உயிர் வாழ்வதற்கு எங்கு வேண்டுமென்றாலும் செல்லுவோம் என்று
பறவைகள் தங்கள் இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற
வாசகம் மனிதர்களுக்கு பொருந்துதோ இல்லையோ ஆனால் பறவைகளுக்கு கண்டிப்பாக
பொருந்துகிறது.
Suggestion:
ஆரம்பத்தில் புதியவர்களால் பறவைகளை
இனம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் ஏறக்குறைய பறவைகள் எல்லாம் ஒன்று போலவே
தெரியும். புத்தகத்தை வைத்து அவற்றை சரிசெய்யலாம் என்றாலும் நாம் நேரில்
பார்க்கும் பறவையின் நிறத்திற்கும் புத்தகத்தில் இருக்கும் பறவையின் நிறத்திற்கும் பெரும்பாலும் சிறு சிறு வேறுபாடு
இருக்கவே செய்யும். அதனால் புத்தகத்தின் மூலம் நம்மால் ஐம்பது சதவிகிதம் மட்டுமே கற்றுக்
கொள்ளமுடியும்.
சிறந்த வழி என்றால் பறவை
நிபுணர்களுடன் சென்று பறவைகளை பார்ப்பது தான். சுலபமாக கற்றுகொள்ள முடிவது
மட்டுமில்லாமல் நிறைய தகவல்களும் தெரிந்து கொள்ளமுடியும். அதனால் புதியவர்கள் பறவை
நிபுணர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, சென்று பாருங்கள். கோயில் போன்ற
இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் அமைப்புகள் போல சில அமைப்புகள் பறவை
நோக்குவதற்கு என்று பிரத்தியோக ஏற்பாடு செய்கிறது அவர்களுடனும் செல்லலாம்.