Photo by Marianne Taylor, UK, |
இருபது வருடங்களுக்கு முன்பு வெளி வந்த “The Life of Birds” by Sir. David
Attenborough-வின் ஆவணப் படத்தில் நாமக் கோழி தன் குஞ்சுகளைக் கொல்லுவதைப்
பலர் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். "உணவு பற்றாத
காலத்தில் வளருவதற்குச் சக்தியற்ற
குஞ்சுகளைப் பெற்றோர் நாமக்கோழிகள் கொன்று விடுகின்றன" என்று அப்போது நம்பப்பட்டது.
"நாமக் கோழி உண்மையாகத் தன் குஞ்சுகளைக் கொல்லுமா?" என்ற கேள்விக்கு விடையை அறிவியல்
ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்ப்போமா?