பறவைகளை பார்க்க சரணாலயங்கள், நீர் நிலைகள்
நோக்கி, அதேபோல் புலி பார்க்க, முதுமலை, பந்திப்பூர் போன்ற இடங்களுக்கும் செல்ல
வேண்டும். ஆனால் பூச்சிகளை நம் இடங்களுக்கே வரவைத்து பார்க்கலாம். அப்படி ஒரு நிகழ்வு மெட்ராஸ் இயற்கை சங்கம்(Madras Naturalist’ Society) ஏற்பாடு செய்திருந்த
“ விட்டில் பூச்சி பார்த்தல்” கள அமர்வுக்கு(Moth- Field Session) கலந்துகொண்டதில் நிறைய
விஷங்களை தெரிந்துகொண்டேன்.
பறவைகள் போல் பூச்சிகள் அனைவரையும் கவருவதில்லை.
ஆனால் பூச்சிகளை நிறைய பேர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். பறவை விலங்குகள் போன்றே
பூச்சிகளையும் கவனிக்க வேண்டும் என்று அழுத்தி சொல்கிறார்கள். ஆரம்பத்தில் நானும்
பூச்சிகள் பக்கம் கவனம் செலுத்தியதில்லை. காரணம் மற்றவர்களுக்கு என்ன காரணமோ அதே
தான் எனக்கும்.
ஒரு முறை பறவைகள் பார்க்க சென்று இருந்தபொழுது, அப்பாவுடன், ஐந்தாம்
வகுப்பு மகனும் வந்திருந்தார். அப்பா பறவைகளை பார்த்து
சொல்லி கொண்டே சென்றார். அதை மகன்
கவனிக்கவேயில்லை. முழு கவனமும் அங்கு காணப்படும் பூச்சிகள் மேல்தான்
சிறுவனுக்கு இருந்தது. தேடி, தேடி சென்று பூச்சிகளை பார்த்தான். பார்த்தது மட்டும்
இல்லாமல் கையில் பிடித்து அதை பற்றி கேட்டு மீண்டும் பறக்க விடுவதும் என்று,
தொடர்ந்து சிறுவனின் செயல் இருந்தது.
சிறுவனின் அப்பாவும் பூச்சிகள் பற்றி, தொடர்ந்து அவனுடைய
கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே இருந்ததை பார்த்த பிறகு தெரிந்து கொண்டேன் பூச்சிகளையும்
கவனிக்க நிறைய பேர் இருக்கிறார்கள் என்று.
விட்டில் பூச்சிக்கள் கள அமர்வு, பெசன்ட் நகரில் மாலை 6.30 முதல் 8.30 மணி வரை என்பதால், மாலை 5.30க்கே சென்றுவிட்டேன். அதற்கு முன்பே
விஜயகுமார் சார்(Secretary-MNS) வந்துவிட்டார். அடுத்து பத்து நிமிடம்
வரை புலி சரணாலயத்தில், புலியை பார்த்த விதத்தை அருமையாக விவரித்து சொன்னார்.
உதாரணம்: சுந்தர்பன் காட்டில்
உள்ள ஒரு வயதான புலி, நீர் நிலை அருகில் படுத்துக்கொண்டிருந்தது. வண்டியை அங்கேயே
நிறுத்தி விட்டார்கள். அந்த புலியின் அசைவுகளில் எந்த விதமான விளைவுகள்
சராணாலயத்தில் ஏற்படுகிறது என்று மூன்று
மணிநேரம் நுணுக்கமாக பார்த்து உள்ளனர். படுத்து இருக்கும் புலி
தலையை நிமிர்த்தி பார்க்கும்பொழுதெல்லாம், நீரில் இருக்கும் முதலை முதல் அந்த கரையில்
இருந்த மான்கள் வரை சிலையாக நின்றுவிடுகிறது. அந்த பக்கமாக வந்த
மயில், புலியையே பார்த்த உடன் அசையாமல் நின்று விட்டது. கரண்டிவாயன் பறவையும்(Spoon bill) அப்படியே செய்தன
என்று நுணுக்கமாக விவரித்து
சொன்னார்.
இதுபோலவே நாம் பறவை, விலங்குகளை பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் எவ்வளவு
வருடங்கள் ஆனாலும் அந்த உயிரினம் நம் நினைவில் இருக்கும். வேக வேகமாக பார்ப்பது, வீட்டில் forward செய்து
சினிமா பார்ப்பது போல் ஆகிவிடும்.
நேரம் ஆக ஆக நிறைய பேர் விட்டில் பூச்சி கள
அமர்வுக்கு வர ஆரம்பித்துவிட்டனர். மற்றும் மாலை நேரம்
என்பதால் பறவைகளும் அதன் இருப்பிடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. விட்டில் பூச்சிகள்
வருவதற்கு, சூரிய வெளிச்சம்
மறைந்து இருள் வரவேண்டும் அதனுடன் செயற்கை வெளிச்சமும் வேண்டும்,என்பதால், செயற்கை
வெளிச்சத்திற்க்கான வேலைகளை செய்துகொண்டிருந்தோம்.
இரண்டு மரத்திற்கு நடுவில், கயிறு கொண்டு, வெள்ளை துணியை கட்டி(Screen), அதன்
நடுவில் செயற்கை வெளிச்சத்திற்கான, வெள்ளை நிற மின் விளக்கை
தொங்கவிட்டோம். இப்பொழுது மாலை
நகர்ந்து, இருளுக்கு வழிவிட்டு கொண்டிருந்தது.
சுற்றி இருந்த மரங்களில் பறவைகள் வர ஆரம்பித்துவிட்டன. அங்கு இருந்த ஒரு
மரத்தில் காகம் கூடு கட்டியிருந்தது. ஆனால் முட்டைகள்
இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. காகம், சுற்றி இருக்கும்
குச்சிகளை கொண்டுவந்து, குறுக்கும்-நெடுக்கமாக (கிராமத்து மனிதர்கள், தங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து சுவர்
எழுப்பவது போல்) கூடு கட்டிவிடுகிறது.
ஆறு தவிட்டுக் குருவிகள் கீச்-கீச் என்று குரல்
கொடுத்து கொண்டே இருந்தது. குறைந்த இருளில்
நிமிர்ந்து பார்த்தால், மரத்தில் வந்து தஞ்சமடைந்துவிட்டது. இருள் முழுவதும்
வராததால் குரல் கொடுத்து கொண்டே இருந்தது. வழக்கமாக வந்து தங்கும்
இடம் என்று நினைக்கிறேன்.
அதிகம் இல்லையென்றாலும் சில வண்ணத்துப்பூச்சிகள்
பறந்து கொண்டிருந்தது. அங்கு வந்தவர்களில் பலர், செடி-கொடிகளை சுற்றி பறந்து
கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளை படம் எடுத்து கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது இருள் முழுவதும் வந்துவிட்டது. தவிட்டுக் குருவிகளும்
பாய், தலையணை போட்டு தூங்க ஆர்மபித்துவிட்டது. இருள் வந்ததால், மின்
விளக்கு தன் பணியை செய்ய
ஆரம்பித்துவிட்டது. நாங்கள் திரையை விட்டு சிறிது தூரம் சென்று நின்று
கொண்டோம். விட்டில் பூச்சிகள் வருகிறதா என்று அனைவரும் பார்த்து
கொண்டிருந்தோம்.
டாக்டர் கீதா ஐயர்:
டாக்டர் கீதா ஐயர்(Moth
Field Expert) விட்டில் பூச்சிகள் பற்றி மிக ஆழமாக தெரிந்தவர். நாங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் உடனே
அவரிடம் இருந்து பதில் வருகிறது.
பறவைகள் போல் இல்லை பூச்சிகள். உருவில் மிக மிக சிறியவை. பறவைகளில் அதன் உருவத்தை
பார்த்து, நிறத்தை வைத்து என்ன பறவை என்று சொல்லிவிடலாம். ஆனால் விட்டில்
பூச்சிகள், பார்ப்பதற்கு ஒரு நிறம் போலவே, அதாவது மங்கிய நிறத்திலேயே உள்ளது. கண்டுபிடிப்பது சிறிது
சிரமமே.
எனக்கு எந்த
பூச்சி பற்றி அதிகம் தெரியாது. அதனால் அங்கு சொல்லப்படும் அனைத்தும் புதியது.
என்னைப் போலவே பலர் இருந்தது, துணைக்கு ஆள்
இருக்கிறார்கள் என்று நினைப்பில் வலம்
வந்து கொண்டிருந்தேன்.
செயற்கை வெளிச்சத்தில், சிறு விட்டில் பூச்சிகள்
வர ஆரம்பித்தது. அவற்றை பற்றி டாக்டர்.கீதா ஐயர் விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். அருகில் இருந்தால்
பூச்சிகள் வராது அதனால் தூரமாக வந்து விடுங்கள் என்று டாக்டர் சொன்னதை கேட்டு
அனைவரும் தூரமாக வந்து விட்டோம்.
பூச்சிகள் அதிகம் வந்த பின்பு அருகில் சென்று
பார்ப்போம். நாடு, நடுவே பூச்சிகள் பற்றி
பேச்சுக்கள் என்று இரண்டு மணி நேரம் சென்றது. பூச்சிகள்தானே என்று
சாதாரணமாக நினைத்து விடமுடியாது அளவுக்கு
நிறைய காரணம் உண்டு. இவற்றை உற்று நோக்கும்பொழுது அதை பற்றி தேடி
படிக்கும்பொழுது நிறைய விஷயங்கள் தெரியவந்தது.
பூச்சி
வகைகள் :
பட்டாம்பூச்சி-(Butterfly)
வண்டு-(Beetle)
விட்டில் பூச்சி-(Moth)
குளவி-(Wasp)
ஈ-(Fly)
தட்டான் பூச்சி-(Dragonfly)
பக்-(Bug)
வெட்டுக்கிளி-(Grasshopper)
கரப்பான்ச்சி-(Cockroach)
இடையனப்பூச்சி-(Mantis)
செடிப்பேன்-(Archnid)
மேலே உள்ளதை தவிர இன்னும் நிறைய பூச்சி வகைகள்
உண்டு.
இதில் நிறைய வகைகள் தினமும் நாம் பார்த்து
கொண்டிருக்கும் பூச்சிகளே ஆகும். ஆனால் ஒவ்வொரு முறையும்
சிறிது கூட கவனம் செலுத்தாமல் விலகி செல்வோம் அல்லது அவற்றை
அடித்துவிடுவோம்.
குழந்தைகள், பறவைகளைவிட பூச்சிகளை நோக்கி அதிகம்
கவனம் செலுத்துவதை பார்த்துள்ளேன். நாம் பூச்சிகளை
அடிப்பதால் குழந்தைகளும் அவற்றை அடிக்க கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பூச்சிகளை
நோக்குபவர்கள், பூச்சிகளை நிறைய நேசிக்கிறார்கள், அதனுடன் பேசுகிறார்கள்,
தினமும் ஏதாவது ஒரு பூச்சியை பார்த்துவிடுகிறார்கள், அதன் அருகில் செல்கிறார்கள். பூச்சிகளை அடிப்பது என்ற
பேச்சே அவர்கள் வாழ்வில் இல்லை. பூச்சிகளை அடிப்பது
தங்களை அடிப்பதாகவே நினைக்கிறார்கள்.
சிலர் தங்கள் பெயருடன் பூச்சி என்று சேர்த்து
அழைப்பதை விரும்புகிறார்கள். பூச்சிகள் ஒரு அருவருப்பண உயிரினம் என்பதே
அவர்களுக்கு கிடையாது. தங்கள் குழந்தைகள்
போல் பூச்சிகள் அவர்கள் வாழ்வில்
இணைந்துள்ளது.
நாமும் பூச்சிகளை
கவனிப்போம்!
-செழியன்.ஜா
கட்டுரைக்கு நன்றிகள் பல. அமெரிக்காவிலும் பூச்சி ரசிகர்கள்- ஆவலர்கள் இருப்பதைத் தெரிந்துக் கொண்டேன். ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் இறுதி வாரத்தைப் பூச்சிகளூக்காக ஒதுக்கியுள்ளனர் இதில் இந்தியர்களும் பங்கு கொள்கின்றனர் என்று படித்தேன். சில விட்டில் பூச்சிகள் பழங்களை நாசப்படுத்துவதால் அவைகளை பெரும்வபான்மையோர் விரும்புவதில்லை. ஒரு கேள்வி. செடிப்பேனை விட்டிலோடு சேர்க்கலாமா? இன்று இரவு I will turn on the light!
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி மேடம். அமெரிக்காவில் ஜூலை மாதத்தை ஏன் பூச்சிகளுக்காக ஒதுக்கியுள்ளனர் என்பதற்கு ஏதாவது காரணம் உள்ளதா?
Deleteசெடிப்பேன், விட்டில் பூச்சியை சேர்ந்தவை இல்லை. பூச்சிகளுக்கு ஆறுகால்கள் உண்டு, செடிப்பேன்களுக்கு எட்டு காலகள் உடையவை. செடிப்பேன் வகைகள்- தேள்,சிலந்தி,தெள்ளுபூச்சி, சிலந்திபேன் போன்றவை ஆகும்.
நிச்சமாகத் தெரியாது!
Delete"National Moth Week originated from very humble beginnings at local community moth nights held each summer in East Brunswick, New Jersey. Following on the success of those events, we decided to try and expand the reach of these nocturnal explorations of moths and biodiversity. National Moth Week was the result, founded in 2012 by the Friends of the East Brunswick (N.J.) Environmental Commission that we co-founded. The Friends is a nonprofit organization dedicated to environmental education and conservation. National Moth Week has become one of the most widespread citizen science projects in the world. It is coordinated by an all-volunteer team in New Jersey, New York, Ecuador, and Belize. For the past four years, public and private mothing events have been held annually in all 50 states and 66 different countries. The NMW website features an events map showing the locations of events around the world".
For more information about National Moth Week, visit the website at nationalmothweek.org, or write to info@nationalmothweek.org.