கருடன்-விக்கிபீடியா |
இரைகொல்லிகள்(Raptors) என்றால் ?
பறவை நோக்குதலில் இரைகொல்லிகள்(Birds
of Prey) என்று அழைக்கப்படும் கழுகு, பருந்து, வல்லூறு, ராஜாளி, வைரி, பாறு கழுகுகள், ஆந்தை போன்ற பறவை வகைகளுக்கு என்று தனி
பிரிவே உள்ளது. இவை அனைத்தையும் ராப்டர்ஸ் (இரைகொல்லிகள்) என்று பொது பெயரில் ஆங்கிலத்தில்
அழைப்பதுண்டு. இவ்வகை பறவைகள் உணவுக்காக மற்ற விலங்குகளை கொன்று சாப்பிடும்
பழக்கமுடையது (உதாரணம்: எலி, தவளை, பாம்பு, ஓணான், மீன், சிறு பறவை, பறவை குட்டிகள்
போன்றவற்றை சாப்பிடும்). பறவை நோக்குதலில் இவ்வகை பறவைகளை தனித்து கவனிக்கப்படுகிறது. இரைகொல்லிகள் பறவைகளுக்கு என்றே நிறைய ஆங்கில புத்தகங்கள் தனியாக வெளிவந்துள்ளது.
இரைகொல்லிகள் பறவைகளை பார்ப்பதற்கென்றே நிறைய பறவை சங்கங்கள், தனி மனிதர்கள்
உண்டு. இவ்வகை பறவைகளை தொடர்ச்சியாக பார்த்து அராய்ச்சி செய்வதற்கு உலகம்
முழுவதும் நிறை அமைப்புகள் செயல்படுகிறது. பறவை நோக்குதலில் நாம் இவ்வகை பறவைகள்
கண்டிப்பாக எதிர் கொள்வோம். காரணம், நாம் செல்லும் இடங்களில் பருந்து, வல்லூறு,
வைரி போன்ற இரைகொல்லிகள் பறவைகளை காணமுடியம். அதனால் இவ்வகை பறவைகளை தெரிந்து
கொண்டால்தான் நம்மால் சுலபமாக இனம் காண முடியும்.