நிறைய பறக்கும் உயிரிணம் இருந்தாலும், மனிதன் புறாவை
சேவல் , கோழியை போல் சுதந்தரமாக வளர்த்தான் . கிளி, லவ் பார்ட்ஸ் போன்ற பறக்கும்
உயிரினங்களை கம்பி போட்ட கூண்டில் வளர்த்த மனிதன் புறாவை அவன் சுற்றி திரிவதுபோல்
சுற்றவிட்டான்.
எங்கு சென்றாலும் தன் இருபிடத்திற்கே திரும்பி வரும் என்பதாலேயே புறாவை சுதந்திரமாகவும் ,பந்தயத்திலும்
பயன்படுத்த ஆரம்பித்தான்.
இன்று தகவல் பரிமாறுவதற்கு நிறைய வழிகள் உள்ளது ஆனால்
ராஜாக்கள் புறாவையே தகவல் சொல்லுவதற்கு பயன்படுத்தினார்கள் என்று எல்லோருக்குமே
தெரியும். பதக்கம் பெற்ற புறாக்களும் வரலாற்றில் உண்டு இம்சை அரசன் புலிகேசி
படத்தில் வடிவேல், தூது வந்த புறாவை சூப்பு வைத்து குடித்துவிடுவதால் அதனால் போர்
வருவதை இங்கு நினைவுக்கு வருகிறது.
வரலாற்றில் மிக மோசமான புறா அழிப்பு
19ம்போதாவது நூற்றாண்டில், வட
அமெரிக்காவில் 250 கோடி Passenger Pigeon கள்
இருந்தன. ஒரே நேரத்தில் பத்து இலட்சம் Passenger Pigeon
மேல
பறந்து போகும்போது ஒரு மணி நேரத்திற்கு சூரிய ஒளியை மறைத்து இருட்டாகிவிடும்.
உள்ளுரில் ஏற்ப்பட்ட சண்டையால் இந்த வகை புறாக்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டது.கடைசி
புறா 1914ஆம்
ஆண்டு சுட்டு சாகடிக்கப்பட்டது.
நீரை உறிஞ்சு குடிக்கும் ஒரே பறவையினம் புறாதான். இவை
மட்டும்தான் மனிதன் நீரை குடிப்பதுபோல் உறிஞ்சு குடிக்கும்.எல்லா பக்கமும் தன்
தலையை திருப்பி பார்க்கும் திறனும் புறாக்களுக்கு உண்டு.
ஏறக்குறைய எல்லா கண்டத்திலும் புறாக்கள் உண்டு ஆர்டிக்,
அண்டார்டிகா, மற்றும் சகாரா பாலைவனம் தவிர்த்து. புறாக்களை வீட்டில் வளர்க்க
கூடாது என்ற ஐதிகம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு.புறாக்களை மருத்துவத்திற்க்கும்
பயன்படுத்துகிறார்கள் இலக்குவம் அடித்தவர்களுக்கு புறா சூப்பு கொடுப்பது உண்டு,
அதனால் பயனுண்டா இல்லையா என்று தெரியாமலே புறாக்கள் சாகடிக்கப்பட்டு வருகிறது.
இதற்க்காகவே இன்றும் நிறை பேர் புறாக்களை வளர்த்து வருகிறார்கள்.
இந்தியாவின் கலாச்சரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் என்று இருப்பது
போல் புறாக்களும் தனது ஆயுள்முழுவதும் ஓர துணையுடன் இருக்கும்.
பதக்கம் பெற்ற புறா:
முதல் உலகப் போரின்பொழுது பிரெஞ்ச் நாட்டில் இருந்த ஒரு புறா
தன் நாட்டு போர் வீரர்களை தகவல் பரிமாற்றுவதன் மூலம் காப்பாற்றியது. அந்த
புறாவிற்கு பிரெஞ்ச் நாட்டு அரசு “ Croix de Guerre “ என்ற
மெடலை அதனுடைய Heroic Service க்கு
அளித்தது. புறாவின் பெயர்தானே முக்கியம்.,“Cher Ami” (Dear Friend) அதாவது அன்புள்ள நண்பன் என்று பெயர்.
அடுத்த ஹீரோ :
இரண்டாம் உலகப் போரின்பொழுது ஏறக்குறைய தகவல்
பரிமாற்றங்கள் முற்றிலும் இத்தாலியில் குறைந்து போனது. பிரிட்டிஷ் படைகள்
இத்தாலிக்குள் இறங்கிவிட்டன அப்பொழுதுதான் நமது ஹீரோ களத்தில் இறங்கினார் 20 miles 20பது
நிமிடத்தில்
பறந்து சென்று தகவலை அளித்தது.
அதனால் நமது ஹீரோவுக்கு “ Dickin “ என்று மெடலை அதனுடைய
தைரியத்திற்கு பரிசளிக்கப்பட்டது. நமது ஹீரோ பெயர் – “
G.I. Joe “ .
புறா வியாபாரம் :
நாம் புறா வளர்த்தல் அது அபசகுனம் என்று நினைத்து
கொண்டுஇருக்கிறோம் ஆனால் புறா இன்று மிக பெரிய வியாபாரமாக வளர்ந்து இருக்கிறது.
ஒரு பந்தய புறா சமிபத்தில் 132,517.00 $ அதாவது இந்திய
மதிப்பில் 7,68,57366 மதிப்பில் விற்றது. இதற்க்கு முன்பு ஒரு பந்தய புறா 73800.00 $ அதாவது 42,80,400.
ரூபாய்க்கு விற்றதுதான் சாதனையாக இருந்தது.
புறாக்களை நாம் மற்ற பறவையை போல் மரத்தில் பார்க்க
முடியாது அவை எப்பொழுதுமே பெரிய மதில் சுவர், கோவில் கோபுரத்தில், பாழடைந்த
மண்டபத்தில், பெரிய பெரிய கட்டிடத்தில்
தான் பார்க்க முடியும். கோயில் புறா என்றே ஒரு இனம் இருக்கிறது அவை பார்பதற்க்கு
ஒரே மாதிரி இருக்கும். பெரும்பாலும் கோயில் புறாக்களை நாம் வீட்டில் வளர்க்க
முடியாது.
புறாக்களுக்கு மிக பெரிய எதிரியே மனிதன்தான். மனிதனாலே பல கோடி புறாக்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இயற்கையான புறா எதிரி யார் என்றால் ராஜாளி. ஆனால் ராஜாளியை விட மனிதன் தான் அதிக
அளவில் புறாக்களை அழிதுள்ளான்.
மிக பெரிய புறா பந்தயம்:
60000
புறாக்களை பிரெஞ்சுல் உள்ள Nantes
என்ற இடத்தில் இருந்து விடப்பட்டது அவை தெற்க்கு இங்கிலாந்து நோக்கி செல்லவேண்டும்
மொத்த புறாக்களில் ஒரு சில புறா மட்டுமே தெற்க்கு இங்கிலாந்துக்கு சென்றடைந்தது.
புறாக்களை விரும்பிய பிரபலங்கள் :
இங்கலாந்து ராணி குயின்
எலிசபத்(Queen
Elizabeth of England
) , மைக் டைசன்(Mike Tyson), Maurizzo Gucci, the
internationally renowned fashion designer இவர் ஒரு புறாவை வாங்க 10000$
(இந்திய
மதிப்பில் இப்பொழுது 6,00000 ருபாய்) செலவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment