பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பறவைகள் பலவிதமா ? என்றால்
ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது அவற்றை
நுணுக்கமாக அணுகும்பொழுது
நாம் உணவை கீழே அல்லது நாற்காலியில் அமர்ந்து
அல்லது சில நேரம் நின்று கொண்டே சாப்பிடுவோம். ஆனால் பறவைகள்? இதென்ன கேள்வி
மரத்தில் இருந்துதான் என்ற பதில் சட்டென்று வரும் அவை சரியென்றாலும் பாதியளவு
மட்டுமே உண்மை.
பறவை நோக்குதலில் நாம் ஆரம்பத்தில்
மேம்போக்காக பார்த்துக்கொண்டே செல்வோம் மாதங்கள் செல்ல செல்ல நமது பறவை
பார்த்தலில் நுனுக்கங்களுடன் பார்க்க வேண்டும். அப்படி பறவை பார்க்கும்பொழுது கீழ்
இருக்கும் பறவை வகைகளின் பழக்க வழக்கங்களை பற்றி தெரிந்துகொண்டால் உங்கள் பறவை
அறிவு வளர்ந்து கொண்டே செல்லும்.
மயில் |
1. தரையில் இரை தேடும் பறவை (Ground
Feeding Birds)
2. மரத்தில் இறை தேடும் பறவை (Arboreal Feeding
Birds)
3. பறந்து கொண்டே இரையை பிடித்து சாப்பிடும் பறவை (Aerial Feeding Birds)
4. நீரில் இறை தேடும் பறவை (Water Feeding Birds)
பறவை பார்த்தலில் நாம் பறவைகளை பற்றி குறிப்பு
எடுக்கும்பொழுது பறவைகள் எங்கு இருந்தது (மரத்தில், தரையில், பறந்து கொண்டு,
நீரில்) என்று குறித்து கொண்டால் அவற்றை வைத்து சுலபமாக இனம் கண்டுபிடிக்க
முடியும். பறவைகள் என்றும் அவற்றின் பழுக்கவழக்கதில் இருந்து
மனிதர்கள் போல் மாறுவதில்லை.
ஏன் பறவைகளில் மட்டும் இவ்வளவு வேறுபாடுகள்?
உண்மையில் மனிதர்களிலும் வேறு வேறு பழக்கம் உடைய மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்
ஆனால் மனித விலங்கான ஹோமோசேபியன்னாகிய(Homo sapiens) நாம் மற்ற மனித இனத்தை (நியாண்டர்தால்) அழித்து விட்டோம்
என்றே வரலாறு கூறுகிறது. அதனால் மற்ற மனித இனத்தின் பழக்கங்கள் முழுவதும் நமக்கு தெரியவில்லை
ஆனால் பறவைகளில் மனிதர்கள் போல் இன அழிப்பு கிடையாது.
பறவைகள் அழிப்பிலும் நாம்தான் கொடிநாட்டி
உள்ளோம். சந்தேகேமே வேண்டாம் நிறைய பறவை,
விலங்கினங்களை முழுவதும் இவ்வுலகில் இருந்து அழித்து விட்டோம். (உதாரணம்: மொரிசியஸ்
டோடோ பறவை, தமிழகத்தில் வரகு கோழி, சிவிங்கை புலி முற்றிலும் அழிக்கப்பட்டு, ஆந்திராவில்
கலுவுகோடியை தேடி கொண்டிருக்கிறோம் .....)
மேலே உள்ள பறவை வகைகளை பற்றி சிறிது தெரிந்து
கொண்டால் நல்லதுதானே-
1. தரையில் இரை தேடும் பறவைகள் (Ground Feeding Birds)
பனங்காடை |
பெரும்பாலும் இவ்வகை பறவைகள் தரையில் இரை
தேடுவதை பார்த்திருப்போம், இவைகளை கடந்து சென்றிருப்போம். நாம் செல்லும் சாலையில்
நாகனவாய்க்கள் இரை தேடி கொண்டிருப்பதை பார்க்கமுடியும். இப்பொழுது வீட்டில்
இருந்து வெளியே சென்று பாருங்கள் இவற்றில் ஏதாவது ஒரு பறவை தரையில் இரை
சாப்பிட்டுகொண்டிருக்கும்.
புறா(Pigeon),
மயில்(Peafowl),
செம்போத்து(Southern Coucal),
காகம்(Crow),
கீச்சான்(Shirike),
சிட்டுக்குருவி (House Sparrow),
கொண்டாலத்தி(Hoopoe),
வானம்பாடி(BushLark),
காடை(Bush Quail),
நாகணவாய்(Myna),
கருங்கொண்டை நாகணவாய்(Brahiminy Starling),
கொண்டு கரிச்சான்(Magpie Robin), கருஞ்சிட்டு(Indian Robin), புதர் சிட்டு(Pied Bush chat), சில்லை(Munia), தவிட்டு குருவி(Yellow billed Babbler), நீல வால் கீச்சான் (Long Tailed Shrike), கருஞ்சிவப்பு முதுகு கீச்சான் (Bay-backed Shrike), தூக்கணாங் குருவி (Baya Weaver), வெண் புருவ வாலாட்டி (White Browed Wagtail) etc………
2. மரத்தில் இறை தேடும் பறவைகள் (Arboreal Feeding Birds)
வால்காக்கை |
பச்சைக்கிளி(Parakeet),
வால்காக்கை(Rufous Treepie),
தேன்சிட்டு(Sunbird),
கதிர்குருவி(Ashy Prinia),
தையல் சிட்டு(Tailor Bird),
மஞ்சள் சிட்டு(Common iora),
மின் சிட்டு(Orange Minivet), சின்னான் (Red and Whiskered
Bulbull),
குக்குறுவான்(Barbet),
இரட்டை வால் குருவி (Black Drongo),
குயில்(Asian Koel), மாங்குயில்(Golden Oriole), ஈபிடிப்பான்(Flycatcher), பஞ்சுருட்டான்(Bee Eater), இருவாச்சி(Hornbill), மரங்கொத்தி(Wood Pecker), அக்கா குயில்(Cuckoo) etc…
3. பறந்து கொண்டே இரையை பிடித்து
சாப்பிடும் பறவைகள் (Aerial Feeding Birds)
தகைவிலான் |
பனைஉழவரான்(Asian palm Swift),
தகைவிலான்(Barn Swallow),
சிவப்பு பிட்டு தகைவிலான்(Red-rumped Swallow)
4. நீரில் இரை தேடும் பறவைகள் (Water
Feeding Birds)
மஞ்சள் மூக்கு நாரை |
புள்ளி மூக்கு வாத்து(Spotted bill Duck),
முக்குளிப்பான்(Little Grebe),
பூநாரை(Flamingo),
மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), மீன்கொத்தி(King Fisher), மடையான்(Pond Heron), கொக்கு(Little and Great
Egret), நீர்காகம்(Cormorant), பாம்புதாரா(Darter), நத்தை குத்தி நாரை(Open Bill Stork), சீழ்க்கைச் சிறகி(Lesser Whistling Duck) etc.....
சில பறவைகள் நீர் மற்றும் நிலத்திலும்
பார்க்க முடியும். அடுத்து முறை நீங்கள் பறவை பார்க்க
செல்லும்பொழுது பறவைகள் எந்த இடத்தில் இரையை தேடுகிறது என்பதை கவனியுங்கள்.
வாழ்க்கை
முறைகள் :
மனிதர்களில், சிலர் இந்தியா முழுவதும் சுற்றி
வருவார்கள், சிலர் உலகம் முழுவதும் சுற்றிவருபவர்கள், ஒரு சிலர் வேறு சில
மாநிலத்திற்கு மட்டும் சென்று வருவார்கள், சிலர் எங்கும் செல்லாமல் உள்ளுரிலேயே
கடைசி வரை வாழ்வார்கள். இதை போலவே பறவைகள் இனத்திலும் பார்க்க முடியும் ஆனால்
பறவைகள் அப்படி செல்வதற்கு ஒரே காரணம் உணவை தேடுவதே மட்டுமே. ஆனால் மனிதர்கள் சென்று
வருவதற்கு பல காரணங்கள் உண்டு.
தாம் இருக்கும் இடத்தில உணவு கிடைக்காத
பொழுது அவை வேறு இடத்திற்கு சென்று, பின்பு சில மாதங்களில் அவை தங்கள் சொந்த
இடத்திற்கு திரும்பும் இவைதான் வலசை போதல் என்று கூறுவார்கள். வலசை போவதை பற்றி
நாம் ஏற்கனவே பறவை நோக்குதல் பகுதி ஆறில் பார்த்துள்ளோம் பறவை நோக்குதல்-6
பவளக்கால் உள்ளான் |
பறவை இனத்தில், ஒரு சில இனப் பறவைகள் சில மாநிலத்திற்கு சென்று திரும்பும், ஒரு சில இன பறவைகள் வெளிநாட்டிற்கு சென்று திருப்பும், ஒரு சில இனப் பறவைகள் தன் மாநிலதிற்குள்ளேயே சுற்றும் மற்றும் ஒரு சில இன பறவைகள் எங்கும் செல்லாமல் ஒரே இடத்திலும்
வாழ்ந்து வரும்.
எந்த பறவை புத்தகங்கள் எடுத்து நீங்கள்
பார்த்தாலும் பறவைகள் பக்கத்தில் இவை எந்த இன பறவைகள் என்று குறியீட்டு மூலம்
தெரிவித்திருப்பார்கள். இந்த பறவை வலசை செல்லுமா செல்லாதா என்று நாம் தெரிந்து
கொள்ளமுடியும்.
குறியீடு :
R, r,
W, V, S, P
இந்த குறியீடுகளை பற்றி பார்ப்போம்.
R
|
Resident
|
நாட்டிற்குள், முழவதும்
காணப்படும் பறவை. இங்கேயே முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும். வெளிநாட்டிற்கு, வெளி
மாநிலத்திற்கு செல்லாது.
|
r
|
resident & Local Migration
|
நாட்டிற்குள்ளே ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும் பறவை மற்றும் இவற்றில்
சில வகை பறவைகள் உள் நாட்டிலேயே வலசை செல்லும்.
|
W
|
Winter Visitor
|
குளிர் காலத்தில் வலசை செல்லும் பறவைகள். (வெளிநாட்டு பறவைகள் குளிர்
காலத்தில் இந்தியா வருவதை சொல்லலாம்)
|
S
|
Summer Visitor
|
வெய்யில் காலத்தில் வலசை வரும் பறவைகள்.
|
V
|
Vagrant or irregular visitor
|
விபத்து போல் எப்பொழுதாவது வரும் பறவைகள்.
|
P
|
Passage
|
நம் ஊரை அல்லது நாட்டை கடந்து செல்லும் பறவைகள். இங்கு தங்காது.
|
இதை தவிர இன்னும் நுணுக்கமான குறியீடுகள் சில உண்டு. ஆரம்பத்தில் நாம்
இவற்றை தெரிந்து கொண்டு போக போக அவற்றையும் தெரிந்து கொள்வோம்.
உதாரணம் :
இந்தியா முழுவதும் காணப்படும் பறவை :
1. வீட்டு காக்கா (House Crow)
2. நாகணவாய் (Myna)
3. கதிர் குருவி (Ashy Prinia),
4. சின்னான் (Red
Vented Bulbul)
5. இரட்டை வால் குருவி (Black Drongo)
6. வெண் மார்பு மீன்கொத்தி (White
Throated Kingfisher)
7. பச்சைக்கிளி (Rose ringed parakeet)
8. புறா(Common
Pigeon)
9. கரும் பருந்து (Black
Kite)
10. உண்ணிக் கொக்கு (Cattle Egret)
இந்தியாவில் சில இடங்களில் மட்டும் இருக்கும் மற்றும் இதில்
சில வகை பறவைகள் உள்ளேயே வலசை செல்லும் :
1.Indian Pita – Local Migration
2. செந்தலை வல்லுறு (Common Kestral) – Local Migration
3.சாம்பல் நாரை (Grey
Heron) – Local Migration
4. Comb Duck – local Migrant
etc….
வலசை செல்லாத பறவைகள்:
மஞ்சள் தொண்டை சின்னான் |
1. மஞ்சள் தொண்டை சின்னான் (Yellow Throated Bulbul)
2. வானம்பாடி (Jerdon’s
Bushlark)
3. இருவாச்சி (Great
Hornbill)
4. கானமயில் (Great Indian Bustard)
etc….
குளிர்காலத்தில் வலசை வரும் பறவைகள் :
1.பட்டை தலை வாத்து (Bar
Headed Goose)
2. தட்டைவாயன் வாத்து(Northern Shoveler)
3. ஊசி வால் வாத்து (Northern Pintail)
4. செங்கால் நாரை (White
Stork)
5. உள்ளான் (Common
Sandpiper) etc……..
வெய்யில் காலத்தில் வலசை வரும் பறவைகள் :
1 Eurasian Nightjar
2. Japanese Sparrowhawk
3. Streaked Shearwater
விபத்துபோல் எப்பொழுதாவது வரும் பறவைகள் :
1.Artic Tern
2. Artic Loon
3. Ashy Minivet
4.White
Backed Thrush
5. White Rumped Snow finch
மாநிலத்தை கடந்து செல்லும் பறவை :
Amur Falcon
(நாகலாந்தில்
மட்டும் தங்கும் அதன் பிறகு ஒரே பாய்ச்சலில் நம் தென் மாநிலத்தை கடந்து தென்
ஆப்ரிக்காவிற்கு செல்லும்.)
ஒவ்வொரு புத்தகத்தில் எந்த வித குறியீடு
பயன்படுத்துகிறார்கள் என்பதை அதன் தொடக்க பக்கத்திலேயே கொடுத்திருப்பார்கள். ஒரு
சில புத்தகத்தில் வண்ணத்தை கொண்டு விவரிப்பார்கள். அதனால் ஒவ்வொரு புத்தகத்திலும்
குறியீடு தன்மை மாறுபடலாம். மேலே பொதுவான குறியீடு மட்டும் கொண்டுதுள்ளேன்
செயற்கையாக மறைதல் (Artificial
Hiding)
பறவைகளை நாம் அருகில் சென்று பார்க்க முடியுமா?
முடியாது அந்தளவுக்கு மிகுந்த விழிப்புணர்வுடன் எந்நேரமும் இருக்கும். தொலைநோக்கி
கொண்டே பார்க்க முடியும் அப்போ அருகில் சென்று பார்க்க வழி இல்லையா என்றால் அதற்கு
பார்க்கமுடியும் என்ற பதிலும் உண்டு.
செயற்கையாக மறைந்து கொண்டு பறவைகளை அருகில்
பார்க்க முடியும். இந்தியாவில் இந்த முறை பரவலாக பயன்படுத்தி பார்கிறார்களா என்று
தெரியவில்லை காரணம் பறவை நோக்குதல் என்பது இந்தியாவில் இப்பொழுதுதான் தெரிய
ஆரம்பித்துள்ளது நானும் இதுவரை முயற்சித்து பார்க்கவில்லை செய்ய வேண்டும் என்ற
எண்ணமும் உள்ளது.
அதென்னே செயற்கையாக மறைதல் ?
இராணுவத்தில் வீரர்கள் தங்கள் உடம்பில் வலைபோல்
போர்த்திக்கொண்டு அதில் இலை, தழைகளை கொண்டு மூடி சிறுது சிறுதாக முன்னேறுவார்கள்- காரணம் பார்ப்பதற்கு மனிதர்கள் இல்லை ஏதே மரம், செடி என்று எதிரி
கண்களுக்கு தெரிவதற்காக இது போல் செயல்படுவார்கள்.
இதைதான் செயற்கையாக மறைதல் ஆகும் நாமும் நம்மை சுற்றி வலை கொண்டு அமைத்து அதில் இலை,
தழைகளை போர்த்திவிட்டால் பறவைகள் கண்களுக்கு செடி என்று நினைத்து நம் அருகில்
வரும். வெகு அருகில் பறவைகளை பார்ப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
இவற்றை நீங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில்
முயற்சித்து பார்க்கலாம். சென்னை என்பதால் இங்கு எங்கே தோட்டம் அதனால் ஊருக்கு
செல்லும்பொழுது நானும் முயற்சி செய்துவிட்டு எந்த அளவுக்கு பறவைகள் நம் அருகில்
வருகிறது என்று பிறகு தெரிவிக்கிறேன்.
-செழியன்
Pictures- Mr. Masilamani
Been a long time since you wrote last. Nice informative article. Thanks and kind regards,chandru
ReplyDeleteYes sir. thank you very much for reading the blog continuously .. once again thank you sir
ReplyDeleteThank you for your Valuable Points ... I have just started the bird watching but this article is like a beginner guide for bird Watchers ... Keep up your good work .
ReplyDelete