செவ்வாய் மற்றும்
விழாயன் கிழமைகளில் மட்டும் இருபது பேருக்கு அனுமதி அதுவும் ஆன்லைனில் பதிவு
செய்துவிட்டு செல்லவேண்டும். அப்படி ஒரு குழுவாக விழாயன் மதியம் இரண்டு மணியளவில் அடையார்
பூங்காவில் ஒன்று சேர்ந்தோம்.வண்ணத்துப்பூச்சிகளை பார்ப்பதே முக்கியம் என்று உள்ளே
சென்றோம்.
நம்முடன் ஒரு பூங்கா
வழிக்காட்டியும் வருவதால் நாம் கேட்பதிர்க்குள்ளேயே வண்ணதுப்பூச்சி மற்றும் அங்கு
காணப்படும் பறவைகள பற்றி விவரித்து சொல்லிவிடுவதால் தெரிந்துகொள்வதில்
சுலபமாகிவிடுகிறது.
சென்னையில் இருக்கும்
பாதிபேருக்கு மேல் இப்படி ஒரு பூங்கா இருப்பதே தெரியவில்லை என்று நினைக்கிறன். ஒரு
சிலபேர் நேரடியாக வந்து உள்ள செல்ல அனுமதி கேட்கிறார்கள் ஆனால் அங்கு காவலில்
உள்ளவர்கள் அதற்க்கு அனுமதி இல்லை என்றே சொல்லி கொண்டிருந்தார்கள். மிக பெரிய
நகரத்தில் இப்படி ஒரு பூங்கா இருப்பது அதுவும் சிட்டி உள்ளேயே இருப்பது, உள்ளே
வலம் வந்துகொண்டிருந்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது.உள்ளே அமைதியாக இருந்தாலும்
வெளியே சென்றுகொண்டிருக்கும் வாகனங்களின் சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது.
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
தேவையான செடி, கொடி மற்றும் மரங்களை பூங்காவில் அமைத்திருந்ததால் வண்ணத்துப்பூச்சிகள்
இயற்கையாகவே அங்கு வருவதை பார்க்க முடிந்தது.
பூங்காவில் மிக பெரிய
குளம் உள்ளது அவற்றில் நிறைய பாம்புதாரா, இராகொக்கு, painted stoke
,egret என்று நிறைய பறவைகள் உள்ளது.
பூங்கா என்றே
சொல்லமுடியாது ஒரு காட்டிற்குள் இருந்தால் என்ன அனுபவம் கிடைக்குமோ அதே உணர்வை
தருகிறது.அவ்வளும் செயற்கையாக அமைத்திருக்கிறார்கள் கிண்டி பூங்கா விட இதன்
அமைப்பு சிறந்ததாக இருக்கிறது ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு மட்டும் தினமும் இல்லை.
இங்கு இருக்கும்
பறவைகள் இங்கேயே தங்கி விடுகிறது அவை வேறு எங்கும் செல்வதில்லை என்று வழிகாட்டி
சொல்லிகொண்டிருந்தார் நிறைய வன்னத்துப்பூச்சி பற்றி விளக்கம் தந்த படியே சென்றார்
தொட்ட சிணுங்கும் மரம் உள்ளதா என்று நான் கேட்டதற்கு மரமாக இல்லை சிறு செடியாக
உள்ளது என்று அழைத்து சென்று காண்பித்தார் தொட்டு பார்த்தேன் சுருங்கியும்
விட்டது.
மூன்று நாள் முன்பு இராகொக்கை(Night Heron) கீரிபிள்ளை பிடித்து விட்டதாக தெரிவித்தார். இங்கு குள்ள நரி ஒன்று
கானப்படுவதாகவும் அவற்றை கான்பிபதற்க்கு அங்கும் இங்கும் எங்களை அழைத்து சென்றார் ஆனால் பார்க்கமுடியவில்லை
அவற்றின் இடத்தை மட்டும் பார்க்கமுடிந்தது. நடைபாதை முழுவதும் அடர்ந்த செடி,
கொடிகள், பாதையும் வளைந்து நெளிந்து செல்கிறது அதன் ஊடே தான் நாம் செல்லவேண்டும்.
அமர்வதற்கு ஆங்காங்கே மரத்தால் ஆன பலகைகள் மற்றும் குண்டு குண்டு கற்கள் அமைத்து
இருப்பதால் பெரியவர்கள் சிரமமின்றி சென்று வரலாம்.
சிறுவர்கள்
பார்ப்பதற்கு ஆமை, பெரிய மரபல்லி மற்றும் உயர்ந்து நிற்கும் பாம்புகள் என்று நிறைய
பொழுதுபோக்கு விஷயங்களும் உண்டு.சுற்றுலா போல் நிறைய மனிதர்கள் இல்லாததால் வெகு
அமைதியாக இருக்கிறது நாமும் சுதந்திரமாக சுற்றி வரலாம்.அந்த பூங்காவை சுற்றிலும்
நிறைய பஸ். கார் என்று போய்கொண்டே இருக்கிறது நடுவில் பூங்கா இருப்பதுதான்
சிறப்பே. உதாரணமாக கிரிக்கட் ஸ்டேடியம் சுற்றிலும் வண்டிகள் செல்லும் ஆனால் உள்ளே
மும்மரமாக கிரிகட் விளையாடி கொண்டிருப்பார்கள் இதுவும் அப்படியே உள்ளது.
இயற்கையாக பறவைகள்
வந்து செல்லவேண்டும் என்று, எந்த பறவை மற்றும் விலங்குகளையும் கூண்டில் அடைத்து
வளர்ப்பதில்லை என்ற கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார்கள். நிறைய மரங்கள் அதன்
நடுவே ஒரு குளம், இவற்றை சுற்றி தான் நாம் வலம் வர வேண்டும். நிறைய மரத்தால் ஆனா
பாலங்களை அமைத்து இருக்கிறார்கள்.
இரண்டு மணி
நேரத்திற்கு மேலேயும் சுற்றி வந்து கொண்டிருந்தேன் குளத்தில் படகு சவாரி விடும்
அளவுக்கு பெரியதாக இருக்கிறது ஆனால் பறவைகளுக்கு இடையுறாக இருக்க வாய்பும் உள்ளது.டாக்டர்
பானுமதி எழுதிய வண்ணத்துப்பூச்சி கையேடு க்ரியா பதிப்பகம் வெளியிட்டுயுள்ளது அவற்றை வாங்கி கொண்டு
சென்றால் இனம் பிரித்து பார்க்க வசதியாக இருக்கும்.
எனக்கு அப்பொழுதான்
வண்ணத்துப்பூச்சிகளை பார்பதற்கும் குழுவாக செல்வார்கள் என்று தெரிந்தது நானும்
அந்த குழுவில் இருந்ததால் பார்க்க முடிந்தது. நான் மட்டும் பூங்காவுக்கு தனியாக
சென்று இருந்தால் வண்ணத்துப்பூச்சிகளை விட்டு விட்டு பறவைகளை
பார்த்துகொண்டிருந்திருப்பேன்.அங்கே பாருங்கள் ப்ளாக் ராஜா(Black Raja) வண்ணத்துப்பூச்சி என்று ஒருவர் ஆர்வமாக மற்றவர்களை அழைத்தார் நானும்
பார்த்தேன் அதில் ஒருவர் இதை தான் நான் நீண்ட நாளாக தேடி வந்தேன் இபொழுதுதான்
பார்க்க முடிந்தது என்று நிறைய சந்தோஷதுடன் சொல்லிகொன்டேயிருந்தார். எனக்கு
அதுதான் முதல் தடவை என்பதால் ஒன்றும் புரியவில்லை எலாவற்றையும் பார்த்து கொண்டே
வந்தேன்
வண்ணத்துப்பூச்சிகளில்
இத்தனை வகைகளா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நம்மை சுற்றி பறந்து கொண்டிருக்கிறது.
தூரத்தில் பறவைகள், அருகில் வண்ணத்துப்பூச்சிகள், நம் மீதே பட்டு கொண்டிருக்கும்
மரத்தின் கிளைகள் என்று புது வித அனுபவமகா இருக்கும் நீங்கள் சென்று வந்தாலும்.
-CHEZHEYAN
-CHEZHEYAN
No comments:
Post a Comment