சிட்டுகுருவி அளவே உள்ள
பறவை இனங்கள் நம் நாட்டில் நிறைய உண்டு. ஆனால் சிட்டுக்குருவியை மட்டும் நாம்
அதிகம் நேசிக்க காரணம்? அவை நம் வீட்டிற்குள்ளே வந்து நம் உணவுகளை சாபிட்டது,
வீட்டின் முற்றத்தில் தன் கூட்டை கட்டியது, அதன் கீச் கீச் குரல் நம் செவியில்
கேட்டுகொண்டே இருந்தது. இதனால் சிட்டுக் குருவியை நம் வீட்டின் உறுப்பினராகவே நாம்
ஏற்று கொண்டோம் இவையே மிக முக்கிய காரணம் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வேறு
எந்த பறவைக்கும் இது போல் ஓர் நாளை சிறப்பு தினமாக கொண்டாடுவதில்லை. இன்று,
சிட்டுக்குருவிகள் செல்போன் கதிர்வீச்சால் அழிந்து வருகிறது அதனால் பரவலாக நம் கண்
முன் விளையாடிய அந்த பறவைகள் இன்று இல்லை என்று பேசப்படுகிறது அவை உண்மையா? சென்னை
போன்ற நகரத்தில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே கடினமாகிவிட்டது ஏன் ? சிட்டு
குருவிகள் தினத்தில் என்ன செய்யலாம் ?