பறவைகளைப் பார்த்து இயற்கையை நாம் படிக்கலாம்.. நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது, ‘காக்கா கண்ணூக்கு மை கொண்டு வா.. குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா..’ என்று சொல்லிதான் உணவு தரும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். பறவைகளோடு நம் வாழ்வும் பிண்ணிப்பிணைந்து இருந்தது.எல்லா உயிரினங்களும் பூமியில் நல்லபடியாக வாழ்ந்தால்தான் மனிதனும் நன்றாக வாழமுடியும் என்ற ஆழ்ந்த அறிவியல் எண்ணம் நமது மூதாதையோருக்கு இருந்ததுதான் இதற்கு காரணம். அறுவடை காலங்களில் கிராமங்களில் அப்போது வீட்டின் முன்பக்கத்து முற்றத்தில் அறுவடை செய்துவந்த புதுரிசியை ஒரு துணியில் கட்டி வாய்மட்டும் பெரிதாக திறந்திருக்கும்படி தொங்கவிடுவார்கள். வீட்டுக்கு வரும் குருவிகளும், பிற சிறிய பறவைகளும் அந்த அரிசியை உண்டு செல்வதற்காக அவ்வாறு செய்தார்கள். இதைப் பார்த்து வளரும் சிறு குழந்தைகளும் பறவைகளை நாம் நம் சகோதர உயிரினங்களாக உரிமையுள்ள தோழர்களாக பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வளர்ந்தார்கள்.
இயற்கையில் ஏற்படும் பேரழிவுகளை பற்றி அறியவும் பறவைகள் நமக்கு பெருமளவில் உதவுகின்றன. உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல அறிவியல் அறிஞர்களும் சிறந்த பறவையாளர்களாக இருந்தார்கள். பரிணாமத்தின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ டார்வின் இதற்கு எடுத்துக்காட்டு. அவர் காலபகோஸ தீவுகளில் பறவைகளைப் பற்றி ஆராய்ந்தபோதுதான் பரிணாமத்தின் கொள்கைகளை கண்டறிந்தது அறிவியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கொள்கையாக இருந்தது டார்வினின் பரிணாம பற்றிய கோட்பாடுகள்.
பூகம்பம் போன்ற இயற்கை செதங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன் பறவைகளுக்கு உண்டு. பறவைகள் மீது ஈடுபாடு கொண்டு bird watching எனப்படும் இயற்கையோடு கூடிய பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டும் மேற்கொள்ளாமல் ஆர்வமாக அத்துறையில் ஈடுபடும்போது, பூகம்பம் போன்ற பேரழிவுகளை முன்னமே அறிந்துகொள்ள முடியும் என்பதால் ஏற்பட உள்ள பெரும் அழிவையும் தடுக்கமுடியும். அது மட்டும் அல்லாமல், D.D.T போன்ற பூச்சிக்கொல்லிகளின் கேடு விளைவிக்கும் பயன்பாட்டைப் பற்றி உலகம் அறிந்துகொண்டதும் பறவைகள் மூலம்தான்..
இதற்கு நாம் ரேச்சல் கர்சனோடு கடமைப்பட்டிருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு மலையோர நகரத்தில் இருந்து 1958ல் ஒரு வீட்டில் இருக்கும் பெண்மணி உலகப் புகழ் பெற்ற பறவையாளராக இருந்த ராபர்ட் ககேஷ்மென் மர்•பிக்கு ஒரு கடிதம் எழுதினார்.‘எங்களுடைய கிராமத்தில் கொஞ்சம் வருடங்களாக மரங்களுக்கு கிர்ருமிகொல்லிகளை தெளித்துவருகிறார்கள். முன்பு பலவிதமான பறவைகளை இங்கு பார்க்கக்கூடியதாக இருந்தது. குளிர்காலம் முடியும்போது எங்கு இருந்தெல்லாமோ பறவைகள் இங்கு வரும். ஆனால், சில வருடங்களாக டி.டி.டியை உபயோகப்படுத்த தொடங்கியபின் எங்களுடைய கிராமத்திலோ, பக்கத்து கிராமங்களிலோ பறவைகளைக் காணமுடிவது இல்லை. இங்கிருந்த பறவைகள் எங்கே போய்விட்டன என்று எங்கள் குழந்தைக்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பறவைகள் இனிமேல் எப்போதும் வராதா என்று குழந்தைகள் கேட்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை’.
இப்படி பறவைகள் மூலமாக டி.டி.டியைப் பற்றியும் அதன் தீயவிளைவ்வுகளையும் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. இயற்கைக்கு ஏற்படும் தீராத தீமையைக் குறித்து இதனால் அறிய்யமுடிந்தது.
அமெரிகர்கள் வசந்தகாலம் வருவதை ராபின் என்ற பறவைகளின் வருகையின் மூலம்தான். இனிமையாக பாடும் திறன் பெற்ற பறவைகள் ஆகும் அவை. ராபின் பறவைகள் பாடத்தொடங்கிவ்விட்டால் குளிர்காலம் முடிந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம். 1954ல் குளிர்காலத்தின் முடிவில், ஊர் சுற்றும் பறவைகளான ராபின் பறவைகள் எப்போதும்போல லேன்ட்சிங்க் என்ற இடத்தில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் இருந்த மரங்கள் ம்னீது வந்து அமர்ந்துகொள்ள முயன்றன. ஆனனால் அங்கு இருந்த மரங்களில் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளால் அவற்றின் உயிர் பறிபோனது. இறந்து விழும் பறவைகளூம், இறந்துகொண்டிருக்கும் பறவைகளுமாக பார்ப்பவர்களின் இட்தயத்தை செகிழவைத்தது. வந்த பறவைகள் எல்லாம் சிறிதுநேரத்தில் இறந்துவிழுந்தன. இதைக் கண்ட நிபுணர்கள் பறவைகலுக்கு ஏற்படும் சாதாரனமான ஏதோ ஒரு நோயால்தான் ராபின்கள் இறந்துவிழுந்தன என்று முதலில் கருதினார்கள். ஆனால், முழுமையான ஆராய்ச்சிகளின் முடிவில், பறவைகள் பூச்சிக்கொல்லிகளால்தான் மரணம் அடைந்தன என்பது தெரியவந்தது. பூச்சிகொல்லி,மருந்தைக் கொண்ட மண்ணை உடகொண்ட மண்புழுக்களை உண்டதால்தான் அவை இறந்தன என்று தெரியவந்தது. இல்லினாய் இயற்கை வரலாற்று பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்..ராய் பெர்கர் இதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். 1958ல் பெர்கர் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மண்புழுக்களின் செரிமான உறுப்புகளில் டி.டி.டியின் அள்வு அதிகமாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார். விஷத்தை உண்ட மண்புழுக்கள் இறந்துபோயின. மிச்சம் இருந்தவை ராபின் பறவைகளுக்கு உணவாகி அவைகளும் இறப்பதற்கு காரணமாயின.
ரேய்ச்சல் கர்சன் ‘மௌனமான வசந்தம்’ என்ற தன்னுடைய புத்தகத்தில் பூச்சிக்கொல்லிகளால் உருவாகு சீர்கேடுகளைப் பர்றி எழுதினார். இதனால் அமெரிக்கா உட்பட பல மேற்கித்திய நாடுகள் டி.டி.டியை தடை செய்தன. உலகம் முழுவது பூச்சிக்கொல்லிகளால் உண்டாகும் தீமைகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வு தோன்றவும் ரேய்ச்சல் கர்சன் காரனமாக இருந்தார். ஒரு சாதாரண் வீட்டுப்பெண்மணிக்கு பறவைகளைப் பற்றிய சந்தேகங்களால் கேடு வளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வழ வகுத்தது. இதன் மூலம் பறவை ஆரராய்ச்சி இயற்கையை பற்றி அறிய எந்த வகையில் உதவுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
நம்மை சுuற்றியுள்ள இடங்களில் நாம் வழக்கமாக பார்க்கும் பறவைகளில் ஏதாவது பார்க்கமுடியாமல் போனால் நாம் இருக்கும் இடத்தின் சுற்றுச்சூழலுக்கு ஏதோ சீர்கேடு உண்டாகி உள்லது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதுபோலவே சாதாரணமாக நாம் பார்க்கமுடியாட்த ஏதாவது புதிiய பறவைகளை நாம் காணநேர்ந்தாலும் அதுவும் நமது சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே குறிப்பதாகும்.
அதிகம் வெப்பம் உள்ல பகுதிகளில் வாழ்ந்தும் கூடு கட்டி, முட்டைய்யிட்டு, குšசு பொரித்து செல்லும் பறவைகளான பவழக்காலிகள் தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் பறவைகள் ஆகும். ஆனால், இவை கேரளாவில் காணப்பட்டதில் இருந்து அங்கு வெப்பநிலை அதிகமாகி வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் கேரளாவின் காலநிலை தமிழ்நாட்டைப் போல வெப்பமடைந்து வருகிறது என்பதியே எடுத்துச்சொல்கிறது அல்லவா? மேற்குமலைத்தொடரில் காணப்படும் பறவைகல் அழிந்துபோனால் பின் அவைகளை வேறெங்கும் உலகில் காணமுடியாது. ஏனென்றால் அவை இந்தப் பகுதிக்கு மட்டுமே உரியவையாகும். ஆனால் சமீபகாலமாக இங்குள்ள பறவைகளும் பிற இடங்களில் உள்ல பறவைகளைப்போல அழிந்துகொண்டு வருகின்nறன. காரணம் காடுகள் அழிக்கப்படுவதும், வயல்களாக்கப்படுவதும், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடும் போல பல. நம்முடைய காணப்படும் பலவகை காடுகளில் பலவகை பறவைகள் காணப்படுகின்றன. இவைகளுக்கு ஏற்படும் அழிவு அவைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இயற்கைக்கும் நாசத்தையே ஏற்படுத்தும்.
பறவை ஆய்வுகள் மூலம் நம் பூமியில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடியும். ஒருமுறை சீனாவில் கூட்டமாக வந்து வயல்களில் அமரும் தூக்கனாங்குருவிகளை சீனர்கள் முழுமையாக அந்தக் குருவிகளை அழித்துவிட்டார்கள். இதனால் தூக்கனாங்குருவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்ததுடன், வயல்களில் இருந்த பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. புழுக்களும், பூச்சிகளும் நெல்மணிகளை அழிக்கத்தொடங்கின. அப்போதுதான் சீனர்களுக்கு புரிந்தது.
தூக்கனாங்குருவிகள் நெல் விளைந்துவரும் காலங்களில் குறைந்த அளவு நெல்மணிகளை தின்றாலும், மற்ர நேரங்களில் அவை வயல்களில் நெல்லை பாதிக்கும் பூச்சிகளைத் தின்று பயிரை காப்பாற்றிக்கொண்டுவந்தன என்பது. பறவைகள் பூச்சிக்கட்டுப்பாட்டில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
ஒரு காலத்தில் மௌரீஷியசில் வாழ்ந்துவந்த டோடோ பறவைகள் இன்று பூமியில்l இல்லை. புறாக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும் இவை. 12கிலோ முதல் 25கிலோ வரை எடை கொண்டவையாக இருந்தன இந்தப் பறவைகள். புறாக்கள் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் இவற்றுக்கு பறாக்கத்தெரியாது.15ம்நூற்றாண்டில் மௌரீஷியஸ தீவில் சென்று இறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்த ‘டோடோ’ பறவைகளை வேட்டையாடிக் கொன்றே முழுவதுமாக அழித்துவிட்டனர். ஒரு நூற்றாண்டிற்குள் ‘டோடோ’ பறவைகளின் இனமே அழிந்துபோனது.
1930ல் டாக்டர்.ச்லீமலியும், அவரது மனைவிய்யும் சேர்ந்து கேரளாவிற்கு வந்து திருவிதாங்கூரிலும், கொச்சியிலும் உள்ள காடுகளின் வழியாக பயணம் மேற்கொண்டனர். அந்த மாநிலத்தில் பறவிகளின் கணக்கெடுப்பு முதலாவதாக ச்லீமலிதான் ஆரம்பித்தார். மறையூர், சாலக்குடி, குமிலி, சென்ங்கோட்டை, அச்சன்கோவில் போன்ற இடங்களின் வழியாக சென்ற அந்த பயணத்தில் தான் கண்ட பறவைகளைப் பற்றி குறிப்புகள் எழுதிவைத்தார். மூனாறுக்குப் போககும்வழியில் ஔய்வெடுப்பதற்காக அவர் தம்க்கியிருந்த இடம்தான் தட்டைக்காடு. அந்த இடத்தில்l மட்டும் அவர் 160வகை பறவைகளைக் கண்டறிந்தார். அந்த இடம் இப்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சலீமலி பயணித்த அதே வழியாக சில வருடங்கள் கழித்து பறவை ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் பயணித்ட்தார்கள். முப்பதுகளில் இருந்த காலநிலையும், இன்றுள்ள இயற்கையின் நிலைமை பற்றி அறிந்துகொள்ளவும் இந்தப் பயணம் அவர்களுக்கு உதவியது. சலீமலி பார்த்த பலவகையான பறவைகளை இப்போது நடத்திய பறவை ஆராய்ச்சிகளின்போது காணவில்லை. ஆனால் புதியவகை பறவை இனங்களை அவர்கள் கண்டார்கள்.
இட்தில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் காகங்கள் பல இடங்களிலும் காணப்பட்டன. மனிதவாசனை காட்டில் தென்படுகிறது என்பதே இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தியாகும். மனிதர்கள் உள்ள இடங்களில்தான் காகங்களும் கூட்டமாகக் காணப்படும். அத்தோடு, வனவிலங்குகள் பலவும் இந்த இடங்களில் இருந்து அழிந்துuபோய்விட்டன என்பது தெரியவந்தது.
பறவைகள் பற்றிய ஆய்வுகள் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலையையும் தாண்டி, இயற்கையைப் பற்றி அறிய ஒரு வாசல் திறக்கும் திறவுகோலாகவும் கருதவேண்டும். அதனால் பறவைகள் பற்றிய பாடங்கள் நமது பள்ளிகளில் ஆரம்பவகுப்புகளில் இருந்து பாடத்திட்டதில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். அப்போதுதான் சிறந்த இயற்கை ஆய்வாளர்கள் நமக்குக் கிடைப்பார்கள்.
நமது தலைமுறையிலேயே காணாமல் போய்க்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளூம், புறாக்களும், மைனாக்களும் இதுபோல இன்னும் பல பறவைகளும் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் காணக்கிடைக்கும்.
- -சிதம்பரம் ரவிசந்திரன்