Sunday, 18 February 2018

பெரும்பாக்கம்- குளிர்காலத்தின் கடைசி மாதத்தில்



சாம்பல் நாரை 
அதிக பறவைகள் பெரும்பாகத்தில் என்ற செய்தி அங்கு செல்லவேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியது. இன்று அரவிந்த், மலைநாடன் மற்றும் அவர் மகன், கிஷோர், அமர், வினோத் குமார், நித்யானந்த் மற்றும் அவர் மாணவர்கள், லோகேஷ் பள்ளி மாணவன் என்று ஒரு குழுவாக காலை ஏழு மணியளவில் ஏரியின் பாதையில் நின்றோம். நீர் போல் ஏரி முழுவதும் பறவைகளால் நிரம்பியுள்ளதால் எங்கு இருந்துவேண்டுமென்றாலும் பார்க்க தொடங்கலாம். அதனால்  நின்ற இடத்தில் இருந்தே மடையானை(Pond Heron) வரவேற்றோம்.

வந்தவர்களில் நிறைய புதியவர்கள் என்பதால் நீர் பறவைகள் பற்றிய அறிமுகம் கொடுத்துவிட்டு அருகில் இருந்த நாமக்கோழி(Common Coot), தாழைக்கோழியை( Purple Swamp Hen) காண்பித்து அவற்றின்  வித்தியாசம் சொன்னதால் சுலபமாக அவர்களால் புரிந்துகொள்ள முடிந்து. முதல் நாளே அதிக பறவைகள் பற்றி சொன்னால் அவை குழப்பதை உண்டாக்கும் என்பதால் பத்து பறவைகள் வரை விரிவாக சொல்லி மற்றவற்றை சும்மா பார்க்க சொன்னதில் அவர்களுக்கும் சுலபமாக இருந்தது.

Photo by Malainadan
பார்த்த பறவைகள்

1. மடையான் (Pond Heron),

2. பெரிய கொக்கு (Large Egret),

3. கூழைக்கடா (Spot billed Pelican),

4. நாமக் கோழி (Common Coot)

5. தாழைக் கோழி (Purple Swamp hen)

6. புதரில் கதிர்குருவி (Ashy Prinia)

7. தட்டைவாயன் (Northern Shoveler)

8. நீலச்சிறிகி (Garganey)

9. சாம்பல் நாரை (Grey Heron),

10. மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork),

11. வெள்ளை அரிவாள் மூக்கன் (White IBIS or Black Headed IBIS)

12. சிறிய கொக்கு (Little Egret)

13. மீசை ஆலா (Whiskered Tern)

14. பவளக்கால் உள்ளான் (Black Winged Stilt)

15. கருவால் மூக்கன் (Black Tailed Godwit)

16. கோனைமூக்கு உள்ளான் (Pied Avocet)

17. முக்குளிப்பான் (Little Grebe)

18. புள்ளிமூக்கு வாத்து (Spot Billed Duck)



19. சிகப்பு ஆட்காட்டி (Red Wattled Lapwing)

20. வெண் மார்பு மீன்கொத்தி (White Breasted Kingfisher)

21. சிறிய நீர்காகம் (Little Cormorant)

22. பொறி உள்ளான் (Wood Sandpiper)

23. சாதாரண உள்ளான் (Common Sandpiper)

24. நீல வால் பஞ்சுருட்டான் (Blue Tailed Bee- Eater)

25. சாதாரண கதிர் குருவி (Plain Prinia)


தட்டைவாயன்(Northern Shoveler) பறவையை ஆயிரத்திற்க்கு மேல் நீந்தி மற்றும் கரை ஓரங்களில் இருப்பதை பார்க்க முடிந்தது. அடையார் பலத்தில் இருந்து பார்த்த கருவால் மூக்கன் (Black Tailed Godwit) பறவையை பெரும்பாகத்தில் பார்த்தது இதுவே முதல் முறை. மிக நீண்ட அலகை கொண்டு கோணி ஊசி மூட்டையில் குத்துவது போல் நீரை இவை குத்தி கொண்டிருந்தது.

குளிர்காலத்தின் கடைசி மாதத்தில் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் விருந்தாளி பறவைகள் எல்லாம் கிளம்ப தயாராகிக்கொண்டிருக்கின்றன. நீர் பறவைகள் பார்க்க பெரும்பாக்கம் ஏரி மிக சிறந்த இடம் என்று சொல்லலாம். சிறிது முயற்சி செய்தால் ஒரே இடத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பறவை வகைகளை பார்க்கலாம்.
வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள் இங்கு உணவு மற்றும் தங்குவதற்க்காக  மட்டும் வருகிறது, குஞ்சு பொறிக்க வருவதில்லை  என்ற தகவல் புதியவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை நாங்கள் அவை முட்டை போட்டு குஞ்சு பொறிக்க வருகிறது என்று நினைத்திருந்தோம் என்று சொன்னார்கள்.  

டோல்கேட் தாண்டி வலது புறம் இருக்கும் தேநீர் கடையில் தேநீர் குடித்து விட்டு பார்த்த பறவைகள் பற்றி நிறைய பேசிவிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக கிளம்பியதை பார்க்க முடிந்தது.
அடுத்த ஒரு பறவை சந்திப்பில் சந்திப்போம்........... நன்றி நண்பர்களே!

-    செழியன்.ஜா
lapwing2010@gmail.com






  

No comments:

Post a Comment