வீட்டில் பறவை
வளர்பவர்கள் பெரும்பாலும் ஒரு சில வருடங்கள் தான் அதை பராமரிப்பார்கள் வீட்டின்
சூழ்நிலை அவர்களை அதை வளர்ப்பதில் இருந்து அப்புறபடுத்தி விடும். எங்கையாவது
வேறுயாராவது வளர்ப்பதை பார்க்கும்பொழுது முன்பு தாம் வளர்த்ததை நினைத்து கொண்டோ
அல்லது பக்கத்தில் வருபவர்களிடம் சொல்லிக்கொண்டோ வருவார்கள்.
ஒரு மனிதர் புறாவுடன்
25 வருடங்களுக்கு மேல் அதை வளர்த்து இல்லை இல்லை அதனுடன் வாழ்ந்து வருவதை
நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அவர் இடத்திற்கு
சென்றபொழுது பாதி புறாக்கள் முட்டை இட்டு
இருப்பதை பார்க்க முடிந்தது.
சிறிய அறை அதில்
அரிசி மூட்டை அடிக்கி வைத்தது போல் மர கூண்டுகள். சாம்பல் , கருப்பு , வெள்ளை,
அடர் காப்பி என்று சின்னதும் பெரியதுமாக நிறைய புறாக்கள், நான் உள்ளே சென்றவுடன்
அவை வெளியே சென்று கொண்டிருந்தது. ஒரு புறா என்னை அடித்து சென்றது ஏண்டா என்
இடத்திற்கு வந்தாய் என்பது போல் இருந்தது அதன் செயல்.
நானும் பல
காலகட்டங்களை பார்த்து விட்டேன் சில வருடங்கள் நிறைய பேர் ஆர்வத்தோடு வளர்க்க
ஆரம்பிப்பார்கள் ஒரு சில வருடம் கழித்து பார்த்தல் காற்றில் கரையும் கற்பூரம் போல்
கரைந்து போயிருப்பார்கள் என்று பேச தொடங்கினார். புறாவில் நிறைய வகை இருக்கு
என்னிடம் ஓமர் , படாங்கா, கர்ன புறா , தவடால் வகை என்று 30 புறாக்களை வளர்த்து வருகிறேன் பத்து வருடம்
முன்பு 150 புறாக்களை வளர்த்தேன் ஆனால் முற்றிலும் இவற்றை எடுக்க
மனம் வரவில்லை அதனால் என் ஆசைக்கு முப்பது.
புறாவின் எதிரி
என்றால் வல்லுரு , பூனை இவைகள் தான் பெரிய எதிரி பூனையிடம் இருந்து புறாவை
பாதுகாக்க நான் இதுவரை நூறு புறாக்களை இழந்திருப்பேன் என்று அவர் சொன்னபொழுது, ஏன்
என்று வழக்கமான கேள்வியை கேட்டேன்.
இன்றும் பூனை இங்கு
வரத்தான் செய்கிறது முன்பு போல் இல்லை என்றாலும் அவ்வபொழுது புறாக்கள்
மாட்டிகொள்கிறது. தரையில் பூனை என்றால் ஆகாயத்தில் வல்லுறு.
பறக்கும் பொழுதே அதை
தன் நக காலில் பிடித்து நார் நாரை கிழித்து விடும். சில சமயம் அதிக மழை பெய்தால்
அதில் றெக்கை நனைந்து பறக்க முடியாமல் மற்ற விலங்குகளுடன் மாட்டிகொள்கிறது. சில
நேரம் மனிதர்களே பொறி வைத்து பிடித்து விடுவார்கள். இங்கே வந்து திருடி செல்லும்
மனிதர்களும் உள்ளனர் இப்படி வருடம் வருடம் இருபது புறாக்கள் மேல் இழந்துவருகிறேன்
என்று சொல்லி கொண்டே போனவர் நிறுத்தி இதை வியாபாரம் செய்து பெரிய லாபம் எல்லாம்
பார்க்க முடியாது என்னுடைய ஆசைக்கு தான்
வளர்த்து வருகிறேன். மருந்துக்காக சில பேர் வந்து கேட்பார்கள் அப்பொழுது விற்று
கொஞ்சம் பணம் பார்ப்பேன் என்றார்.
முன்பு காலை மாலை
தானியம் தருவேன் பின்பு அவை வெளியே சென்று வருவதால் மாலை மட்டும் தானியம்
தருகிறேன். ஊருக்கு சென்றுவிட்டால் தான் கொஞ்சம் சிரமம்.என்றார்.
.சிறிய தண்ணி தொட்டி
வைத்து இருக்கிறார் அதில் சில புறாக்கள் குளிக்கவும் செய்கிறது. நான் சென்றபொழுது
சில புறாக்களுக்கு அம்மை நோய் வந்து பரிதாபமாக அமர்ந்திருந்தது. மற்ற சில
புறாக்களுக்கு இந்த குளிர்காலத்தில் சளி பிடித்து வழக்கமாக அவற்றின் சத்தம் வராமல்
மனிதர்கள் போல் அல்ல பட்டுகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
நிறைய கிளிகளும்
வளர்த்து இருக்கிறார் ஆனால் இன்று புறாவை மட்டும் தொடர்ந்து வைத்திருக்கிறார்.
இவரை கண்டால் புறாக்களும் குஷியாகி விடுகிறது.எனக்கு ஒவ்வொரு புறாவை பற்றியும்
குறிப்புகள் சொல்லி கொண்டேவந்தார். முன்பு நிறை பேர் வந்து வாங்கி சென்றார்கள் சில
பேர் முட்டையில் இருக்கும் பொழுதே பணத்தை கொடுத்துவிடுவார்கள் ஏன் என்றால் அதன்
தாய் புறாவை பார்த்து அவர்களுக்கு பிடித்து விடும் இப்படி நிறைய புறாவை
விற்றிருக்கிறேன்.
புறாக்கள் மற்ற
பறவைகள் போல் மரத்தில் வாழ்வதை விட கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பெரிய பெரிய
கட்டிடங்கள் என்றே வாழும்.கோவில் புறாக்கள் என்றே ஒரு இனம் உண்டு அவற்றை நாம்
வீட்டில் வளர்க்க முடியாது என்னிடமும் நிறைய கோவில் புறாக்கள் வரும் ஆனால் அவை ஒரு
சில நாளிலேயே சென்று விடும்.
புறாக்களுக்கு காலில்
வளையத்தை மாட்டி விடுவேன் எதற்கு என்றால் அவை நம் புறாக்கள் என்று அடையாளம்
தெரிந்து கொள்வதற்காக. சில சமயம் அவை வேறு ஒருவர் கூண்டில் சென்று விட்டால் அவை
நமது என்று சொல்வதற்கு இந்த வளையம் தான் சிறந்தது என்று நமக்கு குறிப்புகளை
தருகிறார் கண்ணகி கால் சிலம்பை வைத்து உண்மையை நிருபித்தது போல் நானும் நிறயை தடவை
கால் வலயத்தை வைத்து மீட்டு வந்திருக்கிறேன் என்றார் .
அவருடன் பேச பேச
நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது என்னதான் நாம் படித்து தெரிந்து
கொண்டாலும் அனுபவமாக ஒருவர் சொல்லும் பொழுது நமக்கும் எளிதாக புரிந்து விடுகிறது.
- செழியன்