Saturday, 29 August 2020

இது வண்ணத்துப்பூச்சிகள் காலம் - Hindu Tamil

 

Angled Caster

கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது ஒருவிதச் சலிப்பை ஏற்படுத்தலாம். இதற்குச் சிறந்த வடிகால், இயற்கையை அவதானிப்பது. சமீப ஆண்டுகளாக பறவைகளை நோக்குவது பரவலான பொழுதுபோக்காக வளர்ந்து வருகிறது. பறவைகள் மட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சிகளையும் இதேபோல் நோக்கத் தொடங்குவது சிறந்த பொழுதுபோக்காக அமையும்.

இந்தியாவில் பறவை வகைகளைப் போலவே வண்ணத்துப்பூச்சிகளிலும் 1300-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. கோடைக் காலம் முடிந்து ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மழை தொடங்கும்போது தாவரங்களில் மலர்கள் பூத்து குலுங்கும். அப்போது வண்ணத்துப்பூச்சிகளும் ஓயாமல் அவற்றைச் சுற்றிப் பறந்து தேனை உண்கின்றன. வேலூர்-சித்தூர் செல்லும் சாலை காடுகள் சூழ்ந்த பகுதி. காட்பாடியைத் தாண்டினால் காடு தொடங்கிவிடுகிறது. சிறு பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், பலவகைத் தாவரங்கள், மலைகளை உள்ளடக்கிய காடு இது.