கடைசியாக புலிகள் கணக்கெடுப்பு 2010ம் ஆண்டு நடைப்பெற்றது. புலிகள் குறைந்து வருவதின் அறிகுறியை அந்த புள்ளிவிவரம் தெரிவித்தது.புலிகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?,ஏன் அவை குறைந்து வருகிறது?, குறைவதால் என்ன தீமை? மற்ற உயிரினத்திற்கு இல்லாத மரியாதை,கவனம் ஏன் புலிகளுக்கு மட்டும் உண்டு?மற்ற உயிரினத்தின் (பறவைகள்,பூச்சிகள், விலங்குகள்) புள்ளி விவரம் ஏன் வெளியே இந்தளவுக்கு தெரியவில்லை? என்ற நிறைய கேள்விக்கு ஒரே பதில், உணவு சங்கிலியில் உச்சத்தில் இருப்பவை புலி, இவை காட்டில் அதிகமாக இருக்கிறது என்றால் மற்ற உயிரினங்கள் சிறப்பாக உள்ளது என்று அர்த்தம்.
புலிகள் காட்டில் குறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு தேவையான இறை அங்கு இல்லை அல்லது குறைந்து வருகிறது. புலியோட இறைகளுக்கு அதாவது மான்,காட்டு எருது,காட்டு பன்றி போன்றவைகளுக்கு தேவையான உணவு காட்டில் குறைந்தால்,அல்லது கிடைக்காமல் போனால் அவை பெருகுவதில்லை அதனால் புலிக்கு தேவையான இறை கிடைப்பதில் சிக்கலால் அவை குறைந்து வருகிறது.
இதை விட புலிகள் குறைந்ததற்கு மிக முக்கிய காரணம்-வேட்டையாடுதல். லட்சத்திற்கு மேல் இருந்த புலிகளின் எண்ணிகையை ஆயிரதிற்க்கு மாற்றிய பெருமை மனிதனையே சேரும்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் (20-ஜனவரி-2015) இந்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவாத்கர் வெளியிட்ட புலிகள் பற்றிய புள்ளிவிவரம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஏறக்குறைய 30% அதிகரித்து உள்ளது , எண்ணிக்கை 1706ல் இருந்து 2226ஆக உயர்ந்துள்ளது .
ஒரு சிறிய புள்ளிவிவரத்தை(Statistics) பார்ப்போம்:
இந்தியா முழுவதும் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை
2006 2010 2014
அதிகமாக புலிகள் பெருகி உள்ள மாநிலங்கள் மொத்தம் ஐந்து அதில் தமிழ்நாடும் வருகிறது :
State 2006 2010 2014
Tamil Nadu 76 163 229
Karnataka 290 300 406
Madhya Pradesh 300 257 308
Utrakahand 178 227 340
Maharashtra 103 169 190
பரவலாக எல்லா மாநிலத்திலும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருந்தாலும் புலிகளின் காடு என்று அழைக்கப்படும் சுந்தர்பன் காட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை சிறிதுஅளவே உயர்ந்து காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் புலிகளின் உணவுகள் அங்கு குறைந்து வருவதே.தற்போது சுந்தர்பன் காட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 70ல்இருந்து 76ஆக உயர்ந்துள்ளது.மொத்தம் ஆறு புலிகள் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
புலிகள் உயர்ந்து வந்தாலும் ஒரு சில மாநிலங்களில் குறைந்து வருகிறது.முக்கிய காரணம் வேட்டையாடுதல்.ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த முறை 10 புலிகளாக இருந்து தற்சமயம் 3ஆக குறைந்துள்ளது.
புலிகள் பெரும் அளவில் குறைந்து வந்ததால் 1972ல் Project Tiger என்ற திட்டத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள 3000 புலிகளில் இந்தியாவில் மட்டும் 2226 புலிகள் உள்ளது அதாவது 70% இந்தியாவில் மட்டுமே உள்ளது.
தற்பொழுது வலம் வந்துகொண்டிருக்கும் புலிகளின் வகைகள்:
1.Bengal Tiger
2.Siberian Tiger
3.Malayan Tiger
4.South Chinese Tiger
5.Indo-Chinese Tiger
6.Sumatra Tiger
தமிழகத்தில் உள்ள புலிகள் சரணாலயங்கள் :
திருநெல்வேலி,களக்காடு-முண்டந்
புலிகள், சூழ்நிலையை சமன் படுத்தும் முக்கிய விலங்கு அவற்றை அதிக படுத்துவதின் மூலம், நாம் வாழும் இப்புவியில் தொடர்ந்து நம்மால் வாழ முடியும். அவை அழிவதின் அல்லது அழிப்பதின் மூலம் நாம் நம் வாழ்கையை மட்டும் இல்லாமல் எதிர்கால மனிதர்களின் வாழ்கையையும் தொலைத்து கொண்டிருக்கிறோம் என்றே பொருள்.