Adyar-Sangeetha Hotel |
மே
மாதம் வந்தால் ஒரு பறவையின் குரலை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
இந்த வருடமும் அதே போல் குரல் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு நாள் சாஸ்திரி
பவன் சாலையில் செல்லும்பொழுது ஓசை கேட்டது ஆனால் ஓசை வந்த இடத்தை நோக்கி பார்க்க
கூட முடியவில்லை அந்த அளவுக்கு வண்டிகள் சாலையில் அதிகம் ஓடியது. உடனே முடிவு
செய்தேன் நகரத்தில் வேறு எங்கெல்லாம் இவற்றின் குரல்கள் கேட்க முடிகிறது மற்றும் அந்த
பறவையை பார்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை குரலை நோக்கிச் செல்வோம்,
முடிந்தால் பறவையை அல்லது மரங்களை படம் பிடிப்போம் என்று வண்டியை சென்னை நகரம்
முழுவதும் ஓட்டி வலம் வந்தேன். எந்த பறவை என்று சொல்லவில்லையே என்பீர்கள் வேறு
யாரு நம்ம கறுப்பன் தான், அதாங்க குயில்.
காகத்தை திசை மாற்றி அதன் கூட்டில் முட்டை இடுவதே பெரும் சவாலாக வருடா
வருடம் குயில் செய்துவருகிறது.
மனிதனுக்கும்-காகத்திற்கும் உள்ள வித்தியாசம், நம் குட்டி இவை இல்லை என்று தெரிந்த
பிறகு காகங்கள் தன் கூட்டில் இருந்து குயில் குட்டியை வருடா வருடம் வெளியே துரத்தும். இருந்தாலும்
அடுத்த வருடம் குயிலின் முட்டையை போற்றி பாதுகாக்கம். நாம் அரசியில்வாதிகளிடம்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்குறுதிகளை நம்பி, தெரிந்தே ஏமாறுவது போல்
காகங்கள் வருடம் வருடம் தெரியாமல் ஏமார்ந்து
கொண்டிருக்கும். நாம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, காகங்கள் வருடம் ஒரு முறை
ஏமாறும், வித்தியாசம் அவ்வளவுதான்.