பறவைகளை
பார்க்க நாம் வேறு எங்கும் போக வேண்டாம் , ஆரம்பத்தில் நம்மை சுற்றி வந்து போகும்
பறவைகளை பார்த்து இனம் கண்டுகொண்டபிறகு வெளியே சென்று பறவை பார்க்கும் பழக்கத்தை
வளர்த்து கொள்ளலாம்.
பொதுவாக
பறவைகள் என்றவுடன் கிளி, பலவண்ணத்தில்
இருக்கும் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் இவைகள்தான் நம் நினைவுக்கு வருகிறது ஆனால்
நம்மை சுற்றி இருக்கும் காகம் கூட பறவை தான்.
காகத்தை நாம்
பார்ப்பதும் ,கவனிப்பதும் கிடையாது .முதலில் காகத்தை பார்க்க ஆரம்பியுங்கள்.
என் வீட்டு
தோட்டத்தில் நிறைய காகங்கள் வந்து போகிறது ஆனால் எதுவும் கூடு கட்டவில்லை , இரண்டு
ஜோடி கிளிகள் கூடு கட்டி விளையாடுகிறது ,நிறைய அணில்கள் , மைனா , தவுட்டு குருவி ,
சிட்டு குருவி, அவ்வபோது புறா , சில நேரம் பாம்புகளும் வந்து போகிறது, இரவில்
ஆந்தைகளும் வருகிறது , மொத்தத்தில் ஒரு தோட்டம் இருந்தால் பல உயிரினங்கள் வாழ வழி
செய்கிறது.
காகத்தை நாம்
கவனிப்பதே காலையில் வீட்டில் கத்தினால் விருந்தாளிகள் யாரோ வர போகிறார்கள்
என்று , அப்போதுதான் நாம் காகத்தை கவனிப்போம் அல்லது சாமிக்கு படைத்து விட்டு
காகத்துக்கு சோறு வைக்கவேண்டும் என்று காகத்தை தேடுவோம,
மற்ற நேரதில் அவை எங்கு
இருக்கு என்றே நமக்கு தெரியாது , மற்ற நேரதில் அதுக்கு யார் சோறு வைப்பார்கள் என்றும் நினைபதில்லை
அல்லது இன்று ஒரு நாள் உணவு வைத்தால் போதும் மீதி நேரம் காகத்திற்கு பசிக்காது
என்று நினைத்து விடுகிறோமோ ?
காகத்தை,நேரம்
கிடைக்கும் போதெல்லாம் கவனியுங்கள் அவை மட்டுமே , நம் விருந்தாளிகள் வீட்டுக்கு
வருவதை தெரியபடுத்தியது , காகத்தை பார்த்தே வளர்ந்தார்கள் நம் முன்னோர்கள் .
No comments:
Post a Comment