நிறைய உயரினங்கள்
இன்று அழிவின் விளிம்பில் நின்று இந்த உலகை வலம் வந்து கொண்டிருகிறது.எதிர்
காலத்தில் வலம் வருமா என்றால்? நிச்சயம் அதற்கான பதில் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.
உன்னை பார்த்து ரொம்ப
நாள் அல்லது வருடம் ஆச்சு என்று ஒருவரை, நெடு நாள் பார்க்காமல், பார்க்கும் பொழுது
இந்த வாசகத்தை மறக்காமல் சொல்லுவோம்.ஒரு விலங்கை நூறு வருடம் கழித்து பார்க்கும்
பொழுது என்ன சொல்வது?.ஒரு நூற்றாண்டு கழித்து உன்னை பார்க்கிறேன் நண்பா என்று
சொல்வதா?
வடஅமெரிக்காவில் வாழ்ந்து
வரும் சிகப்பு நரி(Sierra Nevada RED FOX)1916 பிறகு தற்பொழுதுதான் கேமராவில்
பதிவாகியிருக்கிறது.வட அமெரிக்காவில் உள்ள யோசிமைட் தேசிய பூங்காவில்(Yosemite
National Park) இந்த சிகப்பு நரி வாழ்ந்து வருவதை நூறாண்டு கழித்து பார்க்கும் பொழுது
நூறாண்டு கழித்து வரும் நண்பனே வருக வருக என்றே சொல்ல தோனுகிறது.
நூறு வருடம் பார்க்காததால் அழிந்து விட்டது என்றே நினைக்கும் பொழுது இதோ
நான் இருக்கிறேன் என்று தலை காட்டி விட்டது. ஆனால் இப்பொழுதும் இந்த நரி அழிவின்
நிலையில் தான் உள்ளது.இரண்டு முறை இந்த நரி கேமராவில் பதிவாகி உள்ளது. மனிதன்
வேட்டையாடியதே இந்த நரியின் அழிவிற்கு முக்கிய காரணம் ஆகும்.இத்தனைக்கும்
வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட கலிபோர்னியா மாகானத்தில் தான் நரிக்கு இந்த நிலை. உலக
உருண்டையின் ஓரத்தில் இந்த நரி நின்றுகொண்டு இருக்கிறது.
-செழியன்
No comments:
Post a Comment