பறவைகளை பார்க்க சரணாலயங்கள், நீர் நிலைகள்
நோக்கி, அதேபோல் புலி பார்க்க, முதுமலை, பந்திப்பூர் போன்ற இடங்களுக்கும் செல்ல
வேண்டும். ஆனால் பூச்சிகளை நம் இடங்களுக்கே வரவைத்து பார்க்கலாம். அப்படி ஒரு நிகழ்வு மெட்ராஸ் இயற்கை சங்கம்(Madras Naturalist’ Society) ஏற்பாடு செய்திருந்த
“ விட்டில் பூச்சி பார்த்தல்” கள அமர்வுக்கு(Moth- Field Session) கலந்துகொண்டதில் நிறைய
விஷங்களை தெரிந்துகொண்டேன்.
பறவைகள் போல் பூச்சிகள் அனைவரையும் கவருவதில்லை.
ஆனால் பூச்சிகளை நிறைய பேர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பறவை விலங்குகள் போன்றே
பூச்சிகளையும் கவனிக்க வேண்டும் என்று அழுத்தி சொல்கிறார்கள். ஆரம்பத்தில் நானும்
பூச்சிகள் பக்கம் கவனம் செலுத்தியதில்லை. காரணம் மற்றவர்களுக்கு என்ன காரணமோ அதே
தான் எனக்கும்.