தமிழில் காட்டுயிர்
பற்றிய புத்தகங்கள் வருவது மிக மிக மிக குறைவு. அங்கொன்று இங்கொன்றுமாக தமிழில்
வரும், அதனால் வருடம் தோறும் இயற்க்கை பன்னாட்டு அமைப்பு(IUCN) வெளியிடும் சிவப்புப்
பட்டியல் (RED LIST BOOK)பற்றிய
புத்தகத்தை நாம் தமிழில் எதிர்பார்த்தால்?
அதிசயமாக அப்படி ஒரு
புத்தகம் வெளிவந்திருப்பதுதான் ஆச்சரியம். ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் அவர்களின்
எழுத்தில் 23 உயிரினங்களை பற்றி விரிவான தகவல்களை தந்துள்ளார் அதில் பறவை, விலங்கு
மற்றும் டால்பின் என்று கலந்தே எழுதியுள்ளார்.
இதுவரை தமிழில் வெளிவந்துள்ள
புத்தகத்தை பற்றி இரண்டு கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
http://birdsshadow.blogspot.in/2014/04/books-in-tamil.html
http://birdsshadow.blogspot.in/2015/02/books-in-tamil-ii.html
http://birdsshadow.blogspot.in/2014/04/books-in-tamil.html
http://birdsshadow.blogspot.in/2015/02/books-in-tamil-ii.html
சிறிய புத்தகம்
என்பதால் இரண்டு மணிநேரத்திற்குள் படித்துவிடலாம். தமிழில் காட்டுயிர் புத்தகங்கள்
வருவதில்லை என்பதற்கு முக்கிய காரணம் யாரும் வாங்குவதில்லை என்பதே முதன்மையாக
இருக்கிறது. அது உண்மை என்று நிரூபிப்பது போல் காட்டுயிர் என்ற
பத்திரிக்கை ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேல் வெளிவருகிறது அனால் எத்தனை
பேருக்கு பத்திரிக்கை வருவது தெரியும்? மற்றும் எத்தனை பேர் அவற்றை
வாங்குகிறார்கள்?
இரண்டு கேளிவிக்கும் பதில்
– பத்திரிக்கை வருவதும் தெரியாது மற்றும் யாரும் வாங்குவதும் இல்லை என்ற பதில்தான்
உடனே வரும். அதனால் சிவப்புப் பட்டியல் என்று புத்தகத்தை வாங்கி படியுங்கள்
மற்றவர்களுக்கும் பரிசாக கொடுங்கள்.
புத்தகத்தில்
இருந்து :
நாம் முன்பு அதிகம்
பார்க்கும் அணில் தான் முதல் கட்டுரையாக தொடங்குகிறது அதை தொடர்ந்து
வரையாடு,பறக்கும் அணில் என்று சுவாரசியமாக எழுதி செல்கிறார். மிக பெரிய கட்டுரையாக
இல்லாமல் சிறியது இல்லாமல் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று பக்கத்தில் முடிவது
போல் அணைத்து கட்டுரைகளும் இருக்கிறது.
பறக்கும் அணில் என்பது
பறக்குமா என்ற கேள்விக்கு மரத்தை விட்டு அடுத்த மரத்திற்கு தாவுவதே பறப்பது போல்
இருக்கும் அதுதான் பறக்கும் அணில். ஓநாய் என்ற கட்டுரையில் இரண்டு வித ஓநாய் மிக
முக்கியமானது அதில் ஒரு ஓநாய்யான வெண் ஓநாய் காட்டு பகுதியில் இருந்து முற்றிலும்
அழிக்க பட்டுவிட்டதாக சொல்கிறார்கள் என்று சொல்கிறார்.
நாம் அதிகம்
கவனிக்காத மரப்பல்லி, அரணை போன்ற உயிரினங்கள் பற்றிய கட்டுரை முக்கியமானது இவையும்
அழிவின் விளம்பில் உள்ளது. புலி மட்டுமே அழிவின் விளிம்பில் உள்ளதுபோல்
விளம்பரங்கள் வருகிறது அனால் எண்ணற்ற உயிரினங்கள் இன்று இதே நிலைமைதான் என்று இந்த
சிகப்பு பட்டியல் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
மொத்தம் 23 உயிரினங்களை
பற்றி விவரிக்கிறது அனைத்தும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு எங்களை கொல்லாதீர்கள்
என்று மனிதர்களை பார்த்து சொல்லிக் கொண்டிருக்க்கும் உயிரினங்கள்.
ஒரு சில மனிதன் கொல்கிறான்
மற்ற சில மனிதர்கள் கொல்வது இயற்க்கைக்கு எதிரானது, அந்த உயிரினம் அழிந்து விடும் என்கிறார்கள், ஆக மனிதர்களால் ஏற்படும் ஆபத்து தான் மிக அதிக உயிரினங்கள் இந்த
பூமியில் இருந்து அற்று போனதற்கு முக்கிய காரணம் அதையே இந்த புத்தகம் உரக்க
சொல்கிறது.
கிடைக்கும்
இடம்:
New Centaury Book House (p) Ltd
No-41, Sidco Industrial Estate
Ambatur,Chenaai-600 098
Phone-044-26251968, 26258410,
26241288
Rupees-65.00
-செழியன்
இன்றைய கால கட்டத்தில்த நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் மற்றும் பறவைகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
ReplyDeletePlease save a all species with in above you think world's 🌎🌎🌎🌎🌎🌎🌎🌍🌍🌍 first creature animals and birds human beigns last 3000 years
ReplyDelete