Cedar Waxwing |
வசந்த
காலத்தில் தென் கனடாவிலும் வட அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களிலும் இனப்பெருக்கம் செய்யும்
சிடார் வேக்ஸ்விங் பறவை, குளிர்காலத்தில் வட அமெரிக்காவின் தெற்கு
மாநிலங்களுக்கும் சென்டரல் அமெரிக்காவிற்கும் வலசை செல்கிறது.
இதன் முக்கிய இரை, செர்ரி
பழ வகைகளானதால் டிசம்பர் முதல் மார்ச் வரை கலிபோர்னியாவில் பூங்காவனங்களிலும்(parks, golf courses), பழத்
தோட்டங்களிலும்(orchards) சிறு கூட்டமாகவோ அல்லது நூற்றிக்கும்
மேற்பட்ட பெருங்கூட்டமாகவோ காணப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் குளிரைப் பொருட்படுத்தாமல் இந்த அழகிய பறவையைக் காணச் செல்ல நான் தயங்குவதில்லை.