரிவாள் மூக்கன்
மடையான்
வெண் மார்பு மீன் கொத்தி
தாழைக்கோழி
பருந்து
நீர்காகம்.
நான் சென்ற பொழுது இவ்வளவே பார்க்க முடிந்தது.
-செழியன்