புதர்சிட்டு |
விவசாய நிலத்தின் ஒரு
பகுதியில் காட்டு மைனா, சாதரண மைனா, சிறிது
தூரத்தில் வென்புருவ வாலாட்டி. இவை அனைத்தும் நிலத்தில்
இரையை தேடிகொண்டிருந்தது. மறுபுறத்தில் விவசாயி, மாடுகளை கொண்டு நிலத்தை உழுது
கொண்டிருந்தார். அவரும், மாடும், பறவைகள் பக்கம் செல்லும்பொழுது அவை நகர்ந்து
செல்கிறதே தவிர அங்கிருந்து பறந்து செல்லவில்லை அனைத்தும் மனிதர்கள் அருகில் வாழ
பழகி கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ஏலகிரியில்.
நான்கு கிலோமீட்டர்
செல்லவேண்டிய தூரம், பறவைகளை பார்த்து
கொண்டே செல்வதற்கு வசதியாக நடந்து செல்வோம் என்று நண்பர் மாசிலாமணியுடன் நடந்தேன்.
நான்கு கிலோமீட்டர் என்பது இலக்கு இல்லை, போக வேண்டிய தூரம் என்பதால், சென்றோம். என்ன
அதிகமாக பறவைகள் இருந்துவிட போகிறது என்ற நினைப்பு ஆரம்பத்தில் வந்தது என்னமோ நிஜம்.
ஆனால் கொட்டிகிடக்கிறது பறவைகள் ஏலகிரி மலை மேல்.