பச்சை சிட்டு |
ஜோலார்பேட்டையில்,
ஒரு ரிசர்வ் பேங்க் உள்ளது என்று தெரியாமல் இருந்துவிட்டேன். இரயில் நிலையத்தில்
அருகில் இருந்த டீ கடையில் அதிகாலை நான்கு நாற்பத்தைந்து மணிக்கு(4.45am) டீ குடித்துவிட்டு, பத்து ரூபாய் காயினை கொடுத்தபொழுது,
செல்லாது என்று டீ கடைகாரர் சொல்லிவிட்டார்.
ஒரு கணம் ஆடிபோய்விட்டேன், என்ன அண்ணே
அதிகாலையில் இப்படி செல்லாது என்று சொன்னால் என்ன செய்ய முடியும். போனமுறை தமிழ்ப்
பறவைகள் சந்திப்புக்கு செல்லும்பொழுதுதான் 1000, 500 ரூபாய் செல்லாது என்று
சொல்லிவிட்டார்கள், இதை நம்பி ஊரு விட்டு, வேறு ஊருக்கு வந்து விட்டோம் என்ற
சொன்னால், அதெல்லாம் இல்லை இந்த ஊரில் யாரும் வாங்கமாட்டார்கள் என்று அழுத்தமாக திரும்ப
திரும்ப சொன்னார். வேறு வழி இல்லாமல்
ரூபாய் நோட்டை கொடுத்து நகர்ந்தோம்.
ஏலகிரி மலை மேல் சென்று, அங்கு எந்த
ரூபாயும் செல்லாது என்று சொல்லிவிட்டால் என்ற பயம் வேற வந்துவிட்டது. இனி ரூபாய்
நோட்டு தொடர்பாக எந்தவித அறிவிப்போம் இந்த இரண்டு நாளில் வந்தால் அதை சரி செய்கிற
முழு பொறுப்பும் ஜெகன்நாதன் சார் தான் என்று முடிவு செய்தே, பஸ்க்கு நின்றிருந்தேன்
நண்பர் மாசிலாமணியுடன்.