எவ்வளவு நாள்தான் பறவைகளை பற்றியே பேசி
கொண்டிருப்பது. அதனால் இந்த கட்டுரையில் பறவையாலர்களை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
நமக்கு பறவை பார்ப்பது ஒரு வித
பொழுதுபோக்கு என்று கற்றுகொடுத்தது ஆங்கிலேயர்களாக இருக்கலாம். ஆனால் அதற்கு
முன்பே நம் முன்னோர்கள் மிக நுணுக்கமாக பறவையை பார்த்து உள்ளனர் என்பதை முண்டக்கன்னி
அம்மன் மேல் சத்தியம் செய்யலாம்.
பார்த்தது மட்டும் அல்லாமால் ஐம்பதுக்கும்
மேற்பட்ட பறவைகளை பாடல்கள் வழியாக பதிவும் செய்து வைத்து உள்ளார்கள்.
பள்ளி பாடபுத்தகத்தில் நாம் படித்திருப்போம் ஆனால் நினைவில்இருப்பதில்லை. ஒவ்வொரு பறவைக்கும் வட்டார பெயர் என்று ஒன்று உண்டு. அந்த அந்த பகுதிகளில் செல்லும்பொழுது தெரிந்து கொள்ளாலாம்.