பறவைகள் தொடர்பாக
புத்தகங்கள் சிறிது சிறிதாக அதிகரித்து வரத்தொடங்கி உள்ளது. அப்படி வந்துள்ள ஒரு
புது புத்தகம் “தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்”- ஆசிரியர் ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார். தமிழகதில்
உள்ள அணைத்து பறவை காப்பிடங்கள்(சரணாலயம்) பற்றி மிக விரிவாக தெரிந்துகொள்ள வந்திருக்கும்
முதல் புத்தகம் என்று சொல்லலாம்.
Thursday, 26 April 2018
Tuesday, 10 April 2018
Azeez உடன் சந்திப்பு
அணிவகுப்பு |
காலை ஆறு மணிக்கு மேல்
எப்பொழுது வேண்டுமென்றாலும் வாருங்கள் என்று சொன்னார். இன்று காலை ஏழு மணிக்கு
அவர் வீட்டின் முன்பு சென்றபொழுது வெளியே நின்று கொண்டிருந்தார். சிட்டுக்
குருவிக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அவற்றுக்கு தேவையான தினையை ஒரு
கிண்ணத்தில் வைத்துவிட்டு அருகில் வந்தவரிடம், எவ்வளவு வருடங்களாக இங்கு சிட்டுக் குருவிகளை பார்த்து வருகிறிர்கள்
என்று கேட்டதற்கு பத்து வருடங்களாக என்ற அவரின் பதிலால், நிறைய அனுபவம் அவரிடம் இருக்கும்
என்று தோன்றியது.
பட்டினப்பாக்கம்,
கடற்கரையை ஒட்டிய அடுக்க மாடி(Housing Board) குடியிருப்பில்
முதல் மாடியில் இருக்கும் அவர் வீட்டின் வரண்டாவில் ஒரு குருவி கூண்டை
வைத்துள்ளார் அங்கு நிறைய சிட்டுக் குருவிகள் வந்து அமர்ந்து தானியங்களை
சாப்பிடுவதை பார்த்து கொண்டே பேசினோம்.
இயக்குனர் ஹிட்ச்காக்கின் படமான “THE CROW” படத்தில் எப்படி வீட்டை சுற்றி காகங்கள் இருக்குமோ அதே போல் இவர் வீட்டை சுற்றி சிட்டுக் குருவிகளே.
இயக்குனர் ஹிட்ச்காக்கின் படமான “THE CROW” படத்தில் எப்படி வீட்டை சுற்றி காகங்கள் இருக்குமோ அதே போல் இவர் வீட்டை சுற்றி சிட்டுக் குருவிகளே.
Sunday, 1 April 2018
பறவை நோக்குதல்- 14 (Famous Bird watchers)
எவ்வளவு நாள்தான் பறவைகளை பற்றியே பேசி
கொண்டிருப்பது. அதனால் இந்த கட்டுரையில் பறவையாலர்களை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
நமக்கு பறவை பார்ப்பது ஒரு வித
பொழுதுபோக்கு என்று கற்றுகொடுத்தது ஆங்கிலேயர்களாக இருக்கலாம். ஆனால் அதற்கு
முன்பே நம் முன்னோர்கள் மிக நுணுக்கமாக பறவையை பார்த்து உள்ளனர் என்பதை முண்டக்கன்னி
அம்மன் மேல் சத்தியம் செய்யலாம்.
பார்த்தது மட்டும் அல்லாமால் ஐம்பதுக்கும்
மேற்பட்ட பறவைகளை பாடல்கள் வழியாக பதிவும் செய்து வைத்து உள்ளார்கள்.
பள்ளி பாடபுத்தகத்தில் நாம் படித்திருப்போம் ஆனால் நினைவில்இருப்பதில்லை. ஒவ்வொரு பறவைக்கும் வட்டார பெயர் என்று ஒன்று உண்டு. அந்த அந்த பகுதிகளில் செல்லும்பொழுது தெரிந்து கொள்ளாலாம்.
Subscribe to:
Posts (Atom)