பச்சை சிட்டு |
ஜோலார்பேட்டையில்,
ஒரு ரிசர்வ் பேங்க் உள்ளது என்று தெரியாமல் இருந்துவிட்டேன். இரயில் நிலையத்தில்
அருகில் இருந்த டீ கடையில் அதிகாலை நான்கு நாற்பத்தைந்து மணிக்கு(4.45am) டீ குடித்துவிட்டு, பத்து ரூபாய் காயினை கொடுத்தபொழுது,
செல்லாது என்று டீ கடைகாரர் சொல்லிவிட்டார்.
ஒரு கணம் ஆடிபோய்விட்டேன், என்ன அண்ணே
அதிகாலையில் இப்படி செல்லாது என்று சொன்னால் என்ன செய்ய முடியும். போனமுறை தமிழ்ப்
பறவைகள் சந்திப்புக்கு செல்லும்பொழுதுதான் 1000, 500 ரூபாய் செல்லாது என்று
சொல்லிவிட்டார்கள், இதை நம்பி ஊரு விட்டு, வேறு ஊருக்கு வந்து விட்டோம் என்ற
சொன்னால், அதெல்லாம் இல்லை இந்த ஊரில் யாரும் வாங்கமாட்டார்கள் என்று அழுத்தமாக திரும்ப
திரும்ப சொன்னார். வேறு வழி இல்லாமல்
ரூபாய் நோட்டை கொடுத்து நகர்ந்தோம்.
ஏலகிரி மலை மேல் சென்று, அங்கு எந்த
ரூபாயும் செல்லாது என்று சொல்லிவிட்டால் என்ற பயம் வேற வந்துவிட்டது. இனி ரூபாய்
நோட்டு தொடர்பாக எந்தவித அறிவிப்போம் இந்த இரண்டு நாளில் வந்தால் அதை சரி செய்கிற
முழு பொறுப்பும் ஜெகன்நாதன் சார் தான் என்று முடிவு செய்தே, பஸ்க்கு நின்றிருந்தேன்
நண்பர் மாசிலாமணியுடன்.
திரு.சுதாகர் |
அதிகாலை வெளுத்து காலை வெளிச்சமே
வந்துவிட்டது ஆனால் பஸ் நகி. முதல் பஸ் வராமல் அடுத்த பஸ் வந்தது, ஏறி அமர்ந்து
பதினான்கு கொண்டை வளைவு கொண்ட ஏலகிரி மலையை ரசித்துகொண்டே நடு நடுவே ஜோலார்பேட்டை
ரிசர்வ் வங்கி பற்றிய பேச்சுடன் பயணம் இருந்தது.
ஒவ்வொரு வளவுக்கும் கம்பர், ஒவையார்,
பாரி வளைவு என்ற தமிழ் பெயர்கள் பார்க்கமுடிகிறது. உயர உயர செல்ல, விமானத்தில்
இருந்து பார்பதுபோல் உள்ளது என்று மாசிலாமணி சொன்னார்.
நிறை மீடிங்கில் கலந்துகொண்டிருக்கிறேன்
ஆனால் பொருளாதார சம்பந்தமான மீட்டிங்கை
தாண்டி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்வது இது இரண்டாவது முறை. அனைவரும்
பறவைகளை பற்றி பேசிக் கொண்டிருந்ததபொழுது
இந்த நேரம் அலுவலகம் போன்ற இடங்களில்
பர பரப்பாக அந்த ஆர்டர் என்னாச்சு, வர வேண்டிய பணம் வந்தாச்சா?, மாலை
ரிவியூ மீட்டிங் உண்டு, மேனேஜர் கோபமாக இருக்கிறார் என்று, இரத்தகொதிப்பில் சுற்றி
வருவார்கள் என்ற நினைப்பு நடுவில் வந்து சென்றது.
ஒருவர் கேட்டார், பறவைகள் நம்மை
பார்ப்பதில்லை நாம் ஏன் அவற்றை பார்க்க வேண்டும்?
அவரிடம் எந்த நடிகரும் உங்களை
பார்ப்பதில்லை நீங்கள் ஏன் அவர் படங்களை பாரக்கறீர்கள்? அதில் பால் அபிஷேகம் வேறு என்று
சொன்னேன். எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
இரண்டு நாள் பறவை நிபுணர்கள் பேச பேச
நாம் எங்கு உள்ளோம் என்று தெரிகிறது, இன்னும் எங்கு செல்ல வேண்டும் என்றும்
புரிகிறது. நுணுக்கமாக செயல்படுகிறார்கள்.
உதாரணம்:
பொதுவாக பறவைகள் குரல் கொடுப்பதை, நாம் ஒரே மாதரியாக புரிந்து வைத்திருப்போம்.
அதாவது காகம் வீட்டின் முன்பு கரைத்தால் விருந்தாளி வர போகிறார்கள். இதை தவிர மற்ற
பறவைகளின் குரலை ஒரு பொருட்டாக கூட மதிக்கமாட்டோம்.
ஆனால் பறவைகளின் குரலில் நிறைய வகைகள்
உண்டு என்பதை பறவை ஆராய்ச்சியாளர் திவ்விய ப்ரியாவின் வார்த்தையில் பார்போம்.
பறவைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டும் Call கொடுக்கும். ஆனால்
பாடுவது என்பது ஆண் பறவை தான் செய்யும். Call என்பது ஒரு வார்த்தை
என்றும், பாட்டு என்பது ஒரு நிமிடம் மேல் தொடர்ந்து கொடுத்து கொண்டிருப்பது என்று
தமிழில் நாம் புரிந்து கொள்ளலாம் என்றார். மேலும்
திரு.ஜெகன்நாதன் |
Call வகைகள்:
Intimate call
Threat call
Alarm call
Breeding call
Territorial call
இவற்றை ஒவ்வொன்றும் விரிவாக
சொல்லிகொண்டிருந்தார். காலையில் பெரும்பாலும் அணைத்து பறவைகளும் Call கொடுக்கும். அதனால் அப்பொழுது சென்றால் நீங்கள் கேட்கமுடியும்.
குரலை கேட்டவுடன் பதிவு செய்துவிட வேண்டும் அதன் பிறகே அதன் திசையை நோக்கி
முன்னேறவேண்டும். அருகில் சென்று பதிவு செய்யாலாம் என்று இருத்தல் கூடாது போன்ற
தகவல்கள் நிச்சயம் நமக்கு பறவைகளை பற்றிய அறிவை அதிகபடுத்துகிறது.
போனமுறை பறவைகள் படங்கள் வரைவதை
பற்றிய நிகழ்வு போல் இந்தமுறையும் இருந்தது. மற்றும் புதிதாக பறவைகள் எப்படி நாம்
சார்ட்டில் உருவாக்க முடியும் என்பதை பற்றி பானுமதி மேடம் செய்து காட்டினார்.
இரண்டாம் நாள் நிழ்க்சியில் பலவிதமான உயிரிணங்களை சார்ட்டில் உருவாக்கி அவற்றை
பற்றி நிறை பேர் பேசினார்கள். எப்பொழுதும் பானுமதி மேடம் ஒரு விதமான புத்துணர்ச்சியுடன்
செயல்படுவதை பார்திருக்கிறேன்.
பானுமதி மேடம் |
இந்தியா முழவதும் வலம் வருவதில்
ஆர்வம் உடையவர். அவரிடம் பேசும்பொழுது பெரும்பாலும்
வெளி மாநிலத்தில் இருப்பார். அசாமில் இருக்கிறேன், கோடியக்கரை சென்று வந்தேன்
என்று அவற்றை பற்றி சொல்வார். இப்பொழுது கூட இந்த நிகழ்ச்சி முடிந்து ஹரியான
செல்லபோவதாக சொன்னார். வாழ்கையை மகிழ்ச்சியுடன் வலம் வருவதில் ஆர்வம் உடையவர்
பானுமதி மேடம்.
புதர்சிட்டு |
அதிகமா பறவைகளை பார்த்தோம். எந்த
பறவையும் ஒன்று, இரண்டு மட்டும் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் இருப்பதை இங்கு
பார்க்க முடிந்தது. குறிப்பாக புதர்சிட்டு(Pied Bushchat) கொட்டி கிடக்கிறது.
இரண்டு நாள் முழுவதும் நம் கூடவே பயணிக்கிறது, திரும்பிய பக்கமெல்லாம்
கண்ணில் தென்படுகிறது. வலசை பறவைகள் வர தொடங்கி விட்டதையும் பார்க்கமுடிந்தது.
புதியவர்கள் இங்கு வந்தால் மலைகள்,
காடு சூழ் பறவைகளை கண்டுகளிக்கலாம். ஆனால்
நீர் நிலை பறவைகள் ஒன்று பார்க்க முடியவில்லை அதன் கூடவே காகங்களும் சேர்த்து கொள்ளலாம்.
பார்த்த குறிபிட்ட
பறவைகள் :
காட்டு மைனா (Jungle Myna)
சின்ன மின்சிட்டு (Small Minivet)
பச்சை சிட்டு (Leaf Bird)
நீல வால் கீச்சான் (Long Tailed Shrike)
சாம்பல் வாலாட்டி (Grey Wagtail) - என்று இன்னும் நிறைய பறவைகளை இரண்டு நாட்களும் பார்த்து
ரசித்தோம். அவற்றை தனியாக எழுதிவிடுகிறேன்.
தங்குவதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ள
அறை மிக வசதியாக இருந்தது. இரண்டு நாளும் அனைவருக்கும் சமமான உணவு. முதல் நாள்
காலை உள்ளே நுழைந்தபொழுது சுதாகர் சார் இட்லி சாம்பார் நன்றாக உள்ளது என்று
சொன்னார். அதை பின்பற்றி சாப்பிட்டு முடித்தாகிவிட்டது.
விழா தொடக்கமாக சுதாகர் சார் பேச
வந்தார். அவரிடம் தமிழில் பேசுங்களே என்று கடைசி நிமிடம் சொல்லப்பட்டதால் நிறைய
பேச வந்தவருக்கு மிக சிறிய உரையாக அமைந்துவிட்டது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு
இவருடைய பங்களிப்பு மிக அதிகம் என்றே சொல்லவேண்டும். பாகுப்பாடு பார்க்காமல்
அனைவருடனும் பழக கூடியவர்.
நடு நடுவே ஜெகன்நாதன் சார், பதிவு
செய்யாதவர்கள் உடனடியாக சென்று பதிவு செய்து விடுங்கள் என்று சொன்னார்.
சொல்லிவிட்டு ஏன் சொல்கிறேன் என்று
உங்களுக்கு புரியும் என்ற வார்த்தை, அனைவரும் சிரிப்புடன் சென்று பதிவு
செய்வதை பார்க்க முடிந்தது.
மிக அருமையான நிகழ்ச்சி இவை என்பதால்
மற்றும் தொய்வில்லாமல் வருடம் தோறும் நடக்க வேண்டும் என்பதால் முதல் நாள் காலை,
உள்ள நுழைந்த உடனே நேராக சென்று பதிவு செய்துவிட்டேன் கூடவே நண்பர்
மாசிலாமணியும்.
நிகழ்ச்சியில் சில மாறுதல்கள்
இருந்தாலும் முடிவில் அனைத்தும் கற்று கொண்ட திருப்பதி ஏற்பட்டது. இந்த முறை நிறைய
அராய்ச்சி மாணவர்கள் வந்திருந்து அவர்களின் பங்களிப்பும் இருந்ததால், அனைவருக்கும்
பயன் உள்ளதாக அமைந்தது. பறவைகளை பற்றி மிக நூனுக்கமாக ஆராய்ச்சி செய்து
வருகிறார்கள்.
சாந்தாராம் சார், இரைகொல்லி பறவைகளை(Raptors) எப்படி இனம் பிரித்து கண்டுபிடிப்பது என்பதை விளக்கி
சொன்னார். இரைகொல்லி பறவைகளின் இறக்கை அமைப்பு, அதன் நிறங்கள், ஒவ்வொரு
பருவத்திலும் அதன் நிறங்கள் மாறும் முறைகள்,
இதனால் சுலபமாக கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னார். உதாரணம்: கருடன் (Brahminy Kite) இவற்றின் ஒவ்வொரு
பருவத்திலும் நிறைய மாறுதல் இருப்பதை பார்க்கமுடியும் என்றார். இரைகொல்லி பறவைகள்
பற்றி விவரிக்கும்பொழுது அதற்கு தேவையான
படங்களை காண்பித்து சொன்னது சுலபமாக மனதில் ஏற வழிவகுத்தது.
முடிவில்,
பெரிய பறவை நிபுணர் கூட இரைகொல்லி பறவைகளை நூறு சதவிதம் சரியாக கண்டுபிடிக்க
முடியாது என்ற வாசாகம் இருந்தது. நாம் இன்னும் எந்த நிலையில் இருக்கிறோம் என்ற
நினைப்பு வந்தது.
திரு.தியடோர் பாஸ்கரன் |
இரவில் உணவை முடித்து விட்டு சிறு
சிறு குழுக்களாக நின்று பேசி கொண்டு இருந்தோம். சேகர் தத்தாத்ரி அவர்களின்
சிலிக்கா ஏரியின் வீடியோவை பார்த்தோம். சிலர் இரவு பறவைகளை பார்க்க கையில் டார்ச்
எடுத்து கொண்டு கிளம்பினார்கள்.
ஜெகன்நாதன் சார் scops owl பார்த்ததாக சொன்னார்.
அதனால் சிலர் அதை தேடி சென்றார்கள். நண்பர் மாசிலாமணி, தஞ்சை வெங்கட்டுடன் சிறிது துரம் சென்றோம். நண்பர் வினோத் தூங்க
சென்றுவிட்டார். ஆந்தையின் குரலை மட்டும் கேட்டுவிட்டு திரும்பிவிட்டோம். ஒரு
சிலர் ஆந்தையை பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
மிக ஜாலியாக இரண்டு நாள் சென்றது
என்று நிச்சயம் சொல்லலாம். எந்த வித கட்டுப்பாடும் கிடையாது. பறவைகள் போல்
நீங்களும் சுற்றி வரலாம் ஆனால் பறக்க மட்டும் முடியாதது குறையாக இருந்தது. நிறை
வெளிநாட்டு பயணிகள் வந்திருந்து எங்கள் அருகில் அமர்ந்து இட்லி சாம்பாரை ருசித்து
சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
பாறு கழுகுகள் பாதகாப்பு, அவற்றை
அழிவில் இருந்து மீட்டல் போன்ற ஆழமான கருத்துகளை கோவை பாரதிதாசன் சார் சொன்னார்.
நிறைய தகவகள் அவரிடம் உண்டு. பாறு கழுகுகள், இவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது
என்று அடித்து சொல்லலாம். தமிழ்நாடு அரசு, பாறு கழுகுகளை பாதுகாக்க என்ன செய்யலாம்
என்று பாரதிதாசன் அவர்களிடம் அறிக்கை கேட்டுள்ளார்கள். மிக கச்சிதமாக அந்த
அறிக்கையை தயாரித்திருந்தார். அவற்றின் ஒரு நகலை தந்து ஏதேனும் சேர்க்க, நீக்க வேண்டுமா
என்று சொல்லுங்கள் என்று தந்தார். அதனை இரவில் முழுவதும் படித்துவிட்டு மறுநாள்
சில தகவல்களை அவரிடம் சொன்னேன்.
பாறு கழுகுகளை பார்க்க வேண்டும் என்று
அவரிடம் சொன்னதற்கு, வருவதற்கு இரண்டு நாள் முன்பு சொன்னால் போதும், சென்று
பார்க்கலாம் என்று சொன்னார். குறிப்பாக மாயாறு. சத்தியமங்கலாம் வந்துவிடுங்கள்
என்றார்.
தபால் தலைகளை சேகரிப்பது என்று
பொதுவாக ஒன்று. ஆனால் பறவைகள் பற்றிய தபால் தலைகளை மதுரை ரவீந்திரன் சார்
காட்சிபடுத்தி இருந்தார்.. இடை இடைய அனைவரும் அவற்றை பார்த்து கொண்டிருந்தனர்.
பறவை மீது உள்ள ஆர்வத்தில் பறவை படங்களை தாண்டி, தபால் தலை சேகரிப்பிலும் கவனம்
செலுத்தி வருகிறார்ர். பள்ளி மாணவர்களுக்கு பறவைகள் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தி வருவது குறிப்பிடதகுந்தது.
முதல் நாள் இரவில் சேகர் தத்தாதிரி
அவர்களின் சிலிகா ஏரியில்(ஒரிசா) உள்ள பறவைகள் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பபட்டது.
இவரின் புலி பற்றிய ஆவணப்படத்தை ஏற்கனவே பார்த்துள்ளேன். பறவைகளின் அசைவுகள்
முதல், தரையில் பக்கவாட்டில் நடந்து செல்லும் நண்டுகள் வரை கச்சிதமாக படம்
பிடித்து உள்ளார். (இணைப்பு)
நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பறவை
நிபுணர்கள், ஆரய்ச்சி மாணவர்கள், பறவைகள் பற்றிய தெரிந்தவர்கள், தொடக்க நிலை
மனிதர்கள் என்று கலைவையாக அமர்ந்து இருந்தனர். இதில் நான் தொடக்க நிலை மனிதர்கள்
நிலையில் இருந்து கற்று கொண்டு வந்தேன்.
மலைக்கு மேல் பல மலைகள் இருக்கிறது.
ஒரு பெரியவர் வேகமாக தன் பேரனுடம் மலை மேல் ஏறிகொண்டிருந்தார். கிட்ட சென்று
விசாரித்து பார்த்ததில் இவருடைய ஆடு, மலை மேல் சென்று விட்டது. அதை பார்த்து இங்கு உள்ள நாய்களும் சென்று விட்டன. மேலே,
இந்த நாய்கள் ஆட்டை கடித்துவிடும் என்று வேக வேகமாக இவற்றை எங்களிடம் சொல்லிக் கொண்டே
மலை ஏறிகொண்டிருந்தார்.
ஏன் நாய்கள் ஆட்டை கடிக்கிறது என்று
கேட்டதற்கு, நேரம் இல்லாமல் வேகமாக சென்று கொண்டிருந்தார். இவர் அவருடைய பேரனும்
காலில் செருப்பே இல்லை. இயற்கையாக வாழும் மனிதர்கள் என்ற நினைப்பு வந்தது.
குறிபிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள்
பல உண்டு. அதில் புதியவர்கள் முதல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் வரை
வந்திருந்தனர். இதில் யாரும் எல்லை கோடு வகுத்து பழுக்கவில்லை சகஜமாக அனைவரிடமும்
பேசி, பறவைகளை பார்த்து கொண்டிருந்தனர். சமத்துவம் இங்கு உணவை தாண்டி பழகுவதிலும்
பிரதிபலித்தது.
பறவைதான் அனைவர்க்கும் ஆர்வம் ஆனால்
இதில் இருக்கும் நூனுக்கங்கள் ஏராளம்.
ஒரு சிலர் பறவைகளை மட்டும்
பார்ப்பார்கள், பேசுவார்கள்,
ஒரு சிலர் அதை படம் எடுப்பதில் ஆர்வம்
உடையவர்,
ஒரு சிலர் பறவைகளை படம் வரைவதில்
ஆர்வம்,
ஒரு சிலர் கைப்பாவை செய்வதில்,
ஒரு சிலர் பறவைகளை ஆராய்ச்சி
செய்கிறார்கள்,
ஒரு சிலர் பறவை தபால் தலை சேகரிக்கிறார்கள்,
ஒரு சிலர் இதன் சம்பந்தமாக படிப்பு
படிகிறார்கள்
ஒரு சிலர் பறவைகள் தொடர்பான பத்திரிக்கை
நடத்துகிறார்கள்.
பொது தலைப்பு-பறவை. ஆனால்
செயல்பாடுகள், கிளைகள் போல் சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. இதில் நான்
எந்த இடத்தில இருக்கிறேன் என்ற நினைப்பு வந்தது? நான் யோசிபதற்குள், என் உள் மனது எதிலும்
நீ முழுமை இல்லை என்று சொல்லிவிட்டது. வடிவேல் போல் முகத்தை வைத்து கொண்டேன்.
சென்னையில் இறங்கி வீட்டு அருகில், டீ
குடித்துவிட்டு அதே பத்துருபாய் காயினை கொடுத்தேன். எதுவும் சொல்லாமல்
வாங்கிகொண்டார். ஜோலார்பேட்டை ரிசர்வ் பேங்கின் உத்தரவு இங்கு உள்ள ரிசர்வ்
பேங்குக்கு தெரியாது போல என்று நினைத்து கொண்டு “ சொர்கமே என்றாலும் அவை நம்மூரை
போல வருமா” என்று ராமராஜன் போல் கையை நீட்டி பாடி கொண்டே வீடிற்குள்ளே சென்று
விட்டேன்.
-செழியன்
Photos: Dr.Masilamani
lapwing2010@gmail.com
I Re-Lived those days through your blog . Beautifully Written :)
ReplyDeleteThank you...
DeleteVery nicely written. Thanks. BTW I didn't see the scops owl..heard..:)
ReplyDeleteஅற்புதமான பதிவு !!!
ReplyDeleteநன்றி நண்பரே
நன்றி சார்
DeleteFor the second consecutive time I registered but missed the meet. Your words took me to yelagiri. Nice post
ReplyDeleteThanks manivasagan
Deleteநல்ல பயண கட்டுரை.அனைத்தையும் பதிவு செய்துள்ளீர்கள்.நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே
DeleteThe choice of location this year was impressive and Mr. Jeganathan has inspired a lot of young children at Coimbatore to post lists on e-bird and also at Madurai. They could be encouraged to include the state at which the habitat is maintained.
ReplyDeletecorrect .....
DeleteVery good post Chezheyan sir :) Relived those days from your words. My mentor Mr.Kannan, an avid bird watcher also attended the event. Unfortunately i was not aware of this meet and missed out two wonderful days. Please share if any audio/video recordings of sessions available. Thanks.
ReplyDeleteoh super ... next time you should participate in birders meet janardhanan... how is going on your birding
DeleteSure sir, going good. Have been looking out for birds wherever i go :) Now, we are all planning for the next set of visits starting from this weekend :)
Deletenice and continue birding. send your mobile no to mail
DeleteExcellent writing, enjoyed reading, as your write all aspect of the trip. Thanks
ReplyDeleteநன்றி செழியன் ... அடுத்த வாய்ப்பில் உங்களுடன் அதிகம் பேசவேண்டும். உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சார், உங்கள் பறவை படங்கள் அதன் வர்ணிப்பு மிகவும் அருமை.ஏலகிரியில் உங்களுடன் ஒரு நிமிடம் பேசியுள்ளேன்.சென்னை வந்தால் தெரியபடுத்துங்கள் அல்லது நான் மதுரை வரும்பொழுது உங்களுக்கு தெரியபடுத்துகிறேன் அடுத்த சந்திப்பில் நிறைய பேசுவோம் சார்....
ReplyDelete