(இயற்கையை அழித்தால் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஜூன் மாத பாவையர் மலர் இதழில் வெளிவந்துள்ளது.)
உலகில் உயிரினங்கள் தோன்றியபொழுது மனிதன் தோன்றவில்லை, டைனோசர்கள்
வாழ்ந்த காலத்திலும் மனிதன் இல்லை. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ஸாக வருவேன் என்ற
வசனத்திற்கு ஏற்ப மனிதன் லேட்டாக பூமியில் தோன்றினான். ஆனால் லேட்டஸ்ஸாக அனைத்து உயிரினங்களையும் தன் காலடியில்
கொண்டுவந்துவிட்டான். இன்று மனிதன் நினைத்தால் ஒரே வாரத்தில் உலகில் உள்ள
உயிரினங்களை அனைத்தும் கொன்றுவிட முடியும் அந்த அளவுக்கு சர்வ வல்லமை படைத்த நிலைக்கு உயர்ந்துவிட்டான்.
யானை ஊருக்குள் புகுந்தது, சிறுத்தை மனிதனை கொன்றது போன்ற செய்தியை
நாம் அடிக்கடி பத்திரிக்கையில் படிப்போம். உடனே யானை மற்றும் சிறுத்தையை கொல்ல,
விரட்ட முயற்சிப்போம். இவற்றை நேரடியாக பார்க்கும் பொழுது, சரி என்ற முடிவுக்கு வருவோம்.
ஆனால் அப்படி வருவதற்கு முன்பு நம் வீட்டுக்குள் நடக்கும் ஒரு நிகழ்வை பார்த்தபிறகு
முடிவு செய்வோம்.
