பறவை புத்தகங்களில் பறவைகள் மற்றும் அதன் தொடர் வகைகள் என்று விவரித்து எழுதியிருப்பார்கள்.
உதாரணம் Egret எடுத்து கொண்டால் உன்னிகொக்கு(Cattle Egret),சிறிய
கொக்கு(Little Egret), நடுத்தர கொக்கு(Intermediate
Egret), பெரிய கொக்கு(Large Egret) இதே போல் Heron எடுத்து கொண்டால் மடையான்(Pond Heron), இராகொக்கு(Night Heron), சாம்பல் நாரை(Grey Heron), செந்நாரை(Purple
Heron) என்று அதன் தொடர்ச்சியை பார்க்க முடியும் ஆனால் பறவை நோக்குதல் என்ற
இந்த தொடரில் பறவை வகைகள் தொடர்ச்சியாக இல்லமால் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல்
இருப்பதுபோல் காணப்படும்.
காரணம் ஒன்றும் இல்லை.
தொடர் எழுதும்பொழுது அந்த தலைப்புக்கு ஏற்ற பறவைகளை சொல்வதால் பறவைகளின் தொடர்ச்சி
விடுபடுகிறது.
ஆரம்பகாலத்தில்
பறவைகளை பிடித்து அல்லது கொன்று பாடம் செய்து அதன்பின் ஆராய்ச்சி செய்து
கட்டுரைகள் வரும். ஆனால் டிஜிட்டல் மயமான இப்பொழுது பறவைகள துல்லியமாக படம்
எடுத்து அவற்றை பின் தொடர்ந்து, காட்டிலேயே தங்கி கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். பறவைகளை கொல்வது
முற்றிலும் இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம் எந்த பறவை ஆர்வலரும் பறவைகளை கொல்வது
ஏற்றுகொள்ளகூடிய செயல் என்று சொல்லமாட்டார்கள்.