சிட்டுகுருவி
- சிதம்பரம் ரவிசந்திரன்
மொட்டைமாடியில்
புறாக்கள், காக்கைகள், தவிட்டுக் குருவிகள் என்று பலவிதமான பறவைகளும் வந்து
விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கலாம். ஆனால் இவற்றில் முன்பெல்லாம் அதிகமாக நம்
கண்களுக்குத் தென்பட்ட ஒரு சிறிய பறவை இன்று அரிதாகி வருகிறது. பழந்தமிழ் சங்க
இலக்கியங்களில் கூட இந்தப் பறவையைப் பற்றி செய்திகள் “ மனையுறைக் குருவி “ என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
வெறும் பதினாறு சென்டிமீட்டர் மட்டுமே அளவுள்ள ஒரு சிறிய
பறவையாகும் இது தமிழில் ஊர்குருவி என்றும் , மலையாளத்தில் அடைக்கலக் குருவி என்றும்
அழைக்கப்படும் இதை அறிவியலாளர்கள் சிட்டுக்குருவி என்று . பெயரிட்டு
அழைக்கிறார்கள். தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாகக் கொண்டு வாழும் இது
விவசாயிகளுக்கு பூச்சிக்கட்டுப்பாட்டில் பெரிதும் பயனுள்ள ஒன்றாக இருந்தது.
இதனால்தான்
இதுபோன்ற பறவைகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதுபோல் அறுவடை முடிந்து கிராமங்களில்
முன்பு அறுத்து வந்த புதிய தானியங்களை ஒரு துணியில் சிறிதளவு கட்டி விட்டு
முற்றங்களில் தொங்கவிட்டுவிடுவார்கள். எந்தப் பறவை வேண்டுமானாலும் இந்த
திறந்திருக்கும் மூட்டையில் அல்லது துணிப்பையில் இருந்து தானியங்களைக் கொத்தி
தின்று மகிழ்ச்சியோடு வீட்டையும், தோட்டத்தையும் சுற்றிச்சுற்றி வந்து விளையாடும்.
ஆனால் இன்று நகரமயமாக்கல் விளைவாகவும், இன்னும் பல காரணங்களாலும் இந்தச்
சிட்டுக்குருவிகள் அழிந்து வரும் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது என்பது நாமெல்லாம் வருதுப்பட
வேண்டிய விஷயமாகும்.
இன்றுள்ள
தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் இந்த அரிதாகி வரும் பறவையின்
முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு வருடமும் மார்ச் இருபதாம் தேதியை
சர்வதேச சிட்டுக்குருவிகள் தினமாகக்
கொண்டாடி வருகிறோம். இந்திய பரவையிலாளரான சலீம் அலி அவர்கள் தன்னுடைய
வாழ்க்கைவரலாற்றையே ஒரு குருவியின் தலைப்பை வைத்து தான் பெயரிட்டுள்ளார் (
The Fall of a Little Sparrow ). சலீம் அலியின் வாழ்க்கையையே திசை
திருப்பிவிட்டதும் ஒரு மஞ்சள் குருவி தான்.
நெல், கோதுமை, மக்காசோளம், புலரிசி, பயிறுவகை தானியங்கள் போன்றவை தான்
இவற்றின் பிரதான தாவர உணவுவகைகள். வீட்டுகூரைகள், பொந்துகள், தாழ்வாரங்கள்
போன்றவற்றில் வாழ்ந்து வந்த இவை வாழை நாரினாலும் தென்னை நாரினாலும் அழகாக
இல்லாவிட்டாலும், வாழ்வதற்கான ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன.ஆனால்
இப்போதெல்லாம் இவைகளைக் கிராமபகுதிகளில் கூடப் பார்ப்பது அரிதாகிவிட்டது.
கான்கிரிட்டை போட்டு எல்லா இடங்களையும் பூசி மொழுகி பேச்சுக்குக்கூட ஒகட்டி
ரு பச்சை எதுவும் இல்லாமல் மரம்,செடிகளை எல்லாம் அழித்து, வீடுகளாகவும்,
தொழிற்சாலைகளாகவும் கட்டிதள்ளிவிட்டால் சிட்டுக்குருவிகள் மட்டுமா எல்லா உயிரினங்களும்
தான் காணாமல் போய்விடும்.
அனால் ஒன்று மனிதன் மட்டும் பூமியில் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்து
ஒற்றையாக வாழ்ந்துவிட முடியாது. இந்த பேருண்மையை புரியவைப்பதற்காக தான் மார்ச்
இருபதான் தேதியை சிட்டுக்குருவிகள் தினமாக உலக அளவில் கொண்டாடிவருகிறோம்.
2010ம் ஆண்டில் தான் March
20ம் தேதியை கொண்டாடப்படுவதர்க்குக் காரணமாக இருந்தவர் ஒரு இந்தியர்.
நாசிக்கை சேர்ந்த முகமது தில்வார் என்கிற சுற்றுச்சூழலியலாளர் தான் முதல்முதலாக
இந்த நாளை கொண்டாடினார். பம்பாயில் உள்ள BNHS எனப்படும் பம்பாய்
இயற்கை வரலாற்று நிறுவனம் தான் இவருடைய தாயகமாகும். பின் இதன் அருமை தெரியவர
உலகமெங்கும் உள்ள நாடுகள் எல்லாம் March 20ம் தேதியை
சிட்டுகுருவிகளுக்கான உலக நாளாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். ஏனெனில் ஆசியா,
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற எல்லா கண்டங்களிலும் சிட்டுக்குருவிகள் அழிந்து
வருகின்றன.
http://www.worldsparrowday.org என்ற இணையத்தளம்
ஒன்று சிட்டுகுருவிகளுக்காகவே பிரத்யோக்கமாகத் தகவல்கள் அளிப்பதற்கென்று
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் சென்றால் சிட்டுக்குருவிகள் பற்றிய
புகைப்படங்கள், லோகோக்கள், போஸ்ட்டர்கள், இவ்வைகை குருவிகளைப் பாதுகாக்க வேண்டிய
முகியத்துவம் போன்ற ஆனைத்து விவரங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த இணையங்களையும்
பன்னாட்டு பறவையியல் நிபுணர்களை இணைக்கும் பாலமாகவும் விளங்கி வருகிறது.
சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வை இளையதலைமுறையினருக்கு
ஏற்படுத்தவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் இது பேருதவியாக உள்ளது.
சொல்லப்போனால் facebook ல் கூட சிட்டுக்குருவிகள் ஒரு சிறப்பிடத்தைப்
பிடித்துள்ளன.
இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் டெல்லி மாநிலத்தின் மாநில பறவையாக
சிட்டுகுருவி 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது
மகிழ்ச்சி தரும் சுவையான செய்தியாகும்.
காக்கை குருவி எங்கள் சாதி என்று சொன்னால் மட்டும் போதுமா? இந்தசிறிய அரிய
பறவைகளைக் காப்பாற்ற நம்மால் ஆனதைச் செய்யவேண்டாமா? இதன் அருமைபெருமை தெரிந்த பல
நாடுகளைச் சேர்ந்த தபால்துறைகள் சிட்டுகுருவிகளுக்காகவே தபால் தலை வெளியிட்டுள்ளன.
பாரதி சொன்னது போல் “ விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப் போல
“ என்று நாம் கவலைகளையெல்லாம் மறந்து சென்னையின் ஒரு தீம் பார்க் தராத இன்பத்தையும்,
மனநிறைவும் நாமும் பெற்று நம் குழந்தைகளுக்கும் அந்த இனிய அனுபவத்தை ஏற்படுத்தித்
தந்து, இந்த அற்புத ஜீவன்களை வாழவைப்போம். பின் நம் இல்லங்களும், உள்ளங்களும்
குருவிகள் பாடும் கலைக்கூடங்களாக மாறிவிடும்.