என்னது சென்னையில்
ஏரியா என்று நானும்தாங்க யோசித்தேன்? இன்றுதான் சென்னை நீண்டு ஸ்ரீபெரும்பத்தூர், செங்கல்பட்டு,மாமல்லபுரம்
என்று நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்து விட்டதே. அதனால் பெரும்பாக்கம் இதற்குள்ளேயே
அடங்கிவிட்டது. பழைய மகாபலிபுரம் சாலை தொடங்கும் இடமான மத்திய கைலாஷ் சாலையில்
காலை 6.30மணிக்கு வண்டியை திருப்பினேன்.
முதல் டோல் கேட் தாண்டி வலது பக்கம் திரும்பினால் பள்ளிகரணை சதுப்புநிலம் ஆனால்
திரும்பாதீர்கள் நேராகவே செல்லுங்கள்.ஒரே நேர் சாலை, போய்கொண்டே இருக்க வேண்டும்
சோழிங்கநல்லூர் நாலு முனை ஜங்ஷன் வரை போனால் போதும். அது எனக்கு தெரியாது நான் அதையும் தாண்டி
சென்று கொண்டிருந்தேன் கேளம்பாக்கம் வந்தது என்னுடன் வருபவர் அப்போதுதான்
யோசிக்கிறார் இந்த பக்கம் வந்தது போல் இல்லையே என்று சொல்கிறார். என்ன
சொல்கிறிர்கள் யாரிடமாவது கேளுங்கள் நீங்கள் தான் ஏற்கனவே வந்துள்ளிர்கள் என்ற
பிறகு அந்த பக்கம் போனவரை நிறுத்தி பெரும்பாகாம் ஏரி போகவேண்டும் என்றதற்கு வந்த
வழியே சென்று சோழிங்கநல்லூர் நாலுமுனை இடது புறம் திரும்புங்கள் என்று சொன்னவரின்
வார்த்தையை மீறாமல் சென்று இடது புறம் திரும்பிய உடனேயே வாபா வா இங்கே திரும்பாமல் எங்கே நேராக சென்று
கொண்டிருகிறாய் என்று அங்கிருந்த நீர்காகம் என்னை கேட்பது போல் இருந்தது.
மத்திய கைலாஷ்ல் இருந்து வருபவர்கள் சோழிங்கநல்லூர் நாலுமுனை ஜங்ஷன் வந்தவுடன்
வலது புறம் திரும்பினால் போதும் (கிழக்கு தாம்பரம் செல்லும் சாலை).இங்கேயும்
பள்ளிகரணை சதுப்புநிலம் என்ற பெயர் பலகை தான் உள்ளது ஏன் என்று தெரியவில்லை.பள்ளிகரணை
டோல் கேட் போல் இங்கேயும் ஒரு டோல் கேட் உள்ளது.வலதுபுறம், சமீபத்தில் பெய்த
மழையால் முழு தண்ணீருடன் ஏரி நிரம்பியும், ஒரு நேர் கோடு போட்டது போல் ஏரி நீண்டும்
இருக்கிறது.
நீர் காகங்கள் |
ஏரியின் தொடக்கத்திலேய புள்ளி மூக்கு வாத்து ( SPOT- BILLED DUCK) கண்ணில் பட்டதால் வண்டியில் இருந்து
இறங்கிவிட்டேன்.புள்ளி மூக்கு வாத்துடன் சீழ்க்கைச் சிறகியும்(LESSER
WHISTLING DUCK) நிறைய காணப்பட்டது.இரண்டு சிவப்பு மூக்கு ஆட் காட்டி(RED
WATTLED LAPWING) பறவை நடந்து கொண்டிருந்தது.கரையோரமே நீலத் தாழை கோழி(PURPLE
SWAMPHEN) ஒன்று கரையில் இருப்பவர்களை பற்றி கவலை படாமல் இறை தேடி கொண்டிருந்தது.
நீர் அதிகமாக இருப்பதால் பச்சை பசல் திட்டுகள் நீரில் மூழ்கி உள்ளது அதனால் பறவைகள் இறை தேட வசதிகள் குறைவாகவே இருக்கிறது.மஞ்சள்
மூக்கு நாரையை இதுவரை நான் பள்ளிக்கரணையில் பார்த்தது இல்லை ஆனால் பெரும்பாகத்தில் காணப்படுகிறது.
பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் இவ்இரண்டு இடங்களிலும் வண்டிகளின்
சத்தம் அதிகமாக உள்ளது. அமைதியான இடங்களில் வாழ்வை நடத்தும் இப்பறவைகள் இங்கு ஏற்படும்
சத்தத்திற்கு பழகிவிட்டது போலவே தெரிகிறது. வேடந்தாங்கல் இதற்கு நேர் எதிர், முழு
அமைதியாக இருக்கும். அங்கு பறவைகளின் சத்தத்தின் இடையிலேயே நாம் இருக்கவேண்டும்.
ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு மேல் பறவைகளை அவதானித்து, தெரியாத பறவைகளை
கொண்டுசென்ற பறவைகளின் புத்தகத்தின் உதவியோட தெரிந்து கொண்டு அப்பொழுதே குறிப்பும்
எடுத்துவிட்டேன்.
பெரும்பாகத்தில் பார்த்த பறவைகள்:
1.புள்ளி மூக்கு வாத்துகள் (Spot-Billed
Duck)
2.சீழ்க்கைச் சிறகி –இவையும் வாத்துதான் (Lesser
Whistling Duck)
3.சீழ்க்கைச் சிறகி குட்டிகள் (Chick
of Lesser Whistling Duck)
4.நீலத் தாழை கோழி (Purple
Swamp Hen)-அருகில் மூன்று குட்டிகள் இருந்தது
5.சிறிய நீர் காகம் (Little
Cormorant)
6.சாம்பல் நாரை (Grey Heron)
7.மஞ்சள் மூக்கு நாரை (Painted
Stork)
8.மடையான் (Pond Heron)
9.சிறிய கொக்கு (Little Egret)
10. செந்நாரை (Purple
Heron)
11.நாமக்கோழி (Coot)
12.நடுத்தர கொக்கு (Intermediate
Egret)
13.சிவப்பு ஆட் காட்டி (Red
Wattled Lapwing)
14.கூழைக்கடா (Pelican)
15.கரண்டி வாயன் (Spoon Bill)
16.கருப்பு வெள்ளை மீன் கொத்தி (Pied KingFisher)
17.பவள கால் உள்ளான் (Black Winged Stilt)
18.தாழைக் கோழி (Common Moorhen)
19.சாம்பல் கதிர் குருவி (Ashy Prinia)
20.பச்சைக்கிளி (Parakeet)
21.அன்றில் (Black Ibis or Glossy IBIS)
பறவைகளை பார்பதற்க்கா என்று தெரியவில்லை ஆனால் சுலபமாக நின்று பார்பதற்கு
சாலை ஓரமாக நடை மேடை அமைத்து இருக்கிறார்கள்.
இரண்டு மஞ்சள் மூக்கு நாரைகள் அடுத்த கரையோரம் இறை தேடி கொண்டிருந்ததை
பைனாகுலர் வழியாக பார்த்தப்பொழுது தெரிந்தது. நாரை சிறுது நகர்ந்தாலே பக்கத்தில்
இருக்கும் அடுக்கு மாடி வீட்டுக்குள் தான் போகவேண்டி வரும் அந்த அளவுக்கு
கட்டிடங்கள் ஏரிக்குள்ளே வர ஆரம்பித்துவிட்டது பக்கத்திலேயே நடுத்தர கொக்கும் இருந்தது.
கரண்டிவாயன் பறவைகள் நிறைய தெற்கு பகுதியில் நின்று கொண்டும் அதன் அருகில்
நடுத்தர கொக்கும் இருப்பதை பார்க்க முடிந்தது. சாம்பல் நாரை ஒன்று தனியாக நின்று
கொண்டிருந்தது. எங்கிருதோ ஒரு மஞ்சள் மூக்கு நாரை பறந்து வந்து அதன் மிக அருகில்
வந்து நின்றது சாம்பல் நாரை எந்த வித சலனமும் இல்லாமல் வரியா வா என்பது போலவே
காணப்பட்டது.
அப்பொழுது இவைதான் நினைவுக்கு வந்தது மணப்பாக்கம் பாலத்தின் கீழே மடையான் ஒன்று
அசயாமல் நின்று இருந்தது அதன் அருகில் நிறைய காகங்கள் அவற்றை தொந்தரவு செய்வது
போல் வருவதும் செல்வதும்ஆக இருந்தாலும் எந்தவித சலனமும் அதனிடம் இல்லை நானும்
நிறைய நேரம் பார்துகொண்டிருதேன் ம் அப்படியே இருந்தது.
மீண்டும் பெரும்பாக்கத்திற்கு வருவோம்
சிகப்பு ஆட் காட்டி பறவை எந்த இடையூறும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.
இரண்டு பறவைக்கு மேல் காணப்படவில்லை. பறவைகளை படம் எடுக்க நான்கு பேர் இங்கும்
அங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். பறவை நோக்குபவர்கள் என்றால் எங்களை தவிர வேறு
யாரும் இல்லை.
ஏரிய்யை சுற்றி கட்டிடங்கள் |
முதல் வருடம் காலேஜ் படிக்கும் மாணவர் ஒருவர் தனியாக பறவைகளை படம் எடுத்து
கொண்டிருந்தார் அவரிடம் பேச்சு கொடுத்தபோது புதியதாக CANON 700D வாங்கியதாக சொன்னவர் இங்கு இருக்கும் ஒரு
பறவையின் பெயர் கூட தெரியவில்லை என்ற உண்மையை சொன்னார் படம் எடுக்க வேண்டும் என்ற
ஆசை அதான். எப்படி பெயர் தெரிந்து கொள்வது என்று அவருடைய கேள்விக்கு சில அடிப்படை
தகவல்களை அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
பூ நாரை பள்ளிகரனைக்கு வந்து உள்ளது என்ற தகவலால் அப்படியே பள்ளிகரனையும் எட்டி
பார்ப்போமே என்று சென்றேன். அங்கு சென்றால் நிறைய பவள கால் உள்ளான்கள் காகத்துடன்
சண்டை போட்டு கொண்டிருந்தது. பூ நாரைகள் இருபதுக்கு மேல் இருந்தது மற்றும் தன்
குட்டிகளுடன் புள்ளி முக்கு வாத்து நீந்தி கொண்டிருந்த காட்சி ஒரு சேர பார்க்க
முடிந்தது.
பள்ளிக்கரனையில் பார்த்த
பறவைகள் :
பூ நாரைகள் (Lesser Flamingo)
நீலவால் இலைக் கோழி (Pheasant Tailed Jacana)
வெள்ளை அரிவாள் மூக்கன் (White IBIS)
பவள கால் உள்ளான் (Black Winged Stilt )
சாம்பல் நாரை (Purple Heron)
உண்ணிக் கொக்கு (Cattle Egret)
கருப்பு அரிவாள் மூக்கன் (Glossy IBIS or Black Ibis)
மடையான் (Pond Heron)
கூழைக்கடா (Pelican)
உண்ணிக் கொக்குக்கு இனபெருக்க காலம் என்பதால் நிறைய கொக்கின் வண்ணம் ஆரஞ்
கலர் துவி விட்டது போல் இருந்தது. அமைதியாகவும் கூட்டமாகவும் நின்று
கொண்டிருந்தது.பவள கால் உள்ளாங்களை தவிர மற்ற பறவைகள் ஒருவித தியான நிலையிலேயே
காணப்பட்டது. அன்றில் பறவையை கருப்பு அரிவாள் மூக்கன் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது
அதேபோல் பவள கால் உள்ளானை நெடுங்கால் உள்ளான் என்றும் பெயர் உள்ளது.
வண்டியை யு டேர்ன் போட்டு குப்பைகளை கொட்டும் சதுப்புநிலத்தில் பார்வையை
செலுத்தினேன்.முதலிலேயே நிறைய தாழை கோழிகள் இருந்தது மற்றும் பைனாகுலர் கொண்டு
பார்த்த பொழுது நீலவால் இலைக்கோழி நான்கு தென்பட்டது அவற்றில் மூன்று பறந்து
சென்றதில் ஒன்று மட்டும் நீரில் தொடர்ச்சியாக அலகை நுழைப்பதும் எடுப்பதும்மாக இருந்தது.
மூன்று இலைக் கோழி பறந்து சென்றது போல் விடு
ஜுட் என்று நானும் அங்கிருந்து பறந்துவிட்டேன்.
-செழியன்
Thanks for sharing your views
ReplyDeletethanks your feedback
Deleteநண்பரே பள்ளிகரணையில் எவ்வளவு lesssar flamingo பார்த்தீர்கள்? சோழிங்க நல்லூரிலும் உள்ளது பள்ளிகரணை சதுப்பு நிலம் தான். ஒரு காலத்தில் பள்ளிகரணை சதுப்பு நில நீர்பரப்பு வேலச்சேரியில் இருந்து பெரும்பாக்கம்வரை விரிந்து இருந்தது. (சுமார் 4500எக்டேர்)
Deleteநண்பரே பள்ளிகரணையில் எவ்வளவு lesssar flamingo பார்த்தீர்கள்? சோழிங்க நல்லூரிலும் உள்ளது பள்ளிகரணை சதுப்பு நிலம் தான். ஒரு காலத்தில் பள்ளிகரணை சதுப்பு நில நீர்பரப்பு வேலச்சேரியில் இருந்து பெரும்பாக்கம்வரை விரிந்து இருந்தது. (சுமார் 4500எக்டேர்)
Deleteநண்பரே பள்ளிகரணையில் எவ்வளவு lesssar flamingo பார்த்தீர்கள்? சோழிங்க நல்லூரிலும் உள்ளது பள்ளிகரணை சதுப்பு நிலம் தான். ஒரு காலத்தில் பள்ளிகரணை சதுப்பு நில நீர்பரப்பு வேலச்சேரியில் இருந்து பெரும்பாக்கம்வரை விரிந்து இருந்தது. (சுமார் 4500எக்டேர்)
Deleteநண்பரே பள்ளிகரணையில் எவ்வளவு lesssar flamingo பார்த்தீர்கள்? சோழிங்க நல்லூரிலும் உள்ளது பள்ளிகரணை சதுப்பு நிலம் தான். ஒரு காலத்தில் பள்ளிகரணை சதுப்பு நில நீர்பரப்பு வேலச்சேரியில் இருந்து பெரும்பாக்கம்வரை விரிந்து இருந்தது. (சுமார் 4500எக்டேர்)
Deleteதகவல்களுக்கு நன்றி திரு.சேஷன், பள்ளிகரனையில் இருபதுக்கு மேல் lesssar flamingo பார்த்தேன்.
ReplyDelete