Thursday, 13 November 2014

MAGAZINE- KAADU




தமிழில் வன விலங்கு, பறவைகள் குறித்து தனியாக வார, மத இதழ் வருவது இல்லை அதை எல்லாம் யார் படிக்க போகிறார்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம் ஆங்கிலத்தில் Sanctuary Asia, Cub Sanctuary Asia, National Geography போன்ற அருமையான மாத மற்றும் இரு மாத இதழ்கள் வருகிறது ஆனால் தமிழில்?

உயிர்மையில் தியடோர் பாஸ்கரன் எழுதும் கட்டுரைகள் தான் தொடர்ச்சியாக வரும் காட்டுயிர் பற்றிய செய்திகள். தனி மாத இதழ் என்று இதுவரை இல்லை என்ற குறையையை போக்கும் விதமாக தடாகம் பதிப்பகம் புதிதாக காடு என்று இரு மாத இதழை வெளியிட்டிருக்கிறது.

முதல் இதழ் :

எறும்புகளை வைத்து காட்டை உருவாகிய மனிதனை பற்றி கட்டுரை அருமையாகவும் பிரமிக்கதக்கதாகவும் இருக்கிறது.

தியடோர்டர் பாஸ்கரன்- நதி எங்க போனது? என்று கட்டுரையும்

அலையாத்தி காடுகளை பற்றி நேர்காணலும் 

தமிழகப் பழங்குடிகள் அறிமுகம் 

இன்னும் நிறைய கட்டுரைகளும் வண்ண புகைப்படங்களும் உள்ளதால் காடு உண்மையில் காட்டுயிர் பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கும்.

எப்படி இலக்கியத்திற்கு நிறைய பத்திரிகைகள் இருக்கிறதோ அதே போல் விலங்கு, பறவை, சுற்று சூழல் பற்றி தனியாக பத்திரிகைகள் வந்தால் தான் மக்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்ப்படும். அதன் தொடக்கம் காடு 

காடு பத்திரிக்கை கிடக்கும் முகவரி :

தடாகம்
NO:112,  திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர்  சென்னை-41
PH- 044-43100442/  8939967179
Mail- kaadu@thadagam.com 

விலை -60 .00 ரூபாய் 

[முகமது அலி காட்டுயிர் என்ற பத்திரிக்கையை நடத்தி வருகிறார். அதை பற்றி ஒரு கட்டுரையில் பார்ப்போம்]


Monday, 3 November 2014

காட்டுக்கு ஒரு காவல்காரன்

     
    காட்டில் எங்கேயாவது தீப்பிடித்துக் கொண்டால் ஓடிச்சென்று அதை அணைக்கும் ஒரு உயிரினம் இருக்கிறது.  பிரபல எழுத்தாளர் சாவி ஒரு முறை தன்னுடைய நகைச்சுவையில் இப்படி கூறியிருந்தார். 

    - காட்டில வாழற புலி, சிங்கம், யானை எல்லாம் மிருகம்தானே?  ஆனா இவைகளை எல்லாம் மிருகம்னு கூப்பிடாம காண்டாமிருகம்னு கூப்பிடறோம்.  வெறும் காண்டான்னுதானே கூப்பிடணும்..? 
   மொத்தமான தோலோடு அதிசயமான உருவத்தோடு இருக்கும் கான்டாமிருகம்தான் காட்டில் தீயை அணைக்கும் அந்த மிருகம். 
   
அறிவியல்பூர்வமாக சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவைப்போல மியான்மாரிலும் காண்டாமிருகத்தைப் பற்றிய இந்த நம்பிக்கை மக்களிடையே நிலவிவருகிறது.  உலகில் தரையில் வாழும் நில உயிரினங்களில் யானையை விட்டால் அடுத்து உருவத்தில் பெரியதாக இருப்பது இந்த விலங்குதான்.  ஆச்சரியமான உடல மைப்பு கொண்டது இது.  இதன் தோலுடைய தடிமன் மட்டும் ஒன்றரை இஞ்ச்சுகள் ஆகும்.  படைவீரர்கள் அணிந்துகொள்ளும் ராணுவௌடைபோல இருக்கும் இதன் மேல்தோலைப் பற்றி வடைந்தியாவில் ஒரு கதை இருக்கிறது.

    மகாபாரதக் காலம்.  குருஷேத்திர யுத்தகளம்.  யுத்தம் நடந்துகொண்டிருந்தது.  காலாட்படையில் பெருமம் எண்ணிக்கையில் வீரர்கள் அழிந்துவிட்டார்கள்.  இந்த நிலையில் யானை மேல் இருப்பவர்கள் மேல் அம்புகள் எய்யப்பட்டால் என்ன ஆகும்?  அப்போது ஒரு யோசனை தோன்றியது.  படைத்தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து விவாதம் புரிந்தனர்.  கடைசியில் யானைக்குப் பதிலாக காண்டாமிருகங்களைக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார்கள்  காண்டாமிருகங்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவந்தார்கள்.  அவற்றுக்கு படைவீரர்கள் போட்டுக்கொள்வது போல ராணுவௌடைகளை போட்டுவிட்டார்கள்.  அப்போதுதான் கிருஷ்ணர் அங்கு வந்தார்.  காண்டாமிருகங்களின் கூட்டம் கிருஷ்ணருக்கு முன்னால் கொண்டுவந்து ஆஜர் செய்யப்பட்டது.  அவற்றைப் பார்த்ததும் கிருஷ்ணருக்கு கோபம் வந்தது. 
                                                                                                                              
   - இந்த அனுசரணை இல்லாத மரமண்டைக்களையா கொண்டுவந்துள்ளீர்கள்?  இதுகளை உடனே காட்டுக்குள் விரட்டிவிடுங்கள்.. 
   கிருஷ்ணருடைய கட்டளையைக் கேட்டபிறகு போட்டிருந்த கவசௌடைகள் எதையும் கழற்றாமல் அந்த மிருகங்களை அப்படியே மறுபடியும் காட்டிற்குள் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள் படைத்தலைவர்கள்.  காலங்கள் கடந்துபோனபின்னாலும், இந்த உடையிலேயே காண்டாமிருகங்கள்  வாழ்கின்றன. 
       **
   உலகில் மிக அதிகமாக இன அழிவிற்கு ஆட்படும் காண்டாமிருகங்களின் இரண்டு இனங்கள் இந்தோனேஷியாவில் உள்ளன.  இதனால்தான் அதிபர் சுசிலோ பாம்பாங் யுத்தோயானோ இவற்றை அழிவில் இருந்து காக்க உறுதி எடுத்துக்கொண்டார்.  பல லட்சக்கணக்கான வருடங்கள் பரிணாம வரலாறு உடைய இவற்றை ‘ உயிர் வாழும் படிமம்’ (living fossil) ன்றே அழைக்கப்படுகிறது.  பல்வேறு நாடுகளில் உள்ள வேறுபாடுகளுக்கு ஏற்ப காண்டாமிருகங்கள் வகைபடுத்தப்பட்டுள்ளன.  ஒரு கொம்பு உள்ல, இரட்டைக்கொம்புகள் உள்ள காண்டாமிருகங்கள் இருக்கின்றன. 

ஆப்பிரிக்காவிலும், சுமத்ராவிலும் இருக்கும் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகள் இருக்கின்றன.  இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும் உள்ள காண்டாமிருகங்களுக்கு ஒரே ஒரு கொம்பு மட்டும்தான் உள்ளது.  உலகில் மிகவும் சிறிய காண்டாமிருகங்கள் இருப்பது சுமத்ராவில்தான்.  இவற்றின் எடை ஏறக்குறைய 1000கி.கி ஆகும்.  இவற்றுக்கு சிறிய கொம்புகள் இருக்கின்றன.  சுமத்ராவில் இருக்கும் பெண் காண்டாமிருகங்களுக்கு கொம்புகள் உள்ள இடத்தில் இரண்டு பெரிய வீக்கங்கள் காணப்படுகின்றன.  பொன்னிறமும், மரநிறமும் (golden brown) கலந்த நிறமுடைய இவை.  இந்த சுமத்ரா ரைனசோர்கள் எனப்படும் காண்டாமிருகங்கள் உட்பட உலகில் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது ஐந்து இனங்கள் ஆகும்.  அவை ஆப்பிரிக்க வெள்ளை ரைனசோர்... (African white rhinosers), இன்ட்டியன் ரைனசோர்ஸ (Indian rhinosers), ஜாவா ரைனசோர்ஸ ( Javan rhinosers) போறவை இவற்றில் அடங்கும்.  வெள்ளை ரைனசோர்ஸ என்று கேட்கும்போது அவை வெள்ளை காண்டாமிருகங்கள் என்று சிலர் நினைக்கலாம்.  வெள்ளைநிறத்துக்கும், இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.  ஆப்பிரிக்க நாட்டவர்களான இந்த காண்டாமிருகங்கள் வட, தென் பகுதி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  உலகில் இன்று 15,000தென்பகுதி காண்டாமிருகங்கள் இருப்பதாக கணக்குக்கள் கூறுகின்றன.  உலகில் இருப்பதில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப்பவையும் ஆப்பிரிக்காவில் இருக்கும் காண்டாமிருகங்களே ஆகும்.  அவை நான்கே நான்கு மட்டுமே எண்ணிக்கையில் உள்ள வடபகுதி காண்டாமிருகங்களே உலகின் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் காண்டடாமிருகங்கள் ஆகும். 

    வெள்ளை இனத்தில் உட்படாத காண்டாமிருகங்களை கறுப்பு காண்டாமிருகங்கள் (black rhinosers) என்று அழைக்கிறார்கள்.  தென் மத்தியப் பகுதி, தென்மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்க, மேற்கு ஆப்பிரிக்க காண்டாமிருகங்களின் உட்பிரிவுகளும் உள்ளன.  வெள்ளை காண்டாமிருகங்களைவிட கொஞ்சம் பெரிய அளவில் இவைகளின் உடலமைப்பு இருக்கும்.  இரண்டு கொம்புகள் உடைய இந்த காண்டாமிருகங்களுக்கு அகலம் இல்லாத கூர்மையான வாய்ப்பகுதி உள்ளது. 
   இந்தியன் காண்டாமிருகங்களின் நாடு அஸஸாம் என்று சொல்லலாம்.  குஜராத், வங்காளம், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களிலும் காண்டாமிருகங்கள் இருந்தாலும் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளது அஸஸாமில்தான்..  அஸஸாமுடைய மாநில விலங்கும் காண்டாமிருகமே ஆகும்.  அணை நாடுகளான நேபாள், பாகிஸதான், மியன்மார், சீனா ஆகிய நாடுகளிலும் இந்த இந்திய வகை காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.
 
   அழிக்கப்பட்டு வரும் மழைக்காடுகளில் ஆபத்தான நிலையில் வாழ்பவைதான் ஜாவா இன காண்டாமிருகங்கள் ஆகும்.  உலகில் மொத்தம் 60ஜாவா இன காண்டடாமிருகங்கள் இன்று வாழ்கின்றன.  முன்பு இந்தோனேஷியாவிலும், வியட்நாமில்லும் வாழ்ந்துவந்த இவை இப்போது இந்தோனேஷியாவில் மட்டுமே வாழ்கின்றன. 

    காண்டாமிருகங்களுடைய வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது அது புராதனகாலங்கள் பழமை வாய்ந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.  ஒரு காலத்தில் ஏராளமாக வாழ்ந்துவந்த காண்டாமிருகங்கள் வெகுவாகக் குறைந்து இன்று உள்ள ஐந்து இஅங்களில் மூன்று வகைகள் ஆசியாவிலும், இரண்டு வகை ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன.  ஒருவகையில் பார்த்தால் படைத்தவனிiன் தவறுதானோ என்று நினைக்கும் வகையில் எந்த அழகும் இல்லாமல் ஆச்சரியப்படவைக்கும் தோற்றத்துடன் படைக்கப்பட்டவைகள்தானா இந்த காண்டாமிருகங்கள் என்று நமக்கு சந்தேகம் ஏற்படும்.  தடிமனான கால்கள், மூன்று விரல்கள், மடங்கியும், சுருங்கியும் காணப்படும் பிளவுகள் கொண்டதுபோல தோற்றம்  தடித்த தோல், கொம்பில் இருந்து இறங்கி வந்த குன்றுகளோ என்று நினைக்கத்தோன்றும் மூக்கு என்று இப்படி ஒரு தோற்றம் கொண்ட பரிதாபமான காட்சி தரும் விலங்குகள்தான் இந்த காண்டாமிருகங்கள்.   தோலில் இருந்து வெளிப்படும் தசைகள் ஒன்றுசேர்ந்து உருவானதே கொம்புகள்.  ஒருதடவை இழந்தாலும் கொம்பு மீண்டும் மீண்டும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

    முழுமையான வளர்ச்சி அடைந்த ஒரு காண்டாமிருகத்துடைய எடை ஏறக்குறைய 1700கிலோ ஆகும்.   ரு பெண் காண்டாமிருகத்துடைய எடை ஆணுடைய எடையைவிட பெரிதாக ஒன்றும் குறைவாக இருப்பதில்லை..  அதன் எடை 1600கிலோ ஆகும்.  சராசரி 4மீட்டர்கள் நீளமும், 2மீட்டர் அகலமும் கொண்டவைகள் இந்திய காண்டாமிருகங்கள் ஆகும்.  கொம்புக்கு மட்டும் 1/2மீ உயரம்.  கறுப்பு நிறைந்த சசாம்பல் நிறம், காதுகளிலும், வாலிலும் ரோமங்கள், சிறிய முழைகள் என்பன போன்றவை மற்ற விலங்குகளில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன.  இவ்வளவு பெரிய உருவம் கொண்ட இவை உணவாக சாப்பிடுவது எது தெரியுமா?  ஆச்சரியப்படவேண்டாம்.  புல்தான்.  சாணம் போடுவதற்காக பின்புறமாக நடக்கும் சுபாவம் இவற்றுக்கு உண்டு.  வேட்டைக்காரகள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இவற்றை சுட்டுக்கொல்வது முக்கியமாக இந்த சந்தர்ப்பங்களில்தான்..  கர்ப்பகாலம் ஒன்றரை வருடங்கள் ஆக்கும்.  ஏறக்குறைய 70வருடங்கள் இவற்றின் ஆயுட்காலம் ஆகும். 

    தற்காலங்களில் காண்டாமிருகங்கள் நிரந்தரமாக வேட்டையாடப்படுகின்றன.  மூடநம்பிக்கைகளின் விளைநில்லமாக விளங்கும் உலகத்தில் கண்மூடித்தனமான கட்டுக்கதைகள் காண்டாமிருகங்களின் அழிவிற்குக் காரணமாகின்றன.  அற்புதமான சுவை உள்லது காண்டாமிருக்கங்களுடைய இறைச்சி என்றும், அதைச் சாப்பிட்டால் வலிமை பெற்று அற்புதமான சக்தியைப் பெறலாம் என்றும் நம்பும் மக்கள் உலகத்தில் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.  இது மட்டுமில்லை.  இன்னமும் நிறைய மூடநம்பிக்கைகள் காண்டாமிருகங்களை அழிப்பதற்கென்றே பூமியில் நிலவிவ்பருகின்றன.  எப்போதும் இளமையாக இருக்க, மரணத்தை வெல்வதற்கு, இறந்தபிறகு சொர்க்கத்திற்குப் போக என்று இப்படி ஒரு சாதுவான விலங்கைக் கொல்வதற்காக இட்டுக்கட்டி விடப்பட்ட கதைகள் ஏராளம்..  ஏராளம்..  காண்டாமிருகங்களுடைய கொம்பையும் இந்த மனித வடிவில் உலவும் காட்டுமிராண்டிகள் சும்மா விடுவதில்லை.  கொம்பால் செய்யப்பட்ட கோப்பையில் விஷத்தை ஊற்றிவைத்தால் அது நுரைந்த்துப் பொங்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.  கொம்புடைய ஒரு பகுதி கையில் இருந்தால் எந்த விஷத்தையும் முறிக்கும் சக்தி படைத்தது அது என்ற மூடநம்பிக்கையும் உண்டு.  கர்ப்பிணியுடைய படுக்கைக்குப் பக்கத்தில் கொம்பை வைத்திருந்தால் பிரசவம் சுலபமாக முடியும் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.  கொம்பைப் பொடித்து அதை திரவம் ஒன்றில் கலந்து குடித்தால் இழந்த இளமை மறுபடியும் கிடைக்கும் என்பது போன்ற பற்பல மூடநம்பிக்களுடைய பட்டிய்யல் நீண்டுகொண்டே போகிறது. 

   சொந்த லாபத்தை மட்டும் கணக்குப் போட்டு காசுக்கும், பணத்துக்கும் அலையும் மனிதன்தான் காண்டாமிருகங்களுடைய இன அழிவுக்கு ககாரணம் ஆகும்.  இந்திய காண்டாமிருகங்கள் தவிர மற்ற இனங்கள் எல்லாம் அழியக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளவை ஆகும்.  மனிதனுடைய கருணையால் மட்டுமே இனி காண்டாமிருகங்கள் உயிரோடு வாழமுடியும்.  இவற்றின் இஅன அழிவைத் தடுப்பதற்காக உலக வனௌயிரிகள் நிதியம் (WWF) போன்ற உலக அமைப்புகள் கடும் முயற்சி செய்துவருகின்றன.  இந்த நடவடிக்கைகளில் நாமும் பங்கு கொள்வோம்.  ஒரு பாவமும் செய்யாத காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளைக் காப்பாற்றாவிட்டால் மற்ற உயிரினங்கள் எதுவும்  வ்வந்து உலகின் மிக அறிவு படைத்த உயிரினமாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் மனிதனை அழிக்கப் புறப்பட்டு வரவேண்டாம்.  மனிதனே மனிதனை அழிப்பான்.  அந்த நிலை வராமல் உலகக் குடும்பத்தில் ஒரு அங்கமாக விளங்கும் இவை போன்ற விலங்குகளைக் காப்பாற்ற நம்மால் முயன்றது அணைத்தையும் செய்வோம். அதற்கான செயல்பாடுகளில் நம்மை இப்போதில் இருந்தே ஈடுபடுத்திக் கொள்வோம்.



                                         
                                                                                                         -சிதம்பரம் ரவிசந்திரன்

Monday, 20 October 2014

A Tree for story telling

கதை சொல்ல ஒரு மரம் 

                        - சிதம்பரம் ரவிசந்திரன் 


 
பூமியில் உயரத்தில் இருப்பது அவள் போலவும் அவளுக்கு பக்கத்தில் நிற்கும் நாம் ஒரு சின்ன  ஜந்துவாகவும் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிரமிப்பு எந்த ஒரு மனிதனுக்கும் அவளின் நிழலில் நிற்கும் ஏற்படுவது இயற்கையே..  மனிதர்களின் கதைகள் இலக்கியம் என்ற பெயரில் அறியப்பட்டாலும், நம்மைச் சுற்றிலும் நம்மோடு வாழும் மற்றவைகளும் கதைகள் சொல்லும்.. அதுவும் அவற்றின் இயற்கையே.  பார்க்கப்போனால் அவைகளும் ஒரு தனிவகை இலக்கியத்திலேயே சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்.  மனிதனைத் தவிர பிற உயிர்கள் பேசும் பாஷையும், அவற்றின் பேச்சுக்களையும் அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் இன்னும் எந்த அறிவியலாலும் மனிதனால் அடையமுடியவில்லை என்றே சொல்லவேண்டும்.  

    அவளுக்கு முன்னால் தலைநிமிர்ந்து நாம் நிற்கும்போது, சமயத்தில் நம் தலைசுற்றும் உணர்வுகூட ஏற்படும்.  ஏனென்றால், இவளுக்கு நிகர் இவள் மட்டும்தான்..  

    காலத்தை ஜெயித்து நிற்கும் இந்த மூதாட்டி எத்தனை காட்சிகளை தன்னுடைய வாழ்வில் பார்த்திருப்பாள்!  எத்தனை வகை மக்களை இவள் பார்த்திருப்பாள்!  எத்தனை வருடங்கள் இவள் காலடியில் ஒரு நதிபோல ஔடி இவளை கடந்துசென்றிருக்கும்?  கொடிய புயலாகட்டும்..  வீசும் தென்றலாகட்டும்..  இவளின் பாதங்களைத் தொட்டு சென்ற நொடிகள் எத்தனை எத்தனை!  மந்தமாருதமும், பற்றி எரியும் நெருப்பும் எல்லாம் கண்டுவிட்டு, எதற்கும் அசைந்துகொடுக்காமல் நிற்கும் இந்த மூதாட்டியை நாம் ‘கன்னிமாரா’ என்று அழைக்கலாம். 
  
    மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குத் திலகம் வைத்தாற்போல காலங்களுக்கு சாட்சியாக, கதை சொல்ல இயற்கை அருளித் தந்த அபூர்வ விருட்சம்..  

     பாலக்காடு   ஜில்லாவில் பரம்பிக்குளம் வனவிலங்குகள் சரணாலயப்பகுதியில் துணைக்கடவு தெள்ளீக்கல் பகுதியில்தான் உலகத்தில் மிகவும் பழமையானதும், வயதானதுமான கன்னிமாரார் தேக்கு இருக்கிறது.  

  இவள் பெயர்தான் கன்னிமாரார்.  
 
    ஏறக்குறைய 450வருடங்களுக்கு மேல் வயதான இந்த தேக்குமரத்திற்கு..  48.75மீ உயரமும், 6.8மீ அகலமும் உடைய இந்த தேக்கு மரம் இன்று பூமிக்கு ஒரு அதிசயம்.  திராவிட ஆதிவாசக் குடும்பத்தை சேர்ந்த ‘காடர்’ இன மக்கள் இந்த கன்னிமாரார் தேக்கை கன்னிதெய்வமாக வழிபடுகிறார்கள்.  உலகத்தில் இருக்கும் மரங்களை நேசிக்கும் ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இந்த கன்னிமாராரை இந்திய அரசு 1994ல் இந்தியாவின் ‘மகாவிருக்ஷம்’ என்ற விருதைத் தந்து கௌரவித்தது.  காலத்தின் பல கோலங்களையும் ஏற்றுக்கொண்டு, நிற்கும் இந்த விருட்ச மூதாட்டியை பார்ப்பதற்காகவும், அறிந்துகொள்ளவும் பலர் பரம்பிக்குளத்துக்கு வந்துபோகிறார்கள்.

      அந்த வனப்பகுதியான பரம்பிக்குளம் வனப்பகுதி ஒருகாலத்தில் ஆதிவாசிகள் இனமான ‘காடர்’ இனத்தவரின் வாழிடமாக இருந்துவந்தது.  காட்டில் விளைந்த காய், கனிகளை சேகரித்தும், காட்டு விலங்குகளை வேட்டையாடியும் வாழ்ந்துவந்தனர் இந்த காட்டுவாசிகள்.  கண்ணில் பட்ட எதையும் வாழ அனுமதிக்கவில்லை.  ஒரு நிலையில் காடர்கள் கன்னிமாராவையும் கண்டனர்.  தாமதிக்காமல் கன்னிமாரவின் மேலும் கண்மூடித்தனமாக கத்தியை வைத்து வெட்ட தயாராயினர்.  என்ன அற்புதம்!  மரத்தின் மீது முதல் வெட்டு விழுந்தவுடன் மரத்தின் வெட்டுபட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வரத்தொடங்கியது.  சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் நியமமாக அனுசரிக்கும் இந்த ஆதிவாசீனம் மன்னிப்பு வேண்டி தலைகுனிந்தனர்.  பக்தியும், ஆத்மார்த்தமும் இணைபிரியாது கலந்துபோன காடர் இன மக்களுடைய கண்களுக்கு இந்த மரம் அவர்கள் இன தெய்வமாக காட்சியளித்தது.  காட்டுப்பூக்களும், காய்கனிகளும் மரமெங்கும் நிறைந்தது.  காடர் இனத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் இந்த மரத்தை பிரதட்சனமாக சுற்றிவந்து விளக்கு ஏற்றிவைத்து தனக்கு விருப்பமான கணவன் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.  இவ்வாறாக மரம் கன்னிமரமாக, தெய்வமாக ஆனதாக வரலாறு சொல்கிறது.  

    மனிதனுக்கும், மரத்துக்கும் இடையே உள்ல நேசத்தின் அடையாளமாக இன்றும் இந்த கன்னி கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறாள்.  மண்ணிற்கும், வேருக்கும் இடையில் உள்ள உறவுபோல ஆதிமனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள உறவு சொந்தம் இந்த இடத்தில் இருந்து தொடங்கியது.  சடங்குகளுக்கும், ஆத்மார்த்தமான நம்பிக்கைகளுக்கும் இடையே கன்னிமரமும் வளர்ந்தாள்.  ஒரு நாகரீகத்துடைய, ஒரு நாட்டினுடைய, ஒரு மொழியுடைய பெருமையாக, இயற்கையின் பிம்பமாக இந்தக் கன்னிமரம் பூமிக்கு மேல் உயர உயர ஆகாயத்துக்கும் கீழ மாமலை போல வளர்ந்தாள்.  காலத்திற்கும், சரித்திரத்திற்கும் இடையில் கருத்தோடும், காதலாகவும் அவள் கிளைகளை விரித்தது பூகோளப்படத்தில்.. 
6643ச.கிமீ பரப்பளவு உள்ள பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் கேரளாவின் இரண்டாவது புலிகள் சரணாலயம் ஆகும்.  இதில் 390 ச.கிமீ வனப்பகுதியாகவும், 253 ச.கிமீ பரப்பு காட்டின் எல்லைகளை ஒட்டிய, மக்கள் வாழும் இடத்துடன் கூடிய நிலபரப்பும் கொண்டதாகும்.  

பாலக்காடு பகுதியில் ஆனைமலை வனப்பகுதியைச் சேர்ந்த இந்த வனம் இது.  இங்கு 40க்கும் மேற்பட்ட விலங்குகளும்,  250க்கும் கூடுதலான பறவை இனங்களும், இதையெல்லா தாண்டி சிறப்பாக உலகத்திலேயே பெரிய தேக்குமரமான ‘கன்னிமாரா’ தேக்கு மரம் உள்ளது.  தற்போது இந்த மரத்தின் சுற்றளவு ஏழு மீட்டர் ஆகும்.  உயரம் 40மீ ஆகும்.  சென்ற வருடம்கூட இந்தக் கன்னி பூத்து குலுங்கினாள்.  காய், கனியாகி வித்துக்களும் இவளிடம் இருந்து கிடைத்தன.  வன இலாகா அதிகாரிகள் இந்த விதைகளை சேகரித்துவைiத்து, அதிலிருந்து கன்றுகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள்..  

     இந்த மரம் உலகத்திலேயே மிகவும் முக்கியமான  ஒரு தாவர உலகின் அற்புதமாகவும் திகழ்கிறது.  1994- 95ல் இந்திய அரசால் ‘மகா விருக்ஷ புரஸகாரம்’  தேசீய அளவில் சிறந்த மரத்திற்கான விருது தரப்பட்டுள்ளது.  இந்த 450 வயது இயற்கைக்கு சொந்தக்காரி இன்னும் வளர்வாள் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  

    வெர்பினீயஸ குடும்பத்தைச் சேர்ந்த தேக்கின் தாவரவியல் பெயர் டெட்டோனா கிரான்டர்ஸ என்பதாகும்.  தென்கிழக்கு ஆசியாதான் தேக்கு மரத்தின் ஆதார கேந்திரம்.  தெற்கு ஆசியாவில் இது அதிகமாக வளர்கிறது.  நல்ல மரத்திற்கான குணங்கள் அணைத்தையும் இந்த மரம் பெற்றிருப்பதால் தேக்கைவிட சிறந்த ஒரு மரத்தை இதுவரை கண்டறியவில்லை.  மிகச் சிறந்த ‘தேவதாரு’ வகையைச் சேர்ந்த மரம் ஆகும் ;தேக்கு.  நல்ல பளபளப்பும் கொண்டததாகும் இது.  வளரும் இடத்தின் தன்மையைப் பொறுத்து இதன் உயரமும் அமையும்.  அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் வளரும் தேக்கு அதிக உயரமாக வளரும்.  தன்னிரகற்ற, உறுதி, சுமாரான எடை ஆகியவைகள்தான் தேக்கின் சிறப்பு குணங்கள்.  வட்ட வளையங்கள் தெளிவாகக் காணப்படும் தேக்கில் எண்ணை உள்லதால் கலோரி மதிப்பும் இதற்கு கூடுதலாக உள்ளது.  

தேக்கு முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு அறுபது வருடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்லது.  தட்டுகள் முதல் கப்பல்கள்வரை எல்லாவற்றுக்கும் தேக்கை போல சிறந்த மரம் வேறெதுவும் இல்லை.  விதைகள் கொண்டு பெறப்பட்ட நாற்றுகள் மூலமாகவோ, stem என்று கூறப்படும் தண்டுபகுதியை நட்டுவைத்தும் தற்போது தேக்கை வளர்க்கிறார்கள்.  தண்டு நட்டு வளர்க்கும் முறைக்கு root trainer என்று பெயர்.  கேரள வனத்துறையின் வருமானத்தில் பெரும்பங்கு தேக்கு தோட்டங்களில் இருந்துதான் கிடைக்கிறது.  கேரளாவின் சிறந்த தேக்கு தோட்டங்களாக கோமியும், நிலம்பூரும் விளங்குகின்றன.  நிலம்பூரில் உள்ல தோட்டம் புகழ்பெற்றதாகும்.  உலகின் முதல் தேக்கு தோட்டம் 1884ல் நிலம்பூரில் ஹெச்.வி.கனோலி தோற்றுவித்த ‘கனோலி தேக்கு தோட்டம்’ ஆகும்.  மனித முயற்சியால் வளர்க்கப்பட்ட தேக்கு தோட்டங்களில் இந்த நிலம்பூர் கனோலி தோட்டத்தில்தான் உலகத்திலேயே மிக உயரமாக வளரும் தேக்கு மரங்கள் உள்ளன.  இதனால் கனோலி பிளாண்ட்டேஷனுக்கு இது மற்றொரு சிறப்பாகும். 

தமிழ்நாட்டில் ஆனைமலை மலைத்தொடர்களுக்கும், நெல்லியாம்பதிக்கும் இடையே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில்தான் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.  அமைதியும், வசீகரிக்கும் ஆற்றலும் கொண்ட பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் ஆகும்.   1962ல் இந்த சரணாலயம் நடைமுறைக்கு வந்தது.  

    தேக்கு மரத்திற்கு புகழ்பெற்ற பரம்பிக்குளம் 1920ல் முறைப்படியான தேக்கு வளர்த்தல் திட்டத்தின் கீழ் மையமாக ஆனது.  இந்த வனத்தின் இயல்பை காப்பாற்ற, 9000ஹெக்டேர் தேக்கு தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.  

   ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இந்த மலையுச்சியில் இருந்து உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஔடி, சாலக்குடி ஆற்றுடன் கலக்கிறது.  இயற்கை அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமாக மழை பெய்யும் ஒரு இடமாகும்.  பரம்பிக்குளம் ஆளியாறு திட்டப்படி மூன்று அணைக்கட்டுகள் இங்கே கட்டப்பட்டுள்ளன.  முக்கியமான நீர்நிலைகள் பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பரிவாரிப்பள்ளம் ஆகியவை ஆகும்.  பரம்பிக்குளம் வனப்பகுதியை ஆறு பகுதிகளாக பிரித்துள்ளார்கள்.  இங்கு எல்லா வகை  தாவரங்களையும், வனவிலங்குகளளையும், நீர்வாழ் உயிரினங்களையும் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் காணமுடியும்.  பரம்பிக்குளம் புலிகள் சரணாலயமாக்கவும் அறிவிக்கப்பட்டது மற்றுமொரு சிறப்பாகும்.  தமிழ்நாட்டில்பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளத்திற்கு போகலாம்.  இந்த சரணாலயத்தின் நிர்வாக இடமாக உள்ளது துணக்கடவு ஆகும். 

     காலடியில் இருக்கும் பூமியின் மேன்மையைப் போற்றி தலைவணங்கும்போது, காலங்களைக் கடந்து பூமிக்கு, இயற்கைக்கு தலைமுறைகளுக்கு ஒரு மாபெரும் அதிசயமாக, படைப்பின் அற்புதமாக கன்னி மாரா என்னும் இவள் நிற்கிறாள்.  வனத்துறையின் கவனமான பாதுகாப்பில், கனிவான கவனிப்பில் இவளுக்கு என்றும் இளமையின் வெளிச்சம் தலைமுறைகளில் இருந்து தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டியாக தொடர்ந்துகொண்டேயிருக்கும்.  

    இயற்கையை நேசிப்பவரின், இயற்கையின், சூழலின், பசுமையின், கடந்துபோன காலங்களின் ஞாபகங்களை தாய் மடி போல வேர் மடியில் தென்றலின் தாலாட்டோடு கதை சொல்ல நமக்கு இருப்பது இன்று நம்மோடு இருப்பது இவள் மட்டும்தான்..

       ‘பத்து கிண்றுகளைக் காட்டிலும் ஒரு குளம் மேல்..  பத்து குளங்களைவிட மேல் ஒரு நீர்நிலை..  பத்து நீர்நிலைகளை விட மேல் ஒரு மகன்.. பத்து மகன்களைவிட மேல் ஒரு விருக்ஷம்(மரம்)..’